“நயன்தாராவை பார்த்து பயப்படவில்லை” நடிகை ஸ்ரீதிவ்யா அதிரடி..!!

1:09 AM |
“காஷ்மோரா படத்தில் நடித்தபோது நயன்தாராவை பார்த்து பயப்படவில்லை” என்று நடிகை ஸ்ரீதிவ்யா கூறினார்.

படவிழா

கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் ‘காஷ்மோரா’ படத்தில் நயன்தாராவும் ஸ்ரீதிவ்யாவும் இணைந்து நடிக்கிறார்கள். கோகுல் டைரக்டு செய்கிறார். எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது.

விழாவில் நடிகர் கார்த்தி கலந்துகொண்டு பேசும்போது, “மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரான ‘பாகுபலி’ படம் திரைக்கு வந்து மிரட்டி இருக்கிறது. அதுபோன்ற ஒரு பிரமாண்ட படமாக காஷ்மோரா தயாராகி உள்ளது. நயன்தாரா மிக சிறந்த நடிகை என்பதை இந்த படத்தில் நிரூபிப்பார். இதற்கு முன்பு எல்லா படங்களிலும் ஸ்ரீதிவ்யா கிராமத்து பெண்ணாக நடித்து இருந்தார். இந்த படத்தில் நகரத்து பெண்ணாக வருகிறார்” என்றார்.

ஸ்ரீதிவ்யா பேட்டி

பாடல் வெளியீட்டு விழா முடிந்ததும் விழாவில் கலந்துகொண்ட ஸ்ரீதிவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“காஷ்மோரா படத்தின் கதையை டைரக்டர் கோகுல் என்னிடம் சொன்னபோது நயன்தாரா கவுரவ வேடத்தில்தான் வருகிறார் என்றார். அதனால் எனக்கு அவரைப்பார்த்து பயம் ஏற்படவில்லை. அவருக்கு அதிக காட்சிகள் இருக்குமோ என்று மிரளவும் இல்லை. எனது கதாபாத்திரம் எனக்கு திருப்தியாக தோன்றியது. வித்தியாசமாகவும் இருந்தது. இந்த படத்தில் காதல் இல்லை. நானும் நயன்தாராவும் ஒரே நாள்தான் இணைந்து நடித்தோம்.

நயன்தாரா

முதன்முதலாக நயன்தாராவை சந்தித்தபோது என்னிடம் நன்றாகவே பேசினார். அவர் அழகாக இருந்தார். இதுவரை பல படங்களில் பாவாடை தாவணியில் நடித்து விட்டேன். அது எனக்கு பொருத்தமாக இருந்தது என்று சொன்னார்கள். இந்த படத்தில் ‘மாடர்ன் கேர்ள்’ ஆக வருகிறேன். நான் அதிக சம்பளம் கேட்பதாக தகவல் பரவி உள்ளது. அது தவறு. அப்படி யாரிடமும் கேட்கவில்லை. நான் சூர்யாவின் பெரிய ரசிகை. அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். அந்த ஆசை விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. குறிப்பிட்ட படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களில் தோன்ற விரும்புகிறேன்.”

இவ்வாறு ஸ்ரீதிவ்யா கூறினார். பட விழா நிகழ்ச்சிகளை அஞ்சனா தொகுத்து வழங்கினார். டைரக்டர் கோகுல், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.
மேலும் வாசிக்க…

சிவகார்த்திகேயன் பிடியில் இருக்கும் நடிகை: ஏமாற்றி விட்டதாக புலம்பல்..!!

11:55 PM |
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்வில் ஒரு முக்கிய படம்.

அப்படத்தின் ஹீரோயின் ஸ்ரீதிவ்யா ஊதா கலரு ரிப்பன் என்று ஊரையே கிறங்க வைத்தார். அதன் பின், சிவாவின் காக்கி சட்டை படத்திலும் ஜோடி சேர்ந்தார். இது வரை சுபமே.....

ஆனால், அதன் பின் ஒன்றிரண்டு படங்களில் ஹீரோயினாகி, பின் இப்போது இரண்டாம் ஹீரோயினாகி என்று ஸ்ரீதிவ்யா தேய்ந்து போக காரணம் சிவாவின் பிடியில் இவர் உள்ளார் என்று கோலிவுட்டில் ஒரு பேச்சு வந்து, புது வாய்ப்புகள் எட்டி போகின்றனவாம்.

அப்போ, சிவா மனமிரங்கி வாய்ப்பு தருவார் என்று பார்த்தால்
ரெமோவில் ஸ்ரீதிவ்யாவுக்கு ஒரு குட்டி ரோல் கொடுத்தாராம்.

அடுத்தடுத்து படங்களில் வேறு வேறு ஹீரோயின்கள் என்று சிவா ரேஞ்சே வேறயாக இருக்க வாய்ப்பு தருகிறேன் என்று நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் சிவகார்த்திகேயன் என்று பொருமித்தள்ளுகிறார் ஸ்ரீதிவ்யாஎன்று கோலிவுட் பட்சிகள் சொல்லிக்கொண்டு அலைகின்றன.

மேலும் வாசிக்க…

இராஜபாளையம் பெண்களின் அழகை ரசித்தேன். விஷால்..!!

