தமிழ், தெலுங்கு உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவருடைய தாய் மொழி தமிழ்தான் என்பதும், இவர் சென்னையை அடுத்த பல்லாவரத்தில்தான் பிறந்து, வளர்ந்தவர் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. இவர், கடந்த வாரம் பெய்த கனமழையின் போது வெளியூரில் படப்பிடிப்பில் இருந்துள்ளார்.
இந்நிலையில், சென்னையை புரட்டிப் போட்ட கனமழையில் இவருடைய பெற்றோர் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் பெரிதும் பரிதவித்து போயுள்ளார் சமந்தா. இதுகுறித்து அவர் கூறும்போது,
இவர், கடந்த வாரம் பெய்த கனமழையின் போது வெளியூரில் படப்பிடிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில், சென்னையை புரட்டிப் போட்ட கனமழையில் இவருடைய பெற்றோர் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் பெரிதும் பரிதவித்து போயுள்ளார் சமந்தா.
இதுகுறித்து அவர் கூறும்போது, சென்னை ஏற்பட்ட கனமழையின் போது 3 நாட்களாக எனது பெற்றோரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதனால் போன வாரம் முழுவதும் என்னால் தூங்கக்கூட முடியவில்லை. என்னுடைய சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்கள்கூட இந்த வெள்ளத்தில் சிக்கி பரிதவித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் மிகவும் பரிதவித்துப் போனேன். அதுமட்டுமில்லாமல் சென்னை வெள்ளத்தில் ஏராளமான பொதுமக்களும் சிக்கி, உணவு, தண்ணீர்கூட இல்லாமல் பரிதவித்தது எனக்கு மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தியது என்று கூறியுள்ளார்.
சமந்தா, தெலுங்கு திரையுலகம் சென்னை வெள்ள நிவாரணத்திற்காக தொடங்கியுள்ள ‘மான மெட்ராஸ் கோஷம்’ என்ற அமைப்பின் மூலம் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
சமந்தா
,
சினிமா
,
வெள்ளத்தில் சொந்தங்களை காணாது பரிதவித்த சமந்தா