‘தாரை தப