பரதன் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் விஜய் 61 படத்தை ‘ஜெயம்’ ராஜா இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
‘இளையதளபதி’ விஜய்க்கு தமிழகத்தை போலவே கேரளாவிலும் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. ஜில்லா படத்தில் இவர் ஏற்கனவே மோகன்லாலுடன் இணைந்து நடித்துவிட்டார். எனவே அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பு தற்போது விஜய், மம்முட்டி இணையும் படத்துக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
Cinema
,
சினிமா
,
மம்முட்டி
,
மம்முட்டியுடன் இணையும் விஜய்
,
விஜய்