நடிகை சினேகாவுடன் குத்தாட்டம் போட்ட கிறிஸ் கெயில் படம் உள்ளே..!!

1:15 AM |
நம்ம அடி மன்னன் மேற்கிந்திய தீவு ரன் மெசின் கிரீஸ் கெயில் அண்மையில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் போட்டுத் தாக்கியிருந்தமை யாவரும் அறிந்ததே..

இந்த நிலையில் போட்டி முடிந்த கையோடு போடத் தொடங்கிய குத்தாட்டம் நீண்ட நேரம் தொடர்ந்ததாக தகவல்கள் தெரிவிகின்றன...

இந்த உல்லாச குத்தாட்டத்தில் பாலிவுட் நடிகை சினேகா உல்லால் சேர்ந்து ஆட்டம் போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலிவுட் நடிகை ஸ்னேகா உல்லாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் டுவிட்டரில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது...



மேலும் வாசிக்க…

விஜய் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த அட்லி..!!

11:53 PM |
விஜய் நடித்துவரும் தெறி படத்தை இளம் இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிவிட்டரில் தீவிரமாக இயங்கிவரும் கோலிவுட் பிரபலங்களில் அட்லியும் ஒருவர்.

தெறி படம் தொடர்பான தகவல்களை இவர் அவ்வப்போது தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுவார். ஆனால் இவர் ‘இளைய தளபதி’ விஜய்யை டிவிட்டரில் ஃபாலோ செய்யவில்லை என ஒரு தகவல் வெளியாகி தற்போது விஜய் ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

மேலும் வாசிக்க…

விஜய் தொலைக்காட்சி விருது விழாவை கிண்டல் செய்த RJ பாலாஜி..!!

11:25 PM |
ரேடியோவில் RJவாக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருப்பவர் பாலாஜி. இவரின் கிண்டல், நக்கல் பேச்சுக்கு பல ரசிகர்கள் அடிமை.

அதிலும் இவர் விருது விழாக்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள் என அனைத்தையும் கலாய்த்து எடுத்து விடுவார்.அந்த வகையில் இன்று லியனர்டோ ஆஸ்கர் வென்றதை கண்டு அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு கலாட்டா டுவிட் செய்துள்ளார். இதோ உங்களுக்காக…

மேலும் வாசிக்க…

தெறி பாடல் வரியை வெளியிட்ட படக்குழு- ரசிகர்கள் உற்சாகம்..!!

11:01 PM |
இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கின்றது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து பல சாதனைகளை முறியடித்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை.தற்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தன் டுவிட்டர் பக்கத்தில் தெறி பாடல்கள் குறித்து சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதோ உங்களுக்காக...


மேலும் வாசிக்க…

கூகுள் அலுவலகத்தில் கமல்ஹாசன்..!!

10:53 PM |
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் உரையாற்றச் சென்ற கமல்ஹாசன் தொடர்ந்து அமெரிக்காவில் சில நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். பாஸ்டன் நகரில் உள்ள கூகுள் அலுவலகத்திற்கும் கமல்ஹாசன் சென்றுள்ளார். அங்குள்ள நிர்வாகிகளுடனும், பணியாளர்களுடனும் விவாதம் மற்றும் உரையாடலில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார். கமலுடன் கூகுள் பணியாளர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளனர்.

அது பற்றிய புகைப்படங்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கூகுள் அலுவலகப் பயணம் குறித்தும் கமல் கருத்து தெரிவித்துள்ளார். “கூகுளையே கூகுள் செய்து, சில கூகுளர்களுடனும் நிர்வகித்த போது,” என மகிழ்ச்சியுடன் கமல் பதிவிட்டிருக்கிறார். கமல்ஹாசன் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில்தான் டிவிட்டரில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் ‘உலகநாயகன் டியூப்’ என்ற யு டியூப் வீடியோ தளம் ஒன்றையும் வைத்திருக்கிறார்.

தொழில்நுட்பம் மாற மாற அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் நடிகர்களில் முதன்மையாக இருப்பவர் கமல்ஹாசன். ஆவிட் எடிட்டிங், டிஜிட்டல் சினிமாவில் இருந்து தற்போதைய டிவிட்டர் வரை தன் தனித்துவத்தில் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
மேலும் வாசிக்க…

ப்ரணிதா சாலை விபத்தில் படுகாயம்- அதிர்ச்சியில் திரையுலகம்..!!

10:10 PM |
சகுனி, மாஸ் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ப்ரணிதா. இவர் இன்று காலை தன் தாயாருடன் ஹைதராபாத் திரும்பிய போது இவர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்தை சந்தித்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் அவர் தப்பினார், பின் ஆம்புலேன்ஸ் அந்த இடத்திற்கு விரைந்து வந்தது. சிகிச்சையை தொடர்ந்து அவர் மீண்டும் வேறு ஒரு காரில் ஹைதராபாத் சென்றார்.

இதை ப்ரணிதா தன் டுவிட்டர் பக்கத்தில் மிகவும் அதிர்ச்சியுடன் கூறியுள்ளார். இச்சம்பவத்தை அறிந்த பல திரை நட்சத்திரங்கள் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.


மேலும் வாசிக்க…

கபாலி படத்தில் ஆக்ஷனில் பட்டயை கிளப்பியுள்ள தன்ஷிகா..!!

