சென்ற வருடம் சகலகலா வல்லவன் படம் மூலம் தமிழில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன அஞ்சலிக்கு இந்த வருடம் ஆரம்பமே தெலுங்கு மெகா ஸ்டார் பாலகிருஷ்ணாவுடன் ’டிக்டேட்டர்’ படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழில் மாப்ள சிங்கம், இறைவி, தரமணி, மற்றும் பேரன்பு , என வரிசையாக படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன.
இந்நிலையில் அடுத்தப் படமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் சார்ந்த படமொன்றில் நடிக்கவிருக்கிறார். ஆக்ஷன் , த்ரில்லரான இப்படத்திற்கு காண்பது பொய் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஹீரோயின் முக்கியத்துவம் வாய்ந்த படம். இப்படம் குறித்து இயக்குநர் சர்வேஷ் கூறுகையில், அஞ்சலி இந்தப் படத்தில் ஏற்றுள்ள பாத்திரத்திற்கு சரியாகப் பொருந்துவார்.
இயற்கையிலேயே அவருக்கு எளிமையான , எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் திறன் இருக்கிறது. நான் கதையைச் சொன்னதும் உடனே ஒப்புக்கொண்டார் அஞ்சலி. ஜனவரி 20 முதல் படம் துவங்கப்பட உள்ளது. கண்டிப்பாக இந்தப் படம் பெண்களுக்கான கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் எனவும் கூறியுள்ளார் சர்வேஷ். கற்றது தமிழ், அங்காடித் தெரு உள்ளிட்டப் படங்களில் அஞ்சலியின் இயற்கையான நடிப்பு பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:
Anjali News
,
Cinema
,
அஞ்சலி
,
இறைவி
,
சகலகலா வல்லவன்
,
சினிமா