11:10 PM |
விஷால், ஸ்ரீதிவ்யா, நடிப்பில் வெளியாகவுள்ள 'மருது' திரைப்படத்தின் பெரும்பாலான பகுதியின் படப்பிடிப்புகள் இராஜபாளையத்தில்தான் நடைபெற்றது. இயக்குனர் முத்தையாவின் சொந்த ஊர் என்பதால் அந்த ஊரின் இண்டு இடுக்கெல்லாம் அவருக்கு அத்துபடி, என்றும், அந்த ஊரையே அவர் ஒரு பிலிம் சிட்டியாக மாற்றிவிட்டதாகவும் விஷால் கூறியுள்ளார்.

மேலும் ராஜபாளையம் என்றாலே நாய்களுக்குப் புகழ்பெற்றது என்று கூறுவார்கள். ஆனால் அந்த ஊர் அழகான பெண்களுக்கும் பெயர் பெற்றது. அங்கு அழகழகான பெண்களைக் கண்டு வியந்தேன். ரசித்தேன்.

இந்த படத்தில் ராதாரவி, சூரி ஆகிய இருவருமே முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். ராதாரவியுடன் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கவும் இருந்ததில்லை. நடிகர் சங்க தேர்தலை அவர் ஒரு கோணத்தில் பார்த்தார். நான் ஒரு கோணத்தில் பார்த்தேன். அவ்வளவுதான்

மேலும் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் பேய் என்றும் ராட்சசன் என்றும் கூறலாம். அந்த அளவுக்கு அவர் வெளுத்து வாங்கியுள்ளார். இந்த படம் எனக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் திருப்தியான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

மருது திரைவிமர்சனம் - Marudhu Review

2:38 AM |
விஷால் சமீப காலமாக சீவிவிட்ட காளையின் கொம்பு போல் கூராக உள்ளார். நடிகர் சங்க வெற்றி, திருட்டு விசிடி அதிரடி முடிவு என பம்பரமாக சுழலும் இவருக்கு படத்திலும் இப்படி ஒரு கதாபாத்திரம் அமைந்தால் எப்படியிருக்கும்?.

அப்படி ஒரு கதாபாத்திரத்தை குட்டிபுலி, கொம்பன் வெற்றிகளை தொடர்ந்து முத்தையா விஷாலுக்காக ரெடி செய்துள்ள படம் தான் மருது.

கதைக்களம்

ராஜபாளையத்தில் பெரிய தலைக்கட்டு ராதாரவி, இவர் கை காட்டியவர் தான் அந்த ஊரில் பல பதவிகளை பிடிக்கிறார்கள். ராதாரவியின் இடது கை போல் அவர் சொல்லும் அத்தனை அடிதடி, கட்டப்பஞ்சாயத்து வேலைகளை முடித்துக்கொடுப்பவர் ஆர்.கே.சுரேஷ்.

இவரை அடுத்த MLA ஆக்க ராதாரவி முயற்சி செய்து வருகிறார். இதே ஊரில் லோட் மேனாக (மூட்டை தூக்குபவர்) விஷால், தன் அப்பத்தாவின் வளர்ப்பில் வீரமாகவும், ஊரில் எந்த தவறு நடந்தாலும் முத்தையாவின் டெம்ப்ளைட் ஹீரோவாக வலம் வருகிறார்.

ஸ்ரீதிவ்யாவை ஒரு கோவிலில் பார்க்க, பார்த்தவுடன் மோதல் பிறகு காதல் என விஷாலின் வாழ்க்கை சந்தோஷமாக செல்ல, ஸ்ரீதிவ்யாவின் அம்மாவை ஒரு சில காரணங்களுக்காக ஆர்.கே.சுரேஷ் கொலை செய்தது விஷாலுக்கு தெரிய வருகிறது.

அவர் இறந்ததற்கு ஏதோ ஒரு விதத்தில் விஷாலும், அவருடைய அப்பத்தாவும் காரணமாக அமைய, பிறகு என்ன அப்பத்தா விஷாலுக்கு கொம்பை சீவி விட விஷால் ஆர்.கே.சுரேஷின் அநியாயங்களை அடக்குவது மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விஷால் 6 அடி உயரம், 5 பேர் இல்லை 50 பேர் வந்தாலும் அடித்து நொறுக்குகிறார், அதை நம்பவும் முடிகின்றது. முரட்டு இளைஞன், பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர், அப்பத்தாவிற்கு செல்ல பேரன், அநியாயங்களை தட்டி கேட்பவர் என அனைத்திலும் புகுந்து விளையாடியுள்ளார்.

ஸ்ரீதிவ்யா முதன் முதலாக நிறைய நடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதுநாள் வரை வெறும் ஸ்கீரின் வந்து மட்டும் போகும், ஸ்ரீதிவ்யா இதில் விஷாலையே கை நீட்டி அடிக்கும் அளவிற்கு தைரியமான பெண். தென் மாவட்டத்து பெண்களுக்கே உரிய பாவனை.

யாருயா இந்த அப்பத்தா? என்று தான் படம் முடிந்து வெளியே வருபவர்கள் பலரும் கேட்கும் கேள்வி. படத்தின் மற்றொரு ஹீரோ என்று கூட கூறலாம், காமெடியில் ஆரம்பித்து விஷாலுக்கு வீரம் புகுட்டும் காட்சி வரை சரவெடி தான். அதிலும் விஷாலை, ஸ்ரீதிவ்யாவை காதலிக்க வைக்கும் காட்சி காமெடி கலக்கல். அதுமட்டுமில்லாமல், ‘என் பேரனுக்கு எந்த பதவியும் வேண்டாம், அவன் நினைச்சா எந்த பதவிலையும் அவனே போய் உட்காருவான்’ என பன்ச் வசனம் வேறு, தெரிந்து தான் பேசினாரா என்பது கேள்விக்குறி.

