தனது மேனேஜர் மூலம் 7 ஆண்டு கால காதலை முறித்துள்ளார் வரலட்சுமி..!!

11:22 PM |
நடிகர் விஷாலும், சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் காதலர்கள் என்பதும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதும் கோடம்பாக்கம் அறிந்த விஷயம். இருப்பினும் விஷாலுக்கும், சரத்குமாருக்கும் நடிகர் சங்கத் தேர்தலை முன்னிட்டு பிரச்சினை வெடித்தது. அப்போது விஷாலுக்கு ஆதரவாக வரலட்சுமி இருந்தார்.

ஆனால் சமீபத்தில் சரத்குமாருக்கு ஆதரவாக வரலட்சுமி மாறியதாகவும், விஷாலுடன் நெருக்கத்தை குறைத்துக் கொண்டதாகவும் செய்தி பரவியது.

இந்நிலையில் வரலட்சுமி தனது ட்விட்டர் பதிவில் ’’காதல் முறிவுகள் தரம் தாழ்ந்துள்ளன..ஒரு ஆண் தனது மேனேஜர் மூலம் 7 ஆண்டு கால காதலை முறித்துள்ளார்…காதல் எங்கே? என பதிவிட்டுள்ளார். இதனால் விஷாலுடன் அவருக்குள்ள 7 ஆண்டு காதலில் பிரச்சினை என்று கோடம்பாக்கத்தில் செய்திகள் உலா வருகிறது.
மேலும் வாசிக்க…

நடிகர் சங்கத்தில் சரத்குமார் நீக்கிய விவகாரம் - விஷாலை திட்டி தீர்த்த வரலட்சுமி..!!

1:14 AM |
ஆடு பகை, குட்டி உறவு என்பார்கள். அது போல சரத்குமார், ராதிகா இடையே மோதலில் இருக்கும் விஷால் அவர்களது மகளும் நடிகையுமான வரலட்சுமியை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருக்கும் விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை அதிரடியாக நீக்கினார்.

இதனை அறிந்த திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. சரத்குமாரின் மனைவி ராதிகா டுவிட்டரில் விஷாலை சூனியக்காரன் என திட்டி தீர்த்தார். சரத்குமாரோ இதனால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.

இதனையெல்லாம் கூர்ந்து கவனித்த வரலட்சுமி தந்தையின் வருத்தத்தை பார்க்க முடியாமல் தவித்ததாக பேசப்பட்டது. இதனால் கோபமடைந்து விஷாலை திட்டியதாக சமூக வலைதளங்களில் நேற்று செய்திகள் பரவியது.

என் அப்பாவை சீண்டாதே தாங்க மாட்டே என வரலட்சுமி விஷாலிடம் கூறியதாக கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

’வெடிக்கும் சர்ச்சை’ - சரத்குமார், ராதாரவி நடிகர் சங்கத்திலிருந்து அதிரடி நீக்கம்..!!

1:15 AM |
சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் மூன்று நடிகர்களை சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளனர். இவர்கள் மூவரும் நடிகர் சங்கத்தில் ஊழலில் ஈடுப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், சரத்குமார் நடிகர் சங்க தலைவராக இருந்த போது, ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதுகுறித்த கேள்விகளுக்கு இன்னும் அவர்கள் தரப்பில் இருந்து தெளிவான பதில் தராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

மேலும், காவிரி பிரச்சனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஆதரவு அளிப்பது, கன்னட நடிகர்களின் பேச்சுக்கு கண்டனம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்டது.இதில் பொதுச்செயலாளர் விஷால், துணை தலைவர் பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

இதுதான் நடிகர் சரத்குமாரின் உண்மையான முகம் நடு வீதியில் செய்யும் செயலைப் பாருங்கள்! வீடியோ

11:09 PM |
மேலும் வாசிக்க…

விஷால் - வரலக்ஷ்மி திருமணம் விரைவில்..!!

11:21 PM |
நடிகை வரலட்சுமியுடன் தான் இணைந்து இருக்கும் புகைப்படத்தை, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள நடிகர் விஷால், 'இந்தப்படமே அனைத்தையும் சொல்லும்' என, கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், முன்னாள் தலைவர் சரத்குமார் அணியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் விஷால்.

