நடிகர் அஜீத்குமார் தான் ஒரு படத்தில் நடிக்க முதல்நாள் படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும்போது தனது எதிரில் யார் வந்தாலும் அவர்களுக்கு வணக்கம் செய்வார்.
அதேபோல், படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு திரும்பும்போது முக்கிய டெக்னீசியன்கள் ஒவ்வொருவரையும் சென்று பார்த்து கைகுலுக்கி விட்டு விடைபெறுவார். இது அஜீத் ஒவ்வொரு நாளும் செய்யக்கூடியது.அதேபோல், தான் ஒவ்வொரு படத்திலும் நடிக்கும்போதும், ஒருநாள் தனது கையாலே யூனிட் நபர்களுக்கு பிரியாணி சமைத்து விருந்து கொடுப்பார். இது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதோ அல்லது, படப்பிடிப்பு முடியும் கடைசி நாள் அன்றோ நடக்கும்.
அந்த வகையில், வேதாளம் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்ததும் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுக்க வேண்டும் என்றுதான் திட்டமிட்டிருந்தாராம் அஜீத்.ஆனால், அன்றைய தினம் அவர் காலையில் நடிக்கத் தொடங்கியதுமே அஜீத்தின் காலில் அடிபட்டு ரத்தம் கொட்டியதால் உடனடியாக அவர் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அதனால் திட்டமிட்டபடி அஜீத்தினால் யூனிட்டுக்கு பிரியாணி விருந்து கொடுக்க முடியாமல் போய் விட்டதாம். அதன்காரணமாக, வேதாளம் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தங்க செயின் பரிசு வழங்க முடிவு செய்திருக்கிறாராம் அஜீத். இன்னும் இரண்டொரு நாட்களில் அஜீத்தின் தங்க பரிசு வேதாளம் யூனிட்டுக்கு கிடைத்து விடுமாம்.
Tags:
அஜீத்
,
சினிமா
,
வேதாளம்
,
வேதாளம் படக்குழுவுக்கு அஜீத்தின் தங்க பரிசு