சூரி காமெடி நீண்ட நாட்களுக்கு பிறகு சிரிப்பு வருகின்றது, கிராமத்து கதை என்றாலே சூரி கால்ஷிட் தான் போல இனி, அதே நேரத்தில் கிளைமேக்ஸில் செண்டிமெண்ட் காட்சிகளிலும் கலங்க வைத்துள்ளார். இதையெல்லாம் விடுங்க, ராதாரவி-விஷால் காம்பினேஷன் படத்தில் உள்ளது.

பலரும் எதிர்ப்பார்த்த காட்சி, பேசிய அளவிற்கு தான் இல்லை என்றாலும், விஷால் மனதில் தோன்றியதை படத்தில் கேட்டு விட்டார். ஆனால், முத்தையா இனி இதுப்போன்ற கதைகளையே தொடர்ந்து எடுக்க வேண்டுமா? என கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனெனில் அம்மா செண்டிமெண்ட், மாமனார் செண்டிமெண்ட், தற்போது அப்பத்தா செண்டிமெண்ட் ஒரே பாணியில் தான் அனைத்து படமும் இருக்கின்றது.

இந்த ஊரில் போலிஸ் எல்லாம் இருக்கிறார்களா? என்று கேட்கும் அளவிற்கு உள்ளது. சுரேஷ் அவர் வீட்டு ஆட்களை தவிர எல்லோரையும் வெட்டுகிறார், குத்துகிறார், லாஜிக் அத்துமீறல். இத்தனை வன்முறையா தேவையா முத்தையா சார்?. டி.இமான் இசையில் பாடல்கள் தாளம் போட வைத்தாலும் பின்னணி இசை காதை பதம் பார்க்கின்றது. வேல்ராஜ் ஒளிப்பதிவு என்று யாராவது சொன்னால் தான் தெரியும், ஏதோ சிறு பட்ஜெட் படம் போல் உள்ளது.

க்ளாப்ஸ்

விஷால் கிராமத்து இளைஞனாக இறங்கி அடித்துள்ளார், விஷால்-ராதாரவி சம்மந்தப்பட்ட காட்சிகள்.

அப்பத்தா முழுப்படத்தையும் தாங்கி செல்கிறார். தமிழ் சினிமாவிற்கு குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு.

படத்தின் முதல் பாதி சூரி காமெடி, விஷால் அடிதடி என விறுவிறுப்பாக செல்கின்றது. குறிப்பாக பெண்களை மதிக்கு வசனங்கள்.


பல்ப்ஸ்

லாஜிக் மீறல், சமூகத்திற்கு சில தேவையற்ற குறியீடு வசனங்கள், கண்டிப்பாக முத்தையா இதை அடுத்த படத்தில் மாற்ற வேண்டும்.

இரண்டாம் பாதி யூகிக்க கூடிய பல காட்சிகள், கிளைமேக்ஸ் உட்பட, பார்த்து பழகி போன கதைக்களம்.

மொத்தத்தில் மருது ஜனரஞ்சக படங்களை விரும்புவோர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கலாம்.


ரேட்டிங்- 2.5/5
மேலும் வாசிக்க…

Maruthu - Official Trailer | Vishal, Sri Divya | D. Imman

1:16 AM |
மேலும் வாசிக்க…

அஜித் குறித்து நான் அப்படி கூறவில்லை - ஸ்ரீதிவ்யா ஆவேசம்

6:26 PM |
மருது, சங்கிலி புங்கிலி கதவ தொற ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஸ்ரீதிவ்யா.

இவர் சமீபத்தில் அஜித்துடன் நடிக்க முடியாது என்று கூறியதாக ஒரு செய்தி வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் இவர் பேட்டியளிக்கையில் ‘நான் அஜித்திற்கு தங்கையாக நடிக்க மாட்டேன் என்று தான் கூறினேன்.

அவருக்கு ஹீரோயினாக நடிக்க நான் எப்போதும் ரெடி, அந்த வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

மக்களுக்கு கழிப்பறை கட்ட ரூ 80,000 வழங்கிய விஷால்..!!

12:14 AM |
ராஜபாளையம் பகுதி மக்களுக்கு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர விரும்பிய விஷால், அதற்காக ரூ 80 ஆயிரத்தை வழங்கி இருக்கிறார். விஷால் தற்போது முத்தையா இயக்கத்தில் மருது படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

இதற்காக சூரி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட படக்குழுவினருடன் அவர் ராஜபாளையம் பகுதியில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் அங்குள்ள மக்கள் கழிப்பிட வசதியின்றி அவதிப்படுவதைத் தெரிந்து கொண்ட விஷால், அப்பகுதி நகராட்சி ஆணையர் தனலட்சுமியுடன் இதுகுறித்து கலந்துரையாடினார்.

பின்னர் அரசு உதவியுடன் அப்பகுதி மக்களுக்கு கழிப்பறைகளை கட்டுவதென்றும், மானியத் தொகை போக மீதமிருக்கும் தொகையை படக்குழு சார்பில் அளிக்கவும் மருது படக்குழு முன்வந்தது. முதல்கட்டமாக 10 கழிப்பறைகளை கட்ட ரூ 80 ஆயிரத்தை மருது படக்குழு நகராட்சி ஆணையர் தனலட்சுமியிடம் வழங்கி இருக்கின்றனர்.