தாய் பகையானாலும் குட்டி உறவு என்பது போல், சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியை, விஷால் காதலிப்பதாக கூறப்பட்டது. இதற்கு, இருதரப்பிலும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

மாறாக, பொது நிகழ்ச்சிகளுக்கு இருவரும் சேர்ந்தே சென்று வந்தனர். 'டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், இருவரும் இணைந்த புகைப்படங்களை, அவ்வப்போது வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில், விஷாலும், வரலட்சுமியும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக பரவிய தகவலை தொடர்ந்து, நடிகர் விஷால், 'டுவிட்டரில்' நேற்று, வரலட்சுமி மற்றும் செல்ல நாயுடன் இணைந்து இருக்கும் படத்தை வெளியிட்டு, 'இது எல்லாவற்றையும் சொல்லும்' என, தகவல் வெளியிட்டு உள்ளார்.

விஷாலின் பதிவுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி, நடிகர், நடிகையரும் வாழ்த்து சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

'தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில், 2018ல் கட்டி முடிக்கப்படும் திருமண மண்டபத்தில் நடைபெறும் முதல் திருமணம், விஷால் - வரலட்சுமி ஜோடியாக இருக்கலாம்' என, 'கோலிவுட்' எனப்படும் சென்னை, கோடம்பாக்கம் சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
மேலும் வாசிக்க…

அஜித் இப்பிடித்தான்.. ஜெயலலிதாவுக்கே தெரிஞ்ச உண்மை… பரபரப்புத் தகவல்..!!

3:10 AM |
தேர்தல் திருவிழா முடிந்தாலும் செண்டை மேள கச்சேரி முடிய இன்னும் சில காலம் ஆகும் போலிருக்கிறது. 6 வது முறையாக முதல்வராக பதவியேற்றுக் கொள்ளும் ஜெ.வை வாழ்த்த திரையுலகம் க்யூ கட்டி நிற்கிறது. அம்மா… தேவை ஒரே ஒரு அப்பாயினிட்மென்ட் என்று சினிமா சங்கங்கள் அத்தனையும் கடிதம் கொடுத்துவிட்டு காத்துக் கிடக்கின்றன. அது ஒருபுறமிருக்க, முதல்வர் பொறுப்பேற்றுக் கொள்ளும் அந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ரஜினி, கமல், இளையராஜா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டிருந்தன.

ஆனால் ரஜினி கமல் வராவிட்டாலும், விஷால் சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் வந்திருந்தார்கள். இங்குதான் ஒரு டவுட். அரசியலில் எப்பவும் அம்மாவுக்கு சப்போர்ட் என்று பொதுமக்களால் நம்பப்படும் அஜீத்துக்கு அழைப்பிதழ் போனதா இல்லையா?

நமக்கு கிடைத்த தகவலின்படி அவருக்கு அழைப்பிதழே செல்லவில்லையாம். பொதுவாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிற வழக்கம் அஜீத்திற்கு இல்லை என்பது கோட்டை வரைக்கும் எட்டியிருக்கிறதே? எதற்கு அவருக்கு தர்ம சங்கடத்தை கொடுப்பானேன் என்று நினைத்திருக்கலாம்.

அந்த வகையில் அஜீத்தண்ணே… உங்க குரல் வெயிட்டுதான்!
மேலும் வாசிக்க…

நம் தமிழ் நடிகர், நடிகைகளின் செல்லக் குழந்தைகளைப் பார்த்துள்ளீர்களா??

10:57 PM |
நடிகர், நடிகைகளாகிவிட்டால், சராசரி மனிதர்களைப் போல் பொது இடங்களுக்குச் செல்ல முடியாது. ஒருவேளை அப்படி சென்றால், காணாததைக் கண்டது போல் அவர்களைச் சூழ்ந்து பெரிய கூட்டம் திரண்டுவிடும். அந்த அளவில் நடிகர், நடிகைகளுக்கு நம் நாட்டில் பெரிய மரியாதையை மக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் சராசரி மனிதர்கள் மேற்கொள்ளும் சிறு செயல்களை கூட முடியாது.

