‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், மீனாட்சி. ‘வெள்ளக்கார துரை, மந்திர புன்னகை, ராஜாதி ராஜா, நானும் ரவுடிதான்’ ஆகிய படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
மீனாட்சி கதாநாயகியாக நடிக்கும் ‘நேர்முகம்’ என்ற புதிய படத்தை ரபி தயாரித்து, கதாநாயகனாக நடிக்கிறார். முரளி கிருஷ்ணா டைரக்டு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள திரைப்பட நகரில் நேற்று நடந்தது.
அப்போது படத்தின் உதவி டைரக்டர் சங்கர் சைகை மூலம் படப்பிடிப்பு குழுவினரிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதை மீனாட்சி தன்னை கிண்டல் செய்வதாக தவறாக புரிந்துகொண்டுள்ளார்.
ஆத்திரமடைந்த அவர், உதவி டைரக்டர் சங்கரை தன் பக்கத்தில் வரும்படி அழைத்து அவரது கன்னத்தில் மீனாட்சி ‘பளார் பளார்’ என்று இரண்டு முறை அறைந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
பயந்துபோன மீனாட்சி கேரவனுக்குள் ஓடியுள்ளார். உடனே படப்பிடிப்பு குழுவினர் அவரை கேரவனுக்குள் வைத்து வெளிப்பக்கமாக பூட்டியுள்ளனர். படப்பிடிப்பு குழுவை சேர்ந்த அனைவரும் கேரவனை சுற்றி நின்றுள்ளனர். இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானது.
தன்னை வெளியில் விடும்படி மீனாட்சி கேரவனுக்குள் இருந்து சத்தம் போட. ‘‘மன்னிப்பு கேட்டால்தான் வெளியே விடுவோம்” என்று படப்பிடிப்பு குழுவினர் கூறுயுள்ளனர்.
அதைத்தொடர்ந்து மீனாட்சி தன் கைப்பட மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். அதில், ‘‘உதவி டைரக்டர் சங்கர் சைகை மூலம் பேசியதை நான் தவறாக புரிந்துகொண்டு அவரை அடித்துவிட்டேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
மீனாட்சி மன்னிப்பு கடிதம் கொடுத்ததால், அவரை கேரவனுக்குள் இருந்து படப்பிடிப்பு குழுவினர் விடுவித்துள்ளனர்.
Tags:
Cinema
,
கருப்பசாமி குத்தகைதாரர்
,
சினிமா
,
டைரக்டரை பளார் விட்ட நடிகை
,
மீனாட்சி