வெள்ளித்திரையில் மவுசு குறைந்தவர்கள் சின்னத்திரைக்கு வருவதும், சின்னத்திரையில் மவுசு அதிகமுள்ளவர்கள் வெள்ளித்திரைக்கு வருவதும் சமீபகாலமாக நடந்து வரும் நிகழ்ச்சி.
விஜய் டிவியில் பிரபலமானவர்கள் பலரும் இன்று வெள்ளித்திரையில் நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். ஒருகட்டத்தில் சன் டிவி மக்கள் களைகட்டினர்.
இப்போது சந்தானம், ஜெகன், சிவகார்த்திகேயன், ரோபா சங்கர் எனத் தொடங்கி தற்போது மா. கா. பா. ஆனந்த் என விஜய் டிவி பட்டியல் நீள்கிறது.
இந்த பட்டியலில் ‘நீயா நானா’ புகழ் கோபிநாத்தும் இணைந்துவிட்டார்.
இவரின் பேச்சாற்றலும், தொலைநோக்குப் பார்வை கொண்ட சிந்தனைக் கருத்துக்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலாபால் நடித்த ‘நிமிர்ந்து நில்’ படத்தில் கௌரவ வேடத்தில் அறிமுகமானார் கோபிநாத்.
தற்போது, ஜீவா, நயன்தாரா ஜோடியாக நடித்துவரும் ‘திருநாள்’ படத்தில் போலீஸ் கமிஷனராக நடித்துள்ளார். இதில் உள்ளூர் தாதாக்களை அடக்க வரும் டெர்ரர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளாராம்.
கோபிக்கு பெரிய திரையிலேயே பிஸியாக இருக்க விருப்பமாம். ஆயினும் தடாலடியாக சின்னத்திரையை விட்டுவிட்டு விலகாமல் படிப்படியாக பெரிய திரையில் இறங்க உள்ளாராம்.
Tags:
சினிமா
,
நயனுடன் கோபிநாத்!! அடித்தது அதிர்ஷ்டம்
,
நயன்தாரா
,
ஜீவா