ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து பெய்துவந்த கனமழை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது தான் ஓய்ந்துள்ளது. ஆனால் சென்னை முழுக்க தேங்கியிருக்கும் கழிவு நீரினாலும் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளினாலும் விரைவில் மக்களுக்கு நோய் பரவும் அபாயாம் ஏற்பட்டுள்ளது.
இதை மனதில்கொண்டு நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை பிரபல எத்திராஜ் கல்லூரியுடன் இணைந்து தொடர்ந்து மூன்று நாட்கள் இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடத்தவுள்ளது. நேற்று தொடங்கிய இந்த முகாம் நாளைவரை காலை ஒன்பது மணிமுதல் மாலை ஐந்து மணிவரை நடைபெறவுள்ளது. இதில் மக்கள் பங்கேற்று பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Tags:
Cinema
,
சினிமா
,
சூர்யா
,
சென்னை மக்களுக்காக இலவச மருத்துவ முகாம் நடத்தும் சூர்யா