அனிருத்- தனுஷ் கூட்டணி முறிந்ததா???

2:59 AM |
எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களைத் தொடர்ந்து துரைசெந்தில்குமார் இயக்கும் புதியபடமான கொடி படத்தில் தனுஷ் இரட்டைவேடங்களில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என்றார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளிப்போய் இப்போது பொங்கலுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு தள்ளிப்போக தங்கமகன் வெளியீடு, சென்னை மழை வெள்ளம் ஆகியனவற்றைக் காரணமாகச் சொன்னார்கள். ஆனால் அவற்றைத் தாண்டி இன்னொரு சிக்கலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்று சொல்லியிருந்தார். அதில்தான் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

தனுஷின் கொடி படத்திற்கு இசையமைக்க முடியாது என்று அனிருத் சொல்லிவிட்டாராம். நானும்ரவுடிதான் தங்கமகன் ஆகிய படங்களில் பணியாற்றிய நேரத்திலேயே தனுஷூக்கும் அனிருத்துக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் தம்மை அறிமுகப்படுத்தியவர் என்கிற காரணத்தால் அனிருத் பொறுத்துக்கொண்டாராம்.

கொடி படவேலைகளில் பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட கருத்துவேறுபாடு அதிகரித்துவிட்டதெனச் சொல்லப்படுகிறது. இதனால் அனிருத் படத்திலிருந்து விலகும் முடிவை எடுத்துவிட்டதாகவும் அவரைச் சமாதானப்படுத்தி படத்தில் பணியாற்ற வைக்கும் வேலைகளில் இருவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களும் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

என்ன நடக்குமோ?
மேலும் வாசிக்க…

ராசியான நடிகையுடன் கைகோர்க்கும் விஷால்..!!

2:04 AM |
நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று சமீபத்தில் பதவியேற்ற நடிகர் விஷால், நடிகர் சங்க பணிகளுடன் தனது அடுத்த படத்தின் பணிகளையும் தொடங்கிவிட்டார்.

விஷால் நடிக்கவுள்ள அடுத்த படத்தை 'குட்டிப்புலி', 'கொம்பன்' படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்கவுள்ளார். 'மருது' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படமும் கிராமிய கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம்', ஜீவா', காக்கிச்சட்டை ஆகிய வெற்றி படங்களில் நடித்து ராசியான நடிகை என்ற பெயர் பெற்ற ஸ்ரீதிவ்யா இந்த படத்தில் இணைந்துள்ளது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

பல்வேறு கெட்டப்களில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம்..!!

12:30 AM |
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘காக்கிச்சட்டை’ படத்திற்கு பிறகு இந்த வருடத்தில் எந்த படமும் வெளியாகவில்லை. இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘ரஜினி முருகன்’ படம் முடிவடைந்தும், பல்வேறு காரணங்களால் வெளியாக முடியாத சூழ்நிலையில் உள்ளது.

இந்நிலையில், அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமானார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம், சவுண்ட் இன்ஜினியராக ரசூல் பூக்குட்டி, இசையமைப்பாளராக அனிருத், ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் என பிரம்மாண்ட கூட்டணியுடன் இணைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தின் பூஜை நடந்து முடிந்துவிட்டாலும், படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் உள்ளது. அதற்கு முன்னதாக, படத்திற்காக போட்டோ ஷுட் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சிவகார்த்திகேயேனும் – கீர்த்தி சுரேஷும் ஏற்கெனவே ‘ரஜினி முருகன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்கள் இணையும் இரண்டாவது படம் இது.

இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து, விரைவில் படப்பிடிப்பை தொடங்கவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பல்வேறு கெட்டப்புகளில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com