‘கயல்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர்
ஆனந்தி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இதில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இப்படம் ஏ சான்றிதழ் பெற்ற படம். இப்படம் வெளியாகி சில எதிர்மறையான கருத்தைகளை பெற்றாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வணிக ரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்றது.
சமீபத்தில் இப்படத்தில் நடித்தது குறித்து ஆனந்தி கூறும்போது, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என்னிடம் கதை சொன்னபோது ஒரு அழகிய இளம்பருவ காதல் கதையாக இருந்தது. கிளைமாக்ஸ் சீனை படமாக்கியபோதுதான் அதுவொரு அடல்ட் காமெடி படம் என்பது தெரிந்தது. அதுவரை அப்படிப்பட்ட படம் என்று எனக்கு தெரியாது. ஷூட்டிங்கிற்கு முன்புவரை, துணிச்சலான பெண் கதாபாத்திரம் என்றுதான் எனக்கு தெரிந்த விவரம். ஏற்கனவே நடித்த படங்களிலிருந்து இது வித்தியாசமானது என்று எண்ணினேன்.
முதலிலேயே இதுவொரு அடல்ட் படம் என்று தெரிந்திருந்தால் நான் நடித்திருக்க மாட்டேன். எனக்கு அடல்ட் காமெடி படங்கள் பிடிக்காது. மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிக்க மாட்டேன்’ என்றார்.
ஆனந்தி தற்போது ‘பண்டிகை’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரபு சாலமன் தயாரிக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
Tags:
Cinema
,
ஆபாச வசனம் பேசி நடித்திருக்க மாட்டேன் ஆனந்தி
,
ஆனந்தி
,
கயல்
,
சினிமா