நயன்தாரா மீது கோபத்தில் மற்ற நடிகைகள்- ஏன்???

1:06 AM |
நயன்தாரா எப்போதும் அவர் உண்டு வேலை உண்டு என இருப்பவர். எந்த நடிகைகளை பற்றியும் குறை பேசாதவர், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் கால்ஷிட்டை வாங்குவதற்கு முன் நயன்தாரா கால்ஷிட்டை வாங்குகள் என்று தான் கூறுகிறார்களாம்.

அந்த அளவிற்கு வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் இவர் தான் ஹீரோயின், இதை தொடர்ந்து மம்முட்டி நடித்த பாஸ்கர் தி ராஸ்கல் படம் தமிழில் எடுக்கப்படவுள்ளது.

 இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகின்றது, அப்படி ரீமேக் செய்தால் இதில் ஹீரோயின் நயன்தாரா தானாம், சூப்பர் ஸ்டார் முதல் வளர்ந்து வரும் ஸ்டார் வரை அனைவருக்கும் நயன்தாராவே ஜோடியாக நடிப்பது பல நடிகைகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

மேலும் வாசிக்க…

நயன்தாரா வசூல் சாதனை- ஆச்சரியத்தில் திரையுலகம்..!!

1:40 AM |
நயன்தாரா தான் தற்போது தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை. இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடித்த புதிய நியமம் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.

இப்படம் வெளிவந்த இரண்டு நாட்களில் கேரளாவில் மட்டும் ரூ 3 கோடி வரை வசூல் செய்து விட்டதாம், மேலும், இதில் நயன்தாராவின் நடிப்பை தான் பலரும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

இதுமட்டுமின்றி இப்படத்திற்கு இவரால் தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது, இதன் மூலம் நயன்தாராவின் ஹிட் ஃபார்முலா இந்த வருடமும் தொடங்கிவிட்டது.
மேலும் வாசிக்க…

அஜித்தை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த மம்முட்டி

2:33 AM |
பிரபல சி.என்.என் – ஐ.பி.என் தொலைக்காட்சியில் வருடந்தோறும் நடத்தப்படும் சிறந்த தென்னிந்திய நடிகருக்கான வாக்கெடுப்பில் இந்த முறை மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டி முதலிடம் பிடித்துள்ளார்.

அவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தில அஜித்தும் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் முறையே பிரபாஸ், கமல் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த பட்டியலில் துல்கர் சல்மானுக்கு அடுத்த இடத்தில்தான் விக்ரம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

நயன்தாரா கேரக்டருக்கு பாலிவுட் நடிகைகள் போட்டி..!!

12:19 AM |
மலையாளத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் “புதிய நியமம்” படத்திற்கு தற்போதே நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் இரண்டு பாலிவுட் நடிகைகள். ஏ.கே. சாஜன் இயக்கத்தில் மம்மூட்டி, நயன்தார நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரில்லர் படம் புதிய நியமம்.

மம்மூட்டி, வழக்குரைஞராகவும், நயன்தாரா குடும்பப்பெண்ணாகவும் நடித்திருக்கிறார்கள். நயன்தாரா தனது சொந்த குரலிலேயே பேசி நடித்துள்ளார். இப்படத்தின் கதையினைக் கேட்ட வித்யா பாலன் மற்றும் கங்கனா ரனாவத் ஆகிய இருவரும் இப்படத்தில் நடிக்க தங்களது விருப்பத்தைத் தெரிவித்திருப்பதாக இயக்குநர் கூறியுள்ளார்.

விரைவில் இப்படத்தை மும்பையில், இருவருக்கும் திரையிட்டுக் காண்பிக்க உள்ளதாகவும், இவர்கள் இருவரில் நிச்சயம் யாரேனும் ஒருவர், இப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கலாம் என்றும் இயக்குநர் சாஜன் கூறியுள்ளார். இதற்கு முன்பு நயன்தாரா நடிப்பில் பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் அவரது நடிப்பு பாராட்டப்பட்ட நிலையில் இந்தப் பாத்திரம் இன்னும் வலிமையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

சென்சாரில் ஹாட்ரிக் அடித்த நயன்தாரா..!!

1:57 AM |
ஏ.கே.சாஜன் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள ‘புதிய நியமம்’ மலையாள திரைப்படம் வரும் பிப்ரவரி 5-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் நேற்று சென்சார் செயப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதன்மூலம் மாயா, நானும் ரௌடிதான் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நயன்தாரா படத்துக்கு தொடர்ச்சியாக யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
மேலும் வாசிக்க…

ஸ்டார்ஸ்களை மாற்றிக் கொள்ளும் அஜித், விஜய்..!!

7:59 PM |
மலையாள சூப்பர் ஸ்டார்கள் தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் தலைகாட்டி வருகின்றனர். 2000ம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்துடன், மம்முட்டி இணைந்து நடித்திருந்தார்.

விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் மோகன்லால் நடித்திருந்தார்.

தற்போது அப்படியே மாற்றி பரதன் இயக்கும் விஜய் 60வது படத்தில் மம்முட்டி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

அதேபோல் அஜித் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கப்போகும் படத்தில் மோகன்லால் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
மேலும் வாசிக்க…

மோகன்லாலை தொடர்ந்து மம்முட்டியுடன் இணையும் விஜய்..!!

9:28 PM |
பரதன் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் விஜய் 61 படத்தை ‘ஜெயம்’ ராஜா இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘இளையதளபதி’ விஜய்க்கு தமிழகத்தை போலவே கேரளாவிலும் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. ஜில்லா படத்தில் இவர் ஏற்கனவே மோகன்லாலுடன் இணைந்து நடித்துவிட்டார். எனவே அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பு தற்போது விஜய், மம்முட்டி இணையும் படத்துக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com