மேலும் வருகின்ற 23 ம் தேதி ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கலந்துரையாடல் நிகழ்த்தி மீதமிருக்கும் மக்களுக்கும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர மருது படக்குழு முடிவு செய்திருக்கிறது. விஷால் தற்போது மருது படத்திற்காக ஐயப்ப பக்தராக மாறியிருக்கிறார்.

விஷால் ஐயப்ப பக்தராக நடிக்கும் காட்சிகளை தற்போது மருது குழுவினர் படம்பிடித்து வருகின்றனர். விரைவில் மருது படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
மேலும் வாசிக்க…

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இருவரும் உருகி உருகி காதலிக்கிறார்களாம்..!!

11:56 PM |
வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை படங்களில் சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யாவின் ரொமான்ஸ் பேசப்பட்டு வந்தது.

ஆனால் ரஜினிமுருகன் வந்த பிறகு அந்த நிலை மாறி விட்டது. சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷின் ரொமான்ஸ் அதிக இயல்பாக இருந்ததாக பேசப்பட்டது.

இதை தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்திற்கும் கீர்த்தி சுரேஷை கமிட் செய்து ரொமான்ஸ் காட்சிகளை கூடுதலாக இணைக்கிறார்களாம்.

தங்களது ரொமான்ஸ் காட்சிகளுக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு காரணமாக, இன்னும் இயல்பாக நடித்து ரசிகர்களை கவர வேண்டும் என்று சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் இருவரும் இப்படத்தில் உருகி உருகி காதலித்துக்கொண்டிருக்கிறார்களாம்.
மேலும் வாசிக்க…

ரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்த ஸ்ரீதிவ்யா..!!

11:45 PM |
ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள பெங்களுர் நாட்கள் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக இதில் தனது சொந்தக்குரலில் டப்பிங் பேசி நடித்துள்ள நடிகை ஸ்ரீ திவ்யாவின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதனால் உணர்ச்சிவசப்பட்ட நடிகை ஸ்ரீதிவ்யா, தன்னை பாராட்டி வாழ்த்திய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இனி எல்லா படங்களுக்கும் சொந்தக்குரலில் டப்பிங் பேச முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

பெங்களூர் நாட்கள் விமர்சனம் - Bangalore Naatkal Review

1:19 AM |
மலையாளத்தில் நிவின்பாலி, துல்கர் சல்மான், ஃப்கத் ஃபாஸில், நஸ்ரியா, நித்யா மேனன் என நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து வெளியாகி ஹிட்டடித்த ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் ரீ மேக்தான் ‘பெங்களூர் நாட்கள்’

‘கம்பியூட்டர் இன்சினியாரவோணும் நீயி’ என்ற அம்மா சரண்யாவின் ஆசைக்கேற்ப இஞ்சினியராகும் பாபி சிம்ஹா. ரெண்டு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணிக்கலைன்னா உங்க பொண்ணு ஓடிப்போய்டுவா’ என ஜோசியர் சொல்லிவிட, திருமண ஏற்பாடு செய்யும் பெற்றோர் சொல்படி திருமணத்திற்கு தயாராகும் ஸ்ரீதிவ்யா.

பிரிந்துவிட்ட அப்பா, அம்மாவால் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட, தனக்குப் பிடித்த ரசனையான வாழ்க்கையை வாழும் செல்ஃபி ப்ரியர் - கம் - ரேஸ் பைக் மெக்கானிக் ஆர்யா. மூவரும் கஸின்கள் என்றாலும் டிகிரி தோஸ்துகள், பாபி சிம்ஹாவுக்கு வேலையும், ஸ்ரீதிவ்யாவுக்கு மாப்பிளையும் பெங்களூரிலேயே கிடைத்துவிட ஆர்யா வேறு அங்கிருப்பதால் சேர்ந்து கொட்டமடிக்கலாமே என்ற அவர்களின் சந்தோஷக் கும்மாளத்துடன் ஆரம்பிக்கிறது படம்.

ஸ்ரீதிவ்யாவை மணமுடிக்கும் ராணா, வேலை வேலை என்று அலையும் ரிசர்வ்ட் ஆசாமியாக இருக்க, வருத்தமடைகிறார் அவர். கிராமத்துப் பெயர் கொண்ட, ஆனால் கொஞ்சம் மாடர்னான, அழகான காதலியாக கிடைக்க வேண்டுமென்ற கவலையில் இருக்கும் பாபி சிம்ஹாவிற்கு, லட்டு போல ஏர் ஹோஸ்டஸ் ராய் லட்சுமி கிடைக்கிறார். நான் இப்படித்தான் என ஜாலி லைஃபில் வாழும் ஆர்யாவுக்கோ, ரேடியோ ஜாக்கி, பார்வதியின் குரலே எனர்ஜி பூஸ்டர்.

ராணா அலுவல் காரணமாக வெளிநாடு போய்விட, இவர்கள் மூவரும்  சந்திப்பதே ஸ்ரீதிவ்யாவுக்கு ரிலாக்ஸாக இருக்கிறது. ராணா இருக்கும்போது வீட்டுக்குச் சென்றாலும், இவர்களைப் பார்த்தாலே சைலன்ஸாகிறார் ராணா. அதுவும் பாபி சிம்ஹா ராணாவை அண்ணா என அழைக்க, ‘என்னடி அண்ணன்கறான்? அப்ப நீ யாரு அம்மு?’என ஸ்ரீதிவ்யாவிடம் கிண்டலடிக்கும் ஆர்யாவைக் கண்டாலே பார்வை மாறுகிறது ராணாவுக்கு.

