உனக்கு திருமணம் ஆகிவிட்டது என்கிற செய்தியை வெளியே சொல்லாதே' என்று அறிவுறுத்துகிற இயக்குநர்களைக் கண்டால் ஆத்திரம் பொத்துக்கொண்டு வருகிறது` என்கிறார் நடிகை ராதிகா ஆப்தே.ரஜினியுடன் 'கபாலி` முதல்ஷெட்யூல் முடித்துவிட்டு மும்பை திரும்பியிருக்கும் ராதிகா ஆப்தேவின் குறும்பேட்டி இதோ
பாதி நாட்கள் கணவருடன்தான்
'திரைப்படங்களில் நடிக்க ஆரம்பிக்கும் முன்னரே எனக்கு திருமணம் ஆகிவிட்டது. எனது கணவர் லண்டனில் வசிக்கிறார். வருடத்தில் பாதி நாட்கள் நான் அவருடன் தான் வசிக்கிறேன்.
திருமணமானதை மறைக்க வேண்டியதில்லை
என்னுடன் பணியாற்றும் இயக்குநர்களில் சிலருக்கும், சில நடிகர்களுக்கும் நான் திருமணமானவள் என்பது ஏனோ சங்கடமானதாக இருக்கிறது. அதை வெளியில் சொல்லாதே என்றும் எனக்கு அறிவுறுத்துகிறார்கள். எனக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடில்லை. எனக்கு திருமணமாகிவிட்டது என்பதை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லவே இல்லை.
பிடிச்சிருந்தா எது வேணா ஓகே...
நம்பர் ஒன் நடிகையாவதும் எனக்கு லட்சியமில்லை. மனதுக்குப் பிடித்த படங்களில் நடித்தது போக நாடகங்களில் நடித்தால் போதும்.</p> <p>4 வருடங்களாக நாடக நடிகையாகவே நான் வலம் வருகிறேன். அது எனக்கு திருப்தியாக இருக்கிறது.
ஆமா, செக்ஸியாதான் நடிக்கிறேன்...
நான் மிகவும் செக்ஸியாக நடிப்பதாகவும் ஒரு கருத்து இருக்கிறது. கதை பிடித்தால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன். அயிட்டம் பாடல்களுக்கு ஆடுவதும் கூட அந்த வகையில்தான்.
கபாலி ரஜினி பற்றி
'கபாலி'யில் நடிப்பதற்கு முன் ரஜினி குறித்து எனக்கு எவ்வித கருத்தும் இல்லை. ஆனால் அவருடன் நடித்து முடித்த பிறகு யோசித்தால் கடந்த 14 ஆண்டுகளில் நான் சந்தித்த அருமையான மனிதர் ("He is the nicest human being I've worked with) என்று அவரையே சொல்வேன். கடுமையான உழைப்பாளி. செப்டம்பர் 18 லிருந்து தொடர்ச்சியாக `கபாலி`யில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் ஒரு சமயம் கூட அவர் சோர்ந்து இருந்ததை நான் பார்க்கவில்லை. அதே போல் அவரது ஷாட் முடிந்ததும் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து புத்தகம் ஏதாவது படிக்க ஆரம்பித்துவிடுகிறார். மொத்தத்தில் ஆச்சரியமான மனிதர் ரஜினி," என்று வியக்கிறார் ராதிகா ஆப்தே.
Tags:
Cinema
,
சினிமா
,
நான் சந்தித்த இனிமையான மனிதர் ரஜினிதான்
,
ராதிகா ஆப்தே