அப்படி இருக்கையில் அவர்களுக்கு திருமணமாகி குழந்தை பிறந்து விட்டால், அவர்களது குடும்பம் மற்றும் குழந்தையைக் காண வேண்டும் என்று நினைக்கமாட்டோமா என்ன? இங்கு பல படங்களில் நடித்து, நம்மை அவர்களது ரசிகர்களாக்கிய தமிழ், நடிகர் நடிகைகள் தங்கள் துணை மற்றும் குழந்தைகளுடன் எடுத்த போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போம் வாருங்கள்.


 அஜித்-ஷாலினி அனோஷ்கா  குட்டி தலயுடன் 

இது நடிகர் அஜித் மற்றும் ஷாலினி, மகள் அனோஷ்கா  குட்டி தல-யுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.







மகனுடன் மாதவன் 

இது மாதவன் தன் மனைவி சரிதா மற்றும் மகன் வேதந்த் உடன் சேர்ந்து எடுத்த போட்டோ.









மகள்-மகளுடன் சூர்யா-ஜோதிகா 

இது நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா, தங்களது மகள் தியா மற்றும் மகன் தேவ் உடன் கொடுத்த போஸ்.








குடும்பத்துடன் அர்ஜூன் 

இது நடிகர் அர்ஜூன் தன் மனைவி நிவேதிதா, மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் இளைய மகள் அஞ்சனாவுடன் எடுத்த குடும்ப போட்டோ. இதில் ஐஸ்வர்யா ‘பட்டத்து யானை’ படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்துள்ளார்.









மகள்-மகனுடன் சரத்குமார்-ராதிகா 

இது சரத்குமார் மனைவி ராதிகா, மகள் ரேயன், மகன் ராகுலுடன் சேர்ந்து சமீபத்தில் எடுத்த போட்டோ.





மகளுடன் மீனா 
இது நடிகை மீனா கணவர் வித்யசாகர் மற்றும் செல்ல மகள் நைனிகாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.








குடும்பத்தினருடன் பிரபுதேவா 

படத்தில் இருப்பது தான் நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவாவின் மகன்கள் மற்றும் முன்னாள் மனைவி.








பார்த்திபனின் மகன் மற்றும் மகள்கள் 

இது நடிகர் பார்த்திபன் முன்னாள் மனைவி சீதா மற்றும் குழந்தைகள் கீர்த்தனா, அபிநயா மற்றும் மகன் ராக்கியுடன் பல வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோ.




மகள்களுடன் கமல்-கௌதமி 

இது ஸ்ருதிஹாசன், சுப்புலட்சுமி பாட்டியா (கௌதமி மகள்), கௌதமி, கமல்ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் போன்றோர் ஒன்றாக சேர்ந்து எடுத்த போட்டோ.







கணவர் மற்றும் மகளுடன் குட்டி ராதிகா 

இது நடிகை குட்டி ராதிகா, கணவர் குமாராசாமி மற்றும் மகள் ஷாமிகாவுடன் எடுத்த குடும்ப போட்டோ.







குடும்பத்துடன் குஷ்பு 

இது நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி, மகள் அவந்திகா மற்றும் அனந்திகாவுடன் எடுத்த போட்டோ.









மகள்களுடன் மதுபாலா

 இது ரோஜா படத்தின் நாயகி மதுபாலா, தன் மகள்கள் அமியா மற்றும் கியாவுடன் எடுத்த போட்டோ.








குடும்பத்தினருடன் ரம்பா

 இது நடிகை ரம்பா தன் கணவர் இந்திரன் பத்மநாதன், மகள் மற்றும் மகனுடன் எடுத்த குடும்ப போட்டோ.









மகனுடன் ரம்யா கிருஷ்ணன் 

படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் இருப்பது மகன் ரித்விக். 
மேலும் வாசிக்க…

அதிக திருமணம் செய்த தமிழ் நடிகர் நடிகைகள்..!!

