சகுனி, மாஸ் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ப்ரணிதா. இவர் இன்று காலை தன் தாயாருடன் ஹைதராபாத் திரும்பிய போது இவர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்தை சந்தித்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் அவர் தப்பினார், பின் ஆம்புலேன்ஸ் அந்த இடத்திற்கு விரைந்து வந்தது. சிகிச்சையை தொடர்ந்து அவர் மீண்டும் வேறு ஒரு காரில் ஹைதராபாத் சென்றார்.
இதை ப்ரணிதா தன் டுவிட்டர் பக்கத்தில் மிகவும் அதிர்ச்சியுடன் கூறியுள்ளார். இச்சம்பவத்தை அறிந்த பல திரை நட்சத்திரங்கள் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர்.
Tags:
Cinema
,
Twitter
,
சகுனி
,
சினிமா
,
ப்ரணிதா
,
மாஸ்