தாகபூமி என்ற குறும்படத்தின் கதையை திருடி கத்தி படம் எடுத்ததாக, இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சார்பில் தஞ்சையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
காவிரி தண்ணீர் கிடைக்காமல் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பொய்த்து, விவசாயிகள் தற்கொலை செய்யும் கதையை, அன்புராஜசேகர் என்ற இளைஞர், தாகபூமி என்ற பெயரில் குறும்படம் எடுத்துள்ளார்.
இந்த படத்தின் கதையை திருடி, கத்தி படம் எடுத்ததாக, இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்ககோரி தஞ்சையில் விவசாயிகள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
Tags:
Cinema
,
கத்தி
,
சினிமா
,
தாகபூமி
,
முருகதாஸ்
,
விஜய்