அடுத்ததாக, அதிர்ச்சி வெர்ஷன்கள். எப்போதும் தன் அறையைப் பூட்டி வைத்திருக்கும் ராணா, ஒருநாள் சாவியை வைத்துவிட்டுச் சென்றுவிட, அந்த அறைக்குள் சென்று பார்க்கும் ஸ்ரீதிவ்யாவிற்கு ஓர் அதிர்ச்சி. தன் ப்ரிய ஆர் ஜே, பார்வதியை நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுக்க நினைக்கிற ஆர்யாவிற்கு ஓர் அதிர்ச்சி. சைட்டடித்த ராய் லட்சுமி, பால்கனியில் அமர்ந்து ஹெட் மசாஜ் செய்துவிடுமளவிற்கு க்ளோஸானாலும், பாபி சிம்ஹாவிற்கும் - ராய் லட்சுமி வீட்டில் ஓர் அதிர்ச்சி.

அந்த அதிர்ச்சிகள் என்ன, மூவரும் அவற்றை எப்படி எதிர்கொண்டார்கள், முடிவில் என்ன ஆனது என்பதையெல்லாம்... ஆ. , அஸ்கு புஸ்கு... என்னைக்கு நாங்க கதை சொல்லிருக்கோம்.. இந்தப் பழைய பாட்டு புக்லலாம் போடுவாங்களே.. ஆங்.. அதேதான்.. வெள்ளித்திரையில் காண்க!

படிய வாரிய தலையுடன், தயக்கமாய் ஆரம்பித்து அடுக்குமொழி ஆங்கிலத்தில் இண்டர்வ்யூவில் அசத்தும் பாபிசிம்ஹா நடிப்பில் அசரடிக்கிறார். ‘போடா போடா எனக்கென்ன’ கேரக்டரை கேஷுவலாகவே செய்திருக்கிறார், ஆர்யா. இவர்களிடையே மாட்டிக் கொண்டு ஸ்கோர் செய்யாமல் அல்லது செய்ய முடியாமல் தவிக்கிறார் ஸ்ரீதிவ்யா. ராணா தியேட்டரில் வரும் சீனிலெல்லாம் பெண் ரசிகைகளுக்கு கண்களில் ஆட்டோமேடிக்காக ஆர்ட்டின் சிம்பல் மின்னுகிறது.

அதேபோல க்ளைமாக்ஸில் ராணா காரை எடுக்கும்போது, ஸ்லோவா ஓட்டுவாரே என்று மூவரும் தயங்க, டாப் கியரில் அவர் பறக்கையில் தியேட்டரில் க்ளாப்ஸ் மழை. பார்வதி, ராய் லட்சுமி, ப்ரகாஷ் ராஜ், சமந்தா என அனைவருமே தங்களுக்கு ஏற்ற பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருந்தாலும் சரண்யா பொன்வண்ணன் ஃப்ரீ ஹிட்டில் சிக்ஸரடித்திருக்கிறார்.

இடைவெளைக்குப் பிறகு தியேட்டரை கலகலப்பாக்க வைக்கிறது அவர் வரும் காட்சிகள் எல்லாம். கணவர் எம். எஸ். பாஸ்கர் வீட்டை விட்டுப் போய்விட, வேலையை விட்டு கோவைக்கே வரத்தயாராக இருப்பதாய் பாபி சிம்ஹா சொல்ல, அவரை தனியே அழைத்துப் போய் ‘டேய்.. நான் பெங்களூர் வர்றேண்டா.. இங்க எவ இருக்கறது..’ எனக் கறாராகச் சொல்லிவிட்டு சொந்தக்காரர்கள் மத்தியில் சோக சீன் போடுவதாகட்டும்,

பெங்களூர் அபார்ட்மெண்டில் தன் நண்பிகளுடன் சீட்டுக்கச்சேரியில் அமர்ந்துகொண்டு பசிக்கிறதென புலம்பும் பாபி சிம்ஹாவிடம், ‘காலைல இருந்து கார்டே செட் ஆகலடா.. இப்பதான் ரம்மி சிக்கீருக்கு. பீட்சா ஆர்டர் பண்ணிக்கோ’ என அதகளம் பண்ணுவதாகட்டும், ‘உன் அக்கா அமெரிக்கா வரச்சொல்றாடா’ பந்தா விட்டு விமான நிலையத்தில் கூலிங்க்ளாஸை இறக்கி டாடா செல்வதாகட்டும்.. சரண்யா - சக்ஸஸ்யா!

படத்தின் முதல்பாதி ஆமைவேகம். நடிப்பது தெரிய, நடித்திருக்கிறார்களோ என எண்ண வைக்கிறது ஆரம்பகாட்சிகள். இடைவேளை வரை மெதுவாக நகரும் படம், இரண்டாம்பாதியில் நம்மை என்கேஜ்டாக்குகிறது. அதுவும் ராணாவின் ஃப்ளாஷ்பேக் தெரிந்து, ஸ்ரீதிவ்யா எடுக்கும் முடிவு லைக்ஸ் அள்ளுகிறதென்றால், பார்வதி - ஆர்யாவின் ‘ஐ லவ் யூ’ சொல்லிக் கொள்ளாத ரொமாண்டிக் மீட்டிங்குகள் ரீஷேர் செய்யத் தூண்டுகிற ரகம்.

