சிம்பு வெளியிடாத பீப் பாடல் குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. தற்போது பாடல் குறித்து முதன்முறையாக பேசியுள்ளார் சரத்குமார். அவர் கூறியதாவது,
அப்பாடல் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு பாடவில்லை என்பது அதைக் கேட்ட அனைவருக்கும் புரியும்.சிம்புவின் எதிர்காலத்தோடு விளையாட நினைத்த ஒரு குற்றவாளியின் செயலுக்கு அவர் பலிகடா ஆகியுள்ளார்.
ஏதாவது படத்திலோ, மேடையிலோ, ஆல்பத்திலோ சிம்பு வெளியிட்டிருந்தால் அது மன்னிக்க முடியாத குற்றமாகும்.இதுதொடர்பாக 30 ஆண்டுகளுக்கு மேலாக கலைத்துறையில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வரும் டி.ராஜேந்தர் மற்றும் சிம்புவின் தாயார் கண்ணீர் மல்க இதுபற்றி பேட்டியளித்துள்ளார்.
இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கருதுகிறேன்.‘தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பதே தெய்வப் பண்பு’ என்ற அடிப்படையில் சிம்பு செய்திருக்கும் தவறை மன்னிப்போம். இத்தவறு மன்னிக்கப்பட வேண்டியதுதானே தவிர தண்டிக்கப்பட வேண்டியது அல்ல'' என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Tags:
Cinema
,
சரத்குமார்
,
சினிமா
,
ராதிகாவை தொடர்ந்து பீப் பாடல் குறித்து சரத்குமார்