ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கபாலி படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். அதேபோல், விஜய் நடித்து வரும்தெறி படத்தையும் கலைப்புலி தாணுவே தயாரித்து வருகிறார். இவ்விரு படங்களும் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் மலேசியா வெளியீட்டு உரிமை விற்றுத் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இரண்டு படங்களுக்கும் சேர்த்து ஒரு பெரிய தொகைக்கு இப்படத்தின் வெளியீட்டு உரிமையை புதிய நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் படங்களுக்கு மலேசியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிலும், ரஜினி, விஜய் படங்கள் என்றால் அங்கு கூடுதல் ரசிகர் வட்டாரம் உள்ளது. அதனாலேயே இந்த இரு படங்களின் வெளியீட்டு உரிமை அங்கு பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கபாலி படத்தை அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்குகிறார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.தெறி படத்தை ராஜாராணி இயக்குனர் அட்லி இயக்குகிறார்.
சமந்தா, பிரபு, இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி-வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவ்விரு படங்களும் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
Cinema
,
Kabali first look
,
theri teaser
,
கபாலி
,
சினிமா
,
தெறி
,
ரஜினி