விஷாலுடன் பாண்டியநாடு, பாயும்புலி, பூஜை, மருது ஆகிய படங்களைத் தொடர்ந்து கத்திச்சண்டை படத்திலும் காமெடியனாக நடித்துள்ளார் சூரி. இதில் கத்திச்சண்டை படத்தில் வடிவேலுவும் காமெடியனாக நடித்துள்ளார். என்றாலும், அவருக்காக சூரியை டம்மி பண்ணவில்லையாம். விஷால் படங்களில் பெரும்பாலும் சூரியின் காமெடி மேலோங்கி நிற்பது போன்று இந்த படத்திலும் குறைவில்லாமல் இடம்பெற்றிருக்கிறதாம்.
மேலும், கத்திச்சண்டையில் பல காமெடி காட்சிகளில் ஆங்கில வார்த்தைகளை கலந்து பேசியிருக்கிறாராம் சூரி. ஆனால் தப்பு தப்பாக வார்த்தைகளை பேசி மாட்டிக் கொள்வாராம். அந்த காட்சிகள் தியேட்டர்களில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்குமாம். மேலும், காமெடி காட்சிகளில் விஷாலும் சூரியுடன் டிராவல் செய்தபோதும், அவரை பேசவே விடாமல் தான் மட்டுமே அதிகமாக ஸ்கோர் செய்துள்ளாராம் சூரி.
இந்த தகவலை தெரிவித்துள்ள விஷால், இதுவரை எனது படங்களில் செய்த காமெடியை விட இந்த கத்திச்சண்டை படத்தில் காமெடி காட்சிகளில் அதிரடியாக நடித்திருக்கிறார் சூரி. அவரது நடிப்பு பிரமாதமாக இருந்ததால் அவருக்கு விட் டுக்கொடுத்து நடித்தேன். அதனால், காமெடி காட்சிகளில் சூரி இஷ்டத்துக்கு விளையாடியிருக்கிறார் என்கிறார்.
Tags:
Cinema
,
கத்திச்சண்டை
,
சினிமா
,
சூரி
,
பாயும்புலி
,
பூஜை
,
மருது
,
விஷால்