இயக்குநர் முருகதாஸ் கைது..!!

9:32 AM |
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து 2014 இல் வெளியான கத்தி படம் இன்னும் சிக்கல்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அந்தப்படத்தின் கதை தன்னுடையது என்று மீஞ்சூர்கோபி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதன்பின் தஞ்சையைச் சேர்ந்த அன்புஇராசசேகர் என்பவர் இது தன்னுடைய தாகபூமி என்கிற குறும்படத்தை அப்பட்டமாகத் திருடித்தான் முருகதாஸ் கத்தி படத்தை எடுத்தார் என்று குற்றம் சாட்டினார்.

அது தொடர்பாக தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் மதுரையில் ஒரு வழக்கும் நடந்துகொண்டிருக்கிறது. அப்படம் வெளிவந்த சில நாட்களில் விசயமறிந்து தன்னுடைய போராட்டத்தைத் தொடங்கிய அன்புஇராசசேகருக்கு முருகதாஸ் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லையாம். அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியும் பதில் இல்லை, சந்திக்க முயன்றும் முடியவில்லை என்பதற்குப் பிறகு நீதிமன்றம் போயிருக்கிறார் அன்புராசசேகர். இதற்கிடையே அவருக்கு ஆதரவாக தஞ்சைவிவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த பலர் ஒருங்கிணைந்து முருகதாஸைக் கைத் செய்யவேண்டும் என்கிற கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் நடத்தவிருக்கிறார்கள்.

இதுபற்றி அன்புஇராசசேகரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, விவசாய அமைப்பினர் எனக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி, கத்தி வெளிவந்தபின் அதைப் பார்த்ததிலிருந்து மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி அதற்கான நீதி கேட்டுப் போராடிக்கொண்டிருக்கிறேன், இதுவரை அவர்கள் தரப்பிலிருந்து எந்தப்பதிலும் இல்லை, இதுபோன்றதொரு சிந்தனைத் திருட்டு இனிமேல் நடைபெறாத வண்ணம் இந்தத் திருட்டைச் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பது என் கோரிக்கை என்று சொல்கிறார்.

கத்தி படச்சிக்கல் நீதிமன்றத்திலிருந்து மக்கள் மன்றத்திற்கு வந்திருக்கிறது. முருகதாஸ் என்ன சொல்லப்போகிறார்?
மேலும் வாசிக்க…

தாகபூமி குறும்படத்தின் கதையை திருடி கத்தி படம் எடுத்ததாக புகார்..!!

2:44 AM |
தாகபூமி என்ற குறும்படத்தின் கதையை திருடி கத்தி படம் எடுத்ததாக, இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சார்பில் தஞ்சையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.


காவிரி தண்ணீர் கிடைக்காமல் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பொய்த்து, விவசாயிகள் தற்கொலை செய்யும் கதையை, அன்புராஜசேகர் என்ற இளைஞர், தாகபூமி என்ற பெயரில் குறும்படம் எடுத்துள்ளார்.

இந்த படத்தின் கதையை திருடி, கத்தி படம் எடுத்ததாக, இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்ககோரி தஞ்சையில் விவசாயிகள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

மேலும் வாசிக்க…

விஜய், அஜித்துக்கு பிறகு அதர்வா தான் – ஏ.ஆர்.முருகதாஸ் புகழாரம்..!!

12:51 AM |
அறிமுக இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் அதர்வா, கேத்தரின் தெரசா நடித்திருக்கும் கணிதன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்,  முரளி சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். காரணம் அவர் தனது கேரியரில் பல புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதேபோல் விஜய், அஜித்தும் தனது கேரியரில் பல புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு அடுத்து அதர்வா தான் தற்போது இளம் இயக்குனர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அவர் தொடர்ந்து இதை செய்து வரவேண்டும் என கூறியுள்ளார்.

இப்படத்தின் இயக்குனர் சந்தோஷ், ஏழாம் அறிவு, துப்பாக்கி படங்களின் போது ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

விஜய்யின் ‘துப்பாக்கி 2’ உறுதியானது..!!

7:23 PM |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக அஜித் அல்லது விஜய்யை வைத்து தமிழில் ஒரு படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை இயக்கபோவதாக அறிவித்தார்.

இந்நிலையில் மகேஷ் பாபு படத்தை தொடர்ந்து இவர் மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைக்கப் போவதகவும் இது துப்பாக்கி இரண்டாம் பாகமாக இருக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படத்தை கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
மேலும் வாசிக்க…

விஜய்’க்காக‘ அஜித் ரசிகர்களை’ திட்டி தீர்த்தார் "முருகதாஸ்" - அதிர்ச்சி வீடியோ!!!

6:24 AM |


விஜய்’க்காக‘ அஜித் ரசிகர்களை’ திட்டி தீர்த்தார் "முருகதாஸ்" - அதிர்ச்சி வீடியோ!!! 
AR.Murugadoss hits Back at the Protestors With Sensible Questions | Interview | Vijay, Samantha

மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com