குகனின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. ஆனால் இசையில் ஏதோ மிஸ்ஸிங்.

இயக்குனராக பொம்மரில்லு பாஸ்கருக்கு தமிழில் முதல் படம். ஆனால் பாஸ், அதே கதை. அதே காட்சிகள் மலையாளத்தை அப்படியே பிட் அடித்திருக்க வேண்டாம். துல்கரின் கேரக்டரை Graffitiயாக மலையாளத்தில் சித்தரித்திருப்பார்கள். அதாவது நாடோடியாக செல்லுமிடமெல்லாம் சுவற்றில் அனுமதி இல்லாமல் சித்திரம் வரைந்துவிட்டு போலீஸிடமிருந்து ஓடும் பாத்திரம்.

இதில் ஆர்யா செல்ஃபி ப்ரியராக வருகிறார். ஆபத்தான இடங்களிலெல்லாம் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார். அது ஒன்றுதான் வித்தியாசம் என்றாலும், துல்கரின் கேரக்டரை அந்தப் பாத்திரம் பதியவைக்கிற அளவு செல்ஃபி ப்ரியராக ஆர்யாவின் பாத்திரத்தில் அழுத்தம் இல்லை. இப்பொதெல்லாம் எல்லாருமே அப்படித்தானே இருக்கிறார்கள் என்பதாலும்கூட இருக்கலாம்.

ஒரு க்ராண்ட் எக்ஸிபிஷனை எதிர்பார்த்து போனால், வெறும் ப்ளாஸ்டிக் கடைகளும், சின்னச் சின்ன ராட்டினங்களும் இருக்கிற அரசாங்க கண்காட்சியாக இருக்குமே... அப்படித்தான் இருக்கிறது. ஆனாலும் அதிலொன்றும் குறையில்லைதான். நல்ல கதை, இடைவேளைக்குப் பின்னான வேகம் ஆகியவை படத்தை காப்பாற்றுகிறது. படத்தின் முதல்பாதி நீளத்தை மட்டும் கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால், இன்னும் பட பட பட்டாசாக வந்திருக்கும்.
மேலும் வாசிக்க…

டைரக்டர் நடிகை லவ் குறுக்கே கட்டைய போடும் விஷால்..!!

9:15 PM |
“யாரு வேணும்னாலும் யாரை வேணும்னாலும் காதலிச்சுட்டு போகட்டும், அல்லது கவனிச்சுட்டு போகட்டும்… அடியேனுக்கென்ன?’’ என்று போவது நட்புக்கு அழகா? நல்ல நட்புக்கு அது அழகில்லை அல்லவா? அதற்காகதான் குறுக்கே விழுந்து கட்டையை போட்டிருப்பார் போலும் என்று விஷால் பற்றி குஷாலாகிறது கோடம்பாக்கம். ஆனால், “ஹீரோ இப்படி பிடிவாதம் பிடிச்சா, நாங்கள்லாம் எப்போ நல்ல மாதிரி சிரிக்கறது?” என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாராம் குட்டிப்புலி முத்தையா. இவரது முதல் படத்தில் லட்சுமிமேனன்தான் ஹீரோயின்.

அதற்கப்புறம் இவர் இயக்கிய ‘கொம்பன்’ படத்திலும் லட்சுமிமேனனையே நடிக்க வைத்தார் முத்தையா. ஒரு குயர் நோட்டுக்கு இப்படி ரெண்டு குயர் சைசுக்கு அட்டை போட்ட பின்பும் அடங்கவில்லை அவரது ஆசை. தொடர்ந்து மூன்றாவது படத்திலும் லட்சுமிமேனனை ஹீரோயினாக்கிவிட வேண்டும் என்று துடியாய் துடித்தாராம். ஆனால் அந்த மூன்றாவது படமான ‘மருது’ படத்தின் ஹீரோ விஷாலாச்சே? லட்சுமிமேனன் வேண்டாம் என்று அவர் பிடிவாதம் பிடிக்க, “எனக்காக ப்ளீஸ்…” என்று முத்தையா கெஞ்ச, சூழ்நிலை சூடாகவே இருந்தது பல நாட்களுக்கு. கடைசியில் விஷாலுக்குதான் வெற்றி. லட்சுமிமேனன் இருக்க வேண்டிய இடத்தில் ஸ்ரீதிவ்யா நடித்துக் கொண்டிருக்கிறார் இப்போது.

படப்பிடிப்பில் சகஜமாக இருந்தாலும், லட்சுமிமேனன் இல்லாத ஷுட்டிங் ஸ்பாட், முத்தையாவை என்னவோ பண்ணியிருக்க வேண்டும். நடுவில் விக்ரம் பிரபுவுக்கு கதை சொல்லி ஓ.கே பண்ணியவர், “இந்த படத்தில் உங்களுக்கு ஜோடியா லட்சுமிமேனன்தான் நடிப்பார். நீங்க முடியாதுன்னு சொல்லவே கூடாது” என்று கூறிவிட்டாராம் கட் அண்டு ரைட்டாக. ஆக நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி. முத்தையாவின் நான்காவது படத்துக்கும் கதாநாயகி லட்சுமிமேனனேதான்!

இப்ப என்னா பண்ணுவீங்க? விஷால்… இப்ப என்னா பண்ணுவீங்க?
மேலும் வாசிக்க…

ஸ்ரீதிவ்யா இவ்வளவு பேசுவாரா? அசந்துபோன ஆர்யா..!!

