எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களைத் தொடர்ந்து துரைசெந்தில்குமார் இயக்கும் புதியபடமான கொடி படத்தில் தனுஷ் இரட்டைவேடங்களில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என்றார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளிப்போய் இப்போது பொங்கலுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு தள்ளிப்போக தங்கமகன் வெளியீடு, சென்னை மழை வெள்ளம் ஆகியனவற்றைக் காரணமாகச் சொன்னார்கள். ஆனால் அவற்றைத் தாண்டி இன்னொரு சிக்கலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்று சொல்லியிருந்தார். அதில்தான் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
தனுஷின் கொடி படத்திற்கு இசையமைக்க முடியாது என்று அனிருத் சொல்லிவிட்டாராம். நானும்ரவுடிதான் தங்கமகன் ஆகிய படங்களில் பணியாற்றிய நேரத்திலேயே தனுஷூக்கும் அனிருத்துக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் தம்மை அறிமுகப்படுத்தியவர் என்கிற காரணத்தால் அனிருத் பொறுத்துக்கொண்டாராம்.
கொடி படவேலைகளில் பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட கருத்துவேறுபாடு அதிகரித்துவிட்டதெனச் சொல்லப்படுகிறது. இதனால் அனிருத் படத்திலிருந்து விலகும் முடிவை எடுத்துவிட்டதாகவும் அவரைச் சமாதானப்படுத்தி படத்தில் பணியாற்ற வைக்கும் வேலைகளில் இருவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களும் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
என்ன நடக்குமோ?
Tags:
Cinema
,
அனிருத்- தனுஷ் கூட்டணி முறிந்ததா
,
எதிர்நீச்சல்
,
காக்கிச்சட்டை
,
சினிமா