விஜய்யின் தெறி படத்தின் டீஸர் பொங்கல் சிறப்பாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று படத்தின் புகைப்படங்கள் தான் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் ஒரு பிரபல பத்திரிகையின் பேட்டியில் அட்லீ விஜய் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, இதுவரை வந்த போலீஸ் கதாபாத்திரங்களை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமான கதை. சமூகத்தை திருத்த வரும் ஒரு நேர்மையான போலீஸாக அவருடைய வேடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விஜய் ரசிகர்களுக்கு ஏற்றார் போல் இப்படம் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும். அதேபோல் சமந்தா, எமி ஜாக்சன் பொருத்தவரையில், ராஜா ராணி படத்தில் நயன்தாரா, நஸ்ரியாவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை போலவே இப்படத்திலும் இந்த கதாநாயகிகள் இடம்பெறுவர் என்றார்.
Tags:
Atlee Talks About Actor Vijay
,
Cinema
,
Theri
,
theri teaser
,
Vijay
,
சினிமா