இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒருசில சுவாரசியமான காட்சிகள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
'தெறி' படத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக நடித்திருக்கும் விஜய்க்கு வில்லனாக பிரபல இயக்குனர் மகேந்திரன் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஒரு காட்சியில் விஜய்க்கு எதிராக சதி செய்ய வெளிநாட்டு சக்தி ஒன்றை மகேந்திரன் தூண்டிவிடுவதாகவும், அந்த வெளிநாட்டு சக்தியாக பல்கேரிய நாட்டு நடிகர் லோபோ என்பவர் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
தெறி திரைவிமர்சனம் - Theri Review
விஜய்க்கு மெயின் வில்லனாக மகேந்திரனும் மற்ற வில்லன்களாக சத்யராஜ் உள்பட ஒருசில வெளிநாட்டு நடிகர்களும் நடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
Tags:
Cinema
,
Theri Review
,
Vijay
,
சமந்தா
,
சினிமா
,
தெறி
,
விஜய்