மலையாளத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் “புதிய நியமம்” படத்திற்கு தற்போதே நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் இரண்டு பாலிவுட் நடிகைகள். ஏ.கே. சாஜன் இயக்கத்தில் மம்மூட்டி, நயன்தார நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரில்லர் படம் புதிய நியமம்.
மம்மூட்டி, வழக்குரைஞராகவும், நயன்தாரா குடும்பப்பெண்ணாகவும் நடித்திருக்கிறார்கள். நயன்தாரா தனது சொந்த குரலிலேயே பேசி நடித்துள்ளார். இப்படத்தின் கதையினைக் கேட்ட வித்யா பாலன் மற்றும் கங்கனா ரனாவத் ஆகிய இருவரும் இப்படத்தில் நடிக்க தங்களது விருப்பத்தைத் தெரிவித்திருப்பதாக இயக்குநர் கூறியுள்ளார்.
விரைவில் இப்படத்தை மும்பையில், இருவருக்கும் திரையிட்டுக் காண்பிக்க உள்ளதாகவும், இவர்கள் இருவரில் நிச்சயம் யாரேனும் ஒருவர், இப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கலாம் என்றும் இயக்குநர் சாஜன் கூறியுள்ளார். இதற்கு முன்பு நயன்தாரா நடிப்பில் பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் அவரது நடிப்பு பாராட்டப்பட்ட நிலையில் இந்தப் பாத்திரம் இன்னும் வலிமையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
Tags:
Cinema
,
சினிமா
,
நயன்தாரா
,
புதிய நியமம்
,
மம்முட்டி