இன்னும் 3 தினங்களில் உலகமெங்கும் கமல், அஜித்தின் படங்கள் வெளியாகவிருக்கிறது. பெரும்பாலான திரையரங்குகள் ஏற்கனவே ஹவுஸ்ஃபுல்லாகிய நிலையில் அஜித் மற்றும் கமல் ரசிகர்கள் படத்தின் ரிலீசை மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்போகிறார்கள்.
இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் வேதாளம் ரிலீசாகும் பெரும்பாலான திரையரங்குகளில் அஜித்தின் மாஸ் கட்அவுட்டுகளை வைத்துவிட்டனர். இதனால் கமலின் தூங்காவனம் படத்தின் பேனர்கள் வைக்க பெரும்பாலான திரையரங்குகளில் இடமில்லாததால் மிகுந்த கோவத்தில் இருந்தார்கள் கமல் ரசிகர்கள்.
கமல் படம் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவில் பல இடங்களில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடக்கூடியவை. இதனால் தற்போது கேரளாவில் குறிப்பிட்ட சில இடங்களில் அஜித் - கமல் ரசிகர்கள் மோதல் வெடித்துள்ளதாம். மேலே உள்ள பேனர்கள் கேரளாவில் ஒரு திரையரங்கில் வைத்தவைதான். தூங்காவனம் பேனர்கள் வைக்க இடமில்லாததால் வேதாளம் படத்தின் பேனர்களை கிழித்து தொங்கவிட்டிருக்கிறார்கள். இதனால் எந்த நேரத்திலும் அந்த பகுதியில் மோதல் வெடிக்கலாம் என போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாம்.
Tags:
அஜித்
,
கமல்
,
கிழித்து தொங்கவிடப்பட்ட வேதாளம் படத்தின் பேனர்கள்
,
சினிமா