நான்கு பாட்டுக்கு ஆடினோமா, 2 லிப் டு லிப் கிஸ் கொடுத்து கைநிறைய சம்பளம் வாங்கினோமா என்று சில ஹீரோயின்கள் கஷ்டமில்லாமல் பையை நிரப்பினாலும் கதாபாத்திரத்துக்காக தங்களை வருத்திக்கொண்டு பயிற்சி எடுக்கும் நடிகைகளும் உள்ளனர். ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதற்காக அனுஷ்கா, தமன்னா, நீது சந்திரா, பூஜாகுமார் போன்றவர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.
அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. சல்மான் கானுடன் ‘சுல்தான்’ இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
இதற்காக மல்யுத்தம் கற்க வேண்டி இருந்தது. ஆஜானபாகுவான தோற்றம் இல்லாமல் பூமாதிரி உடற்தோற்றம் கொண்டிருந்தாலும் மல்யுத்த வீராங்கனையாக நடிக்க பயிற்சி பெற விரும்பினார்.
இதற்காக தினமும் அவர் மைதானத்துக்கு சென்று பயிற்சி பெற்று வருகிறார். பயிற்சியாளர் அவரை தூக்கி வீசி பந்தாடுகிறார்.
படத்தில் அனுஷ்கா யாரை தூக்கி வீசப்போகிறாரோ என்று பயிற்சிக்கு வந்தவர்கள் முணுமுணுத்தனர்.
Tags:
Cinema
,
அனுஷ்கா சர்மா
,
சல்மான்கான்
,
சினிமா
,
தமன்னா
,
நீது சந்திரா
,
பூஜாகுமார்