9:04 AM |
நிறைய திருமணங்களை செய்து கொண்ட பிரபலங்களைப் பற்றி தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரபலங்கள் அனைவரும் மக்கள் மத்தியில் நல்ல பெயருடன் இருக்கும் அதே சமயம் அவர்களின் திருமண வாழ்க்கை பற்றிய கிசுகிசு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி, நடிகர் சக்ரவர்த்தியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். பின் தயாரிப்பாளர் போனி கபூரை இரண்டாவதாக மணந்து வாழ்ந்து வருகிறார்.

ராதிகா

நடிகை ராதிகா முதலில் 1985 ஆம் ஆண்டு இயக்குநர் பிரதாப்பை திருமணம் செய்து, 1986 இல் விவாகரத்து செய்துவிட்டார். பின் ரிச்சாட்டு ஹார்டி என்பவரை லண்டனில் 1990 ஆம் ஆண்டு திருமணம் புரிந்து, 1992 இல் விவாகரத்து செய்துவிட்டார். இறுதியில் நடிகர் சரத்குமாரை காதலித்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து, தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

லட்சுமி

நடிகை லட்சுமி 1969 இல் பாஸ்கர் என்பதை திருமணம் செய்தார். பின் அவரை விவாகரத்து செய்துவிட்டு, நடிகர் மோகன் சர்மாவை 1975 இல் திருமணம் செய்து, 1980 இல் விவாகரத்து செய்துவிட்டார். பிறகு நடிகரும், இயக்குநருமான கே.எஸ். சிவசந்திரனை காதலித்து 1989 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

கமல்ஹாசன்

உலக நாயகனான நடிகர் கமல்ஹாசன் தனது 24 வயதில் வாணி கணபதி என்பவரை மணந்து, பத்து வருடங்களுக்கு பின் விவாகரத்து செய்துவிட்டு, பின் நடிகை சரிகாவுடன் சில நாட்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தார். பின் ஸ்ருதிஹாசன் பிறந்த பின்னர் சரிகாவை மணந்தார். தற்போது கமல்ஹாசன் கௌதமியுடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.

கார்த்திக்

நவரச நாயகன் நடிகர் கார்த்திக் 1988 இல் நடிகை ராகினியை மணந்து, பின் ராகினியின் சகோதரியான ரதியை 1992 இல் திருமணம் புரிந்தார்.

எம்.ஜி.ஆர்

நடிப்பால் நிறைய மக்களைக் கவர்ந்ததோடு, தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மூன்று திருமணம் நடந்துள்ளது. அவர் முதலில் தங்கமணியை மணந்தார், பின் அவர் இறக்க இரண்டாவதாக சதானந்தவதியை மணந்தார். அவரும் நோய் காரணமாக இறந்தார். இறுதியாக தமிழ் நடிகையான வி.என். ஜானகி அவர்களை மணந்தார்.

பிரகாஷ் ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ் லலிதா குமாரி என்பவரை 1994 ஆம் ஆண்டு மணந்தார். அவருக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். பின் அவர் தனது முதல் மனைவியை 2009 இல் விவாகரத்து செய்துவிட்டு, 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போனி வெர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சரத்குமார்

நடிகர் சரத்குமார் 1984 இல் சாயாவை மணந்து, 2000 இல் விவாகரத்து செய்துவிட்டார். பின் நடிகை ராதிகாவை பிப்ரவரி மாதம் 4 ஆம் நாள் 2001 ஆம் ஆண்டு மணந்தார்.


மேலும் வாசிக்க…

சரத்குமார் படத்தில் நடிக்கும் விஷால்..!!

11:39 PM |
பிசாசு படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் பின்னர் அந்த படம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் விஷால் நடிக்கும் அடுத்த படத்தை மிஷ்கின் இயக்குவார் என தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சரத்குமாருக்காக மிஷ்கின் எழுதிய கதையில் தான் தற்போது விஷால் நாயகனாக நடிக்கபோவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

‘சூப்பர்ஸ்டார் ரஜினி’யை விட ‘இளைய தளபதி விஜய்’தான் “மாஸ்”-சரத்குமார் அதிரடி பேட்டி..!!

10:02 PM |
மேலும் வாசிக்க…

நான் அந்த விஷயத்திற்கு வெட்கப்பட்டதே கிடையாது- சரத்குமார் அதிரடி..!!