12:59 AM |
பாஸ்கர் இயக்கத்தில் கோபி சுந்தர் இசையில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, ராய் லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்துள்ள பெங்களூர் நாட்கள் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய நடிகை ஸ்ரீ திவ்யா படக்குழுவினர் அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். பின்னர் பேசவந்த ஆர்யா, ” இன்று ஒரு அதிசயம் நடந்துள்ளது. ஸ்ரீ திவ்யாவால் இவ்வளவு பேச முடியுமா என்பது எனக்கு இன்றுதான் தெரியவந்துள்ளது.

விழாவுக்குள் அவர் நுழைந்ததும் கோபி சுந்தர் யார் என்று பாபி சிம்ஹாவிடம் கேட்டார். பின்னர் மேடையேறி பேசியபோது கோபி சுந்தருடன் பல காலம் பழகியது போல் அவரை புகழ்ந்து தள்ளினார். அவர் இவ்வளவு நேரம் பேசியதில் எனக்கு மகிழ்ச்சி” என்றார்.
மேலும் வாசிக்க…

அஜித் எனக்கு செட்டாக மாட்டார்- ஸ்ரீதிவ்யா அதிரடி பதில்..!!

10:46 PM |
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஈட்டி ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீதிவ்யா. இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் பெங்களூர் நாட்கள்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்து இவர் பேட்டியளிக்கையில் இவரிடம் விஜய்-அஜித் இதில் உங்கள் முதல் சாய்ஸ் யார்? என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ’எப்படியாவது இரண்டு பேருடனும் நடிக்க ஆசை தான், ஆனால், அஜித் சாருக்கு நான் செட்டாவேனா என்று தெரியவில்லை.
வேதாளம் படத்தில் கூட அவருக்கு தங்கச்சியாக நடிக்க அழைத்தார்கள்.

அஜித் சாருக்கு எப்படி தங்கச்சியாக நடிப்பது, அதனால் மறுத்து விட்டேன்’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

'ஈட்டி' வெற்றியை அடுத்து சுறுசுறுப்பாகும் அதர்வாவின் அடுத்த படம்..!!

9:59 PM |
அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் நேற்று வெளியான 'ஈட்டி' திரைப்படம் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அதர்வாவின் அடுத்த படமான 'கணிதன்' படத்தை விரைவில் முடித்து ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதர்வா, மெட்ராஸ்' நாயகி கேத்தரின் தெரசா, கே.பாக்யராஜ், சத்யராஜ், நாசர், மனோபாலா, கருணாகரன், ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரா உள்பட பலர் நடித்துள்ள 'கணிதன்' திரைப்படத்தை விரைவில் முடிக்க இயக்குனர் சந்தோஷ் தீவிர முயற்சியில் உள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைத்துள்ளார்.

இந்த படம் அனேகமாக வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சயின்ஸ் பிக்சன் படம் என்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

ஈட்டி திரை விமர்சனம்..!!

9:34 PM |
போலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ் தஞ்சாவூரில் தனது மனைவி, மகன் அதர்வா மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். அதர்வாவின் உடம்பில் ஒரு குண்டூசி குத்தினால்கூட ரத்தம் நிற்காமல் செல்லும். கொஞ்சம் ஆழமாக குத்தினால் அவரின் உயிருக்கே ஆபத்தாக அமையும். இதை அதர்வா சிறு வயதில் இருக்கும்போதே தெரிந்துகொண்ட ஜெயப்பிரகாஷ் அவரை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.

விளையாட்டில் அதிக கவனம் செலுத்தினால் அதர்வாவின் பிரச்சினையை ஓரளவு சரிசெய்யலாம் என்று அவரை விளையாட்டில் அதிக ஆர்வம் காட்ட வைக்கிறார் ஜெயப்பிரகாஷ். கல்லூரி படிக்கும் அதர்வா, தடகள பயிற்சியாளர் ஆடுகளம் நரேன் மூலம் தடகள வீரராக உருவெடுக்கிறார். அதன்பின்னர் விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் அதர்வாவை போலீஸ் அதிகாரியாக்க முயற்சிக்கிறார் ஜெயப்பிரகாஷ்.

இந்நிலையில், அதர்வாவுக்கு ராங் கால் மூலம் சென்னையில் இருக்கும் ஸ்ரீதிவ்யாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. இந்த சமயத்தில் தடகள இறுதி போட்டிக்காக சென்னைக்கு வருகிறார் அதர்வா. சென்னை வந்தவுடன் ஸ்ரீதிவ்யாவை சந்திக்க செல்கிறார் அதர்வா.

இதற்கிடையில், ஸ்ரீதிவ்யாவின் அண்ணனான திருமுருகனுக்கும் கள்ள நோட்டு கும்பலுக்கும் விரோதம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் ஸ்ரீதிவ்யாவிற்காக அதர்வா தலையிடுகிறார். இதனால் கள்ள நோட்டு கும்பல் அதர்வாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்கள். மேலும் அதர்வாவிற்கு சிறு காயம் பட்டால்கூட உயிரிழந்து விடுவான் என்பதை அந்தக் கும்பல் தெரிந்துக் கொள்கிறது.

