சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில், அனிருத் இசையமைப்பில் நவம்பர் 10 ஆம் தேதி வேதாளம் வெளியானது. தீபாவளி அன்று வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வசூலில் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் பண்ணாத சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
பாக்ஸ் ஆபீஸ் ஸ்ரீதர் பிள்ளை தனது டுவிட்டர் தகவலில், “வேதாளம் தமிழகத்தில் மட்டும் தீபாவளி தினத்தில் ரூ.15.5 கோடியை வசூலித்துள்ளது. முதல் நாள் வசூலில் இது ஒரு புது சாதனை” என குறிப்பிட்டு உள்ளார்.ஸ்ரீதர் பிள்ளை தனது டுவிட்டர் தகவலில் 2 நாள் வசூல் குறித்து வெளியிட்டு உள்ள தகவலில் தீபாவளிக்கு நல்ல மழையாக இருந்த போதிலும் வேதாளம் நல்ல வசூல் செய்து உள்ளதாக கூறி உள்ளார்.
இளைய தளபதி விஜய் நடித்த கத்தி படம் நெல்லையில் உள்ள பிரபல திரையரங்கில் முதல் நாள் மட்டும் ரூ 13.5 லட்சம் வசூல் செய்தது.மேலும், அந்த பகுதியில் விஜய் படங்களுக்கு தான் தற்போது வரை நல்ல ஓப்பனிங் இருந்து வருகின்றது. இந்நிலையில் இந்த சாதனையை வேதாளம் முறியடித்து உள்ளது.
அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் அந்த திரையரங்கில் முதல் நாள் ரூ 14 லட்சம் வசூல் செய்துள்ளது.
வேதாளம் ஏ, பி. சி சென்டர்கள் என அனைத்திலும் வெற்றிகரமாக ஓடுகிறது.
வசூல் குறித்து வர்த்தக கண்காணிப்பாளர் கண்ணன் வெளியிட்டு உள்ள டுவிட்டர் தகவலில் அஜித்தின் வேதாளம் வசூல் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடியை தாண்டி விட்டதாக கூறி உள்ளார்.
விடாத மழையிலும் வேதாளம் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. தமிழ்நாடு தவிர கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் வேதாளம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் 6 நாட்களில் உலகம் முழுவத்கு சுமார் ரூ60 கோடி வசூல் ஈட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.
Tags:
அஜித்
,
அஜித்தின் வேதாளம்
,
முதல் வார வசூல் சினிமா
,
வேதாளம்