10:21 PM |
நடிகர் சங்க தோல்விக்கு பிறகு பல இடங்களில் மீடியாக்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார் சரத்குமார். தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

இதில் பேசிய சரத்குமார் இன்றைய இளைஞர்களின் கல்வி நிலை குறித்து மிகவும் ஆழமாக பேசினார். அவர் கூறுகையில் நான் சாதரண குடும்பத்திலிருந்து வந்தவன் தான், சிறு வயதில் சைக்கிள் கடையில் எல்லாம் வேலை பார்த்துள்ளேன்.

மேலும், நான் மொழிகளை கற்றுக்கொள்வதில் வெட்கப்பட்டதே இல்லை, ஆங்கிலத்தில் தவறாக பேசினாலும் பேசுவேன், ஆனால், சில கிராமத்து மாணவர்கள் சென்னைக்கு வேலை தேடி வருகையில் ஆங்கிலத்தில் பேச வெட்கப்படுகிறார்கள்.

தயவு செய்து தவறாக இருந்தாலும் பேசுங்கள், எதற்கும் வெட்கப்பட்டு ஒதுங்காதீர்கள்’ என இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் பேசியுள்ளார்.
மேலும் வாசிக்க…

சரத்குமார் மீது போலிஸில் புகார்- நாசர் அதிரடி..!!

10:32 PM |
கடந்த வருடம் நடந்த நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தோல்வியுற்றுநாசர் வெற்றி பெற்ற கதை அனைவரும் அறிந்ததே. 

இதை தொடர்ந்து சங்க கணக்கு வழக்குகளை 3 மாதத்தில் ஒப்படைக்கிறேன் என சரத்குமார் தரப்பு கூறியது.ஆனால், இன்று வரை எங்களிடம் எந்த கணக்கு வழக்குகளும் வந்து சேர வில்லை என நாசர் கூறியுள்ளார்.

மேலும், இன்றுடன் அந்த அவகாசம் முடிவதால் விரைவில் சரத்குமார் மீது குற்றப்பிரிவு போலிஸாரிடம் புகார் அளிக்கப்படும் என நாசர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க…

ராதிகாவை தொடர்ந்து பீப் பாடல் குறித்து சரத்குமார்..!!

12:37 AM |
சிம்பு வெளியிடாத பீப் பாடல் குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. தற்போது பாடல் குறித்து முதன்முறையாக பேசியுள்ளார் சரத்குமார். அவர் கூறியதாவது,

அப்பாடல் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு பாடவில்லை என்பது அதைக் கேட்ட அனைவருக்கும் புரியும்.சிம்புவின் எதிர்காலத்தோடு விளையாட நினைத்த ஒரு குற்றவாளியின் செயலுக்கு அவர் பலிகடா ஆகியுள்ளார்.

ஏதாவது படத்திலோ, மேடையிலோ, ஆல்பத்திலோ சிம்பு வெளியிட்டிருந்தால் அது மன்னிக்க முடியாத குற்றமாகும்.இதுதொடர்பாக 30 ஆண்டுகளுக்கு மேலாக கலைத்துறையில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வரும் டி.ராஜேந்தர் மற்றும் சிம்புவின் தாயார் கண்ணீர் மல்க இதுபற்றி பேட்டியளித்துள்ளார்.

 இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கருதுகிறேன்.‘தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பதே தெய்வப் பண்பு’ என்ற அடிப்படையில் சிம்பு செய்திருக்கும் தவறை மன்னிப்போம். இத்தவறு மன்னிக்கப்பட வேண்டியதுதானே தவிர தண்டிக்கப்பட வேண்டியது அல்ல'' என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க…

நடிகர் சங்கத்துக்கு 7.5 லட்சம் ரூபா அஜித் நிதியுதவி - சரத்குமார் தெரிவிப்பு..!!!

1:43 AM |



நடிகர் சங்கத்துக்கு 7.5 லட்சம் ரூபா அஜித் நிதியுதவி-சரத்குமார் தெரிவிப்பு ...!
"Ajith donated 7.5 lakhs to Nadigar Sangam" - Sarath Kumar


மேலும் வாசிக்க…
2015 Thediko.com