3:10 AM |
நடிகை தன்ஷிகா வளர்ந்துவரும் கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரஜினிக்கு இணையாக இப்படத்தில் இவருக்கும் பல ஆக்ஷன் காட்சிகள் உள்ளதாம்.

தான் கற்றுவந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் வித்தையை மொத்தமுமாக இறக்கி அனைவரிடமும் பாராட்டு பெற்றுள்ளார் தன்ஷிகா. கபாலியில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுவதும் சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இதை அவர் டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் வாசிக்க…

ரசிகர்களுக்கு லக்ஷ்மி மேனனின் வேண்டுகோள்..!!

8:54 PM |
முன்னணி நடிகைகளில் ஒருவரான லக்ஷ்மி மேனன் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அது என்னவென்றால்..

சமூக வலைதளங்களில் நடிகர், நடிகைகளின் பெயர்களில் போலி கணக்குகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்த போலிகளால் வரும் பிரச்சனைகளும், சர்ச்சைகளும் இன்றைய சினிமா துறையில் சகஜமாகிவிட்டது.

முன்னணி நடிகைகளில் ஒருவரான லக்ஷ்மி மேனன், "ட்விட்டரில் என்னுடைய பெயரில் ஒரு போலி கணக்கு இருப்பதாக கேள்விப்பட்டேன், அது நான் இல்லை. இதை யார் நிர்வகிப்பது என்று எனக்கு தெரியாது, தயவு செய்து யாரும் அந்த போலி கணக்கை தொடர்பு கொள்ளவோ, Follow செய்யவோ வேண்டாம் என கூறியுள்ளார்.

மேலும் "எனக்கு முகநூலில் மட்டுமே கணக்கு உள்ளது. படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அதை கூட நான் அவ்வளவாக பயன்படுத்துவதில்லை" என தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் வாசிக்க…

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்..!!

12:18 AM |
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகராக உருமாறிய சிவகார்த்திகேயன், நேற்றுடன் தனது திரை பயணத்தில் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்த இவர், இதற்கு காரணமான தமிழக மக்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் அவர் டிவிட்டரில் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
மேலும் வாசிக்க…

டிவிட்டர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சித்தார்த்..!!

12:05 AM |
சில நாட்களுக்கு முன்பு நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் “நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில இருக்கிற ஒரு தெரு நாய்க்கு கிடைக்கும்னு எழுதியிருந்தா அதை யாராலும் மாற்ற முடியாது” என்றொரு சர்ச்சையான ட்வீட்டை தட்டியிருந்தார்.

இது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், ” நான் நடித்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் வரும் வசனம் தான் அது. அதில் நான் யாரையும் குறிப்பிட்டு ட்விட் செய்யவில்லை. மற்றவர்கள் இதை வேறு மாதிரி பார்த்தால் நான் எப்படி அதற்கு பொறுப்பேற்க முடியும்” என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

நடு இரவில் சிம்புவிற்காக குவிந்த ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே..!!

11:32 PM |
சிம்புவின் 33வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. அதிலும் டுவிட்டரில் இன்று அதிகாலையில் இருந்தே #HappyBirthdaySTR என்ற டாக் ட்ரண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில் அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். மேலும், இரவு 12 மணிக்கே ரசிகர்கள் அவர் வீடு முன்பு குவிந்தனர்.

ரசிகர்கள் அன்பை கண்ட சிம்பு கீழே இறங்கி வந்து ரசிகர்களுடன் கேக் வெட்டினார். இதனால், ரசிகர்கள் இன்னும் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர். Thediko  சார்பாக STR க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


மேலும் வாசிக்க…

Facebookல் காதல் பண்றவங்க கண்டிப்பா இந்த வீடியோவை பார்க்க வேண்டும் - நொந்துடுவீங்க

12:56 AM |
பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் உலகெங்கும் வாழும் நண்பர்களை தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்காக தொடங்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் நண்பர்கள் ஆகத்தொடங்கி விட்டனர்.

முகம் பார்த்து பேசிய நட்புக்கள் மறைந்து முகப்புத்தக நட்புதான் இன்றைய டிரெண்ட். பிறந்தநாளுக்கு கூட நேரில் வாழ்த்து தெரிவித்தாலும் பேஸ்புக்கில் லைக் போட வில்லை என்று கவலைப்படுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

காதலும் இப்போது பேஸ்புக்கில் அதிகரித்து வருகிறது. பெண்களை நேரில் பாலோ செய்த காலம் போய் பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் பாலோ செய்கின்றனர். இதில் நிறைய அக்கவுண்ட்கள் போலி தான் என்பது பலருக்கும் புரிவதில்லை.

பெண்களின் பெயரில் அக்கவுண்ட் வைத்து நடிகர், நடிகைகள் போட்டோவை Profile Picture ஆக வைத்தால் கண்ணை மூடிக்கொண்டு ரெக்வஸ்ட் கொடுத்து சாட்டில் பேசி காதல் வளர்க்கின்றனர். சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்திக்கும்போது தான் இவர்களின் வண்டவாளம் தெரியும்.

இப்படி பேஸ்புக்கில் பேசி தங்கள் பணத்தையும், நேரத்தையும் பலர் இழந்திருக்கின்றனர். சிலர் தங்களது கற்பையும், உயிரையும் கூட இழந்திருக்கின்றனர்.

பேஸ்புக்கின் உண்மைநிலையை நகைச்சுவையாக இந்த முதியவர்கள் சொல்வதை இந்த காணொளியில் பாருங்கள்,

மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com