இறுதியில் அதர்வா அந்த கும்பலிடம் தப்பித்து திட்டமிட்டபடி தடகள போட்டியில் கலந்துக் கொண்டாரா? அவரது தந்தையின் லட்சியம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் அதர்வா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தடகள வீரருக்கு உண்டான உடலமைப்புக்காக அதிகமான உழைத்திருக்கிறார் என்று தெளிவாக தெரிகிறது. இவருடைய உழைப்புக்கு பலன் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம். அப்பாவின் லட்சியத்திற்காக போராடுவது, காதலிக்காக கள்ள நோட்டு கும்பலை எதிர்ப்பது என சிறப்பாக நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யா ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பொறுப்பான அப்பாவாக ஜெயப்பிரகாஷ், ஊக்கம் கொடுக்கும் பயிற்சியாளராக ஆடுகளம் நரேன் ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

விளையாட்டை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்த படத்தை சற்று வித்தியாசமான கோணத்தில் இயக்கி சபாஷ் பெற்றிருக்கிறார் இயக்குனர் ரவி அரசு. சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடருந்து அழகான நடிப்பை வாங்கியிருக்கிறார். படம் முழுக்க ரசிக்க வைத்த இயக்குனர் திரைக்கதையை சிறிது சுருக்கியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ரசிக்கும் விதம். பின்னணி இசையை சிறப்பாக கொடுத்திருக்கிறார். சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘ஈட்டி’ கூர்மை
மேலும் வாசிக்க…

ராசியான நடிகையுடன் கைகோர்க்கும் விஷால்..!!

2:04 AM |
நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று சமீபத்தில் பதவியேற்ற நடிகர் விஷால், நடிகர் சங்க பணிகளுடன் தனது அடுத்த படத்தின் பணிகளையும் தொடங்கிவிட்டார்.

விஷால் நடிக்கவுள்ள அடுத்த படத்தை 'குட்டிப்புலி', 'கொம்பன்' படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்கவுள்ளார். 'மருது' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படமும் கிராமிய கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம்', ஜீவா', காக்கிச்சட்டை ஆகிய வெற்றி படங்களில் நடித்து ராசியான நடிகை என்ற பெயர் பெற்ற ஸ்ரீதிவ்யா இந்த படத்தில் இணைந்துள்ளது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

நீ தட்டிப் பறிச்சா.. நான் எட்டிப் பிடிப்பேன்.. கவர்ச்சிப் போட்டியில் குதித்த ஸ்ரீதிவ்யா, கீர்த்தி..!!

1:59 AM |
யார் அதிகமாகக் கவர்ச்சி காட்டி நடிப்பது என்பதில் தமிழின் இளம் நாயகிகளான கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதிவ்யா இடையே கடுமையான போட்டி உருவாகியிருக்கிறதாம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் தமிழ்நாட்டின் வாலிபர்கள் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு, அடுத்தடுத்த படங்கள் சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை.இந்நிலையில் ரஜினிமுருகன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதிவ்யாவிற்கு வரவேண்டிய 2 பட வாய்ப்புகளை தட்டிப் பறித்து விட்டாராம்.

ஸ்ரீதிவ்யாவை விட அதிக கவர்ச்சி காட்டி நடிக்க நான் தயார்'' என்று கூறி, அந்தப் பட வாய்ப்புகளை கீர்த்தி சுரேஷ் பிடித்ததாக கூறப்படுகிறது.இதைக் கேள்விப்பட்டதும்,கீர்த்தி சுரேசை விட அதிக கவர்ச்சியாக நடிக்க நான் தயார்'' என்று ஸ்ரீதிவ்யா அறிவித்து இருக்கிறாராம். இதனைக் கேள்விப்பட்ட திரையுலகினர் சபாஷ் சரியான போட்டி என்று இருவரின் போட்டியையும் ரசிக்கத் தயாராகி வருகிறார்களாம்.

ரஜினிமுருகன் வெளிவராத நிலையிலும் கூட கீர்த்தி சுரேஷின் கைகளில் ஏராளமான பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் தான் மணிரத்னம் படத்திலிருந்து கூட கீர்த்தி சுரேஷ் விலகினார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வாசிக்க…

புதிய படங்களில் கவர்ச்சியாக நடிக்கும் ஸ்ரீதிவ்யா..!!

7:32 AM |
‘வருத்தப்படாத வாலிபர்சங்கம்’, ஜீவா படங்களில் பள்ளிக்கூட மாணவியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இப்போது அதர்வா ஜோடியாக ஈட்டி படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து வருகிறார்.

புதிய படங்களில் கவர்ச்சியாகவும் நடிக்கிறார். இது பற்றி ஸ்ரீதிவ்யாவிடம் கேட்ட போது....

‘சிவகார்த்திகேயனுடன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ‘காக்கிசட்டை’ படமும் நன்றாக ஓடியது. இப்போது, அதர்வாவுடன் ‘ஈட்டி’ படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். வாழ்க்கையில் எனக்கு கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தபடத்தில் கல்லூரி மாணவியாக நடித்தது புதிய அனுபவமாக இருந்தது.

தற்போது ஈட்டி தவிர அர்ஜூன், கார்த்தி ஆகியோருடனும் வேறு இரண்டு படங்களிலும் நடித்து வருகிறேன்.

புதிய படங்களில் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப கவர்ச்சியாக நடிக்கிறேன். இன்றைய இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப நடிக்க வேண்டும். அதற்காகவே இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். இப்போது நடித்து வரும் படங்களில் எனக்கு நல்ல பாத்திரங்கள் கிடைத்துள்ளன. இதில் நடிப்பதன் மூலம் எனது நடிப்பு திறமை மேலும் வெளிப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிரடி படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அந்த வாய்ப்பும் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com