பீப் சாங் போட்ட சிம்புவை எல்லோரும் எதிர்கின்றனர். அவரை தூக்கில்போடவேண்டும் என குமுறுகின்றனர். என் மகன் அப்படி என்ன தவறு செய்துவிட்டான் என சிம்புவின் அம்மா உஷா மீடியாக்களுக்கு வீடியோவை அனுப்பி ஒப்பாரி வைத்துள்ளார். சிம்பு, டி,ராஜேந்தரை தொடர்ந்து உஷா ராஜேந்தரும் மீடியாக்களுக்கு வீடியோவை தயார் செய்து ஒப்பாரி வைத்து அனுப்பிவிட்டுள்ளார். ஆனால் சிம்பு செய்தது தவறே இல்லை என்கிற ஒரே மனநிலையில் தான் மூவரும் உள்ளனர். தமிழ்நாட்டை விட்டே போகிறோம் எனக்கூறுவது நியாயம் தானா?
சிம்பு தெரியாமல் இந்த பீப் சாங் போட்டுவிட்டேன். யாருடைய மனதையாவது புண் படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என ஒரு வரி வார்த்தையை கூறியிருந்தால் இந்த பாஞ்சாயத்து இவ்வளவு தூரம் சென்றிருக்காதே. சிம்பு இவ்வாறு செய்யாதது பப்ளிசிடியை அவர் விரும்புவதாகவே எண்ணத்தூண்டுகிறது. இதற்குமுன் தவறுகள் நிறையவே நடந்தாலும், சிம்பு போட்ட பீப் சாங் விவகாரத்தில் இருந்து தான் சர்ச்சை வெடித்துள்ளது. சிம்பு செய்தது பலரின் மனதை காயப்படுத்தி உள்ளது. இதற்கு மனிப்புக்கேட்டுவிட்டு இனிமேல் இப்படி ஒரு பாடலை இயற்றமாட்டேன் எனக்கூறிவிட்டால் பிரச்னை முடிந்துவிடும். அதை விட்டு மீடியாக்கள் முன் தோன்றி ஒப்பாரி வைத்தால் பிரச்சனை முடிந்து விடுமா? அல்லது பிரச்சனை வளர்பதற்கு தான் இந்த நீலிக்கண்ணீர் ஒப்பாரியா?
இதன் மூலம் பலர் லாபம் சம்பாதிக்க சிம்புவே ஏன் இடம் கொடுக்கிறார் என்று தெரியவில்லை மீடியாக்கள் மட்டும் இல்லாமல் அரசியவாதிகளும் தான் இன்று எல்லா மீடியாக்களில் இந்த செய்திதான் வருகிறது இதனால் தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகள் எல்லாம் வெளியில் தெரியாமல் போய்விட்டது எடுத்துகாட்டுக்கு வெள்ளம் நிவாரணம் முதல் பல பிரச்னைகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது . சமுக அக்கறை உள்ளவர்கள் இனிமேலாவது இந்த பிரச்னையை வளர்காமல் அடுத்த வேலையே பார்க்க உதவுங்கள்.
சிம்பு நீங்கள் செய்த தவறுக்கு இல்லை யாரோ செய்த தவறு உங்கள் மேல் விழுந்துவிட்டது என்றே வைதுகொல்வோம் இதற்கு உங்கள் அம்மா அப்பா படும் வேதனை பார்த்து நீங்கள் மன்னிப்பு கேக்கலாமே ஏன் அப்படி என்ன உங்கள் கௌரவம் போய்விடபோகிறது. இதனால் உங்கள் இமேஜ் மட்டும் இல்லை உங்க குடும்ப இமேஜ்யும் சேர்ந்து தான் போகிறது .
Tags:
Cinema
,
சிம்பு
,
சிம்பு மன்னிப்பு கேட்க மறுப்பது ஏன்
,
சினிமா