அனிருத் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் கத்தி. இப்படத்தில் இவரின் இசை மிகவும் பேசப்பட்டது மட்டுமில்லாமல் பல விருதுகளை இவருக்கு பெற்று தந்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு முன்னணி நாளிதழில் இவரிடம் பீப் சாங் குறித்து கேட்டனர், அதற்கு அவர் ‘எனக்கும் இந்த பாடலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என பலமுறை நான் கூறிவிட்டேன்.
கனடா டூர் முடிந்து இங்கு வந்து இறங்கிய பிறகு தான் எனக்கே தெரியும் என் மேல் இத்தனை வழக்கு இருக்கின்றது என்று.
முதலில் கொலைவெறி பாடலுக்கும் வழக்கு தொடர்ந்தார்கள், பிறகு கத்தி படத்திற்கு கல் எறிந்தார்கள், தற்போது இது, முன்பு தான் கஷ்டமாக இருந்தது, தற்போது இதெல்லாம் பெரிய விஷயமாகவே தெரியவில்லை’ என கூறியுள்ளார்.
மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு அனிருத்தின்
‘அவலுக்கென்ன’ ஆல்பம் வரும் 14ம் தேதி வரவிருக்கின்றது.
Tags:
Beep song
,
Cinema
,
அனிருத்
,
கத்தி
,
கொலைவெறி
,
சினிமா