Kabali - Official Teaser Superstar Rajinikanth

12:33 AM |
 இணையத்தில் பரவி வரும் கபாலி திரைப்படத்தின் டீசர்..!!

மேலும் செய்திகள் 

'GV பிரகாஷ் 36 டேக் வாங்கிய உதட்டு முத்தக் காட்சி இதுதான்! வீடியோ 

0.57-0.59 செக்கன் காட்சியில் கண் தெரியாத குழந்தையை கோப்பையால் தள்ளிய சுருதி

விஜய், அஜித் யார் முதல் சாய்ஸ்? கீர்த்தி சுரேஷ் அதிரடி பதில்..!!

மீண்டும் சர்ச்சையில் சிக்கியது விஜய் படம்..!!






மேலும் வாசிக்க…

மலேசியாவில் பெரிய தொகைக்கு விற்பனையான கபாலி, தெறி படங்களின் உரிமம்..!!

12:26 AM |
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கபாலி படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். அதேபோல், விஜய் நடித்து வரும்தெறி படத்தையும் கலைப்புலி தாணுவே தயாரித்து வருகிறார். இவ்விரு படங்களும் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் மலேசியா வெளியீட்டு உரிமை விற்றுத் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இரண்டு படங்களுக்கும் சேர்த்து ஒரு பெரிய தொகைக்கு இப்படத்தின் வெளியீட்டு உரிமையை புதிய நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் படங்களுக்கு மலேசியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிலும், ரஜினி, விஜய் படங்கள் என்றால் அங்கு கூடுதல் ரசிகர் வட்டாரம் உள்ளது. அதனாலேயே இந்த இரு படங்களின் வெளியீட்டு உரிமை அங்கு பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கபாலி படத்தை அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்குகிறார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.தெறி படத்தை ராஜாராணி இயக்குனர் அட்லி இயக்குகிறார்.

சமந்தா, பிரபு, இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி-வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவ்விரு படங்களும் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

கபாலிக்கு ஃபோட்டோ ஷுட்..!!

8:27 PM |
சென்னையில் உள்ள ஏவி.எம். ஸ்டுடியோவில் காலை முதல் நடைபெற்று வரும் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜனி நடிக்கும் கபாலி படத்திற்கான ஃபோட்டோ ஷுட் நடைபெற்று வருகின்றன.
இதில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே உள்ளிட்ட படக்குழுவினர் பங்குபெறும் இந்த ஃபோட்டோ ஷுட் ரசிகர்களும், மற்றவர்களும் நுழைந்து விட முடியாதபடி சிறப்புப் பாதுகாப்புடன் நடந்து வருகிறது.

இன்று நடைபெறும் ஃபோட்டோ ஷுட்டில் எடுக்கப்படும் புகைப்படங்களுடன் கூடிய கபாலி படத்தின் முதல் பார்வை அடுத்த மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. முதல் படப்பிடிப்பு மலேசியாவில் செப்டம்பர் மாதம்  தொடக்க உள்ளது. ரஜினிகாந்த் வயதான தாதாவாக நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் ரஞ்சித், தான் பார்த்த, கேட்டுப் பழகிய சில விஷயங்களை வைத்தே இந்தக் கதையை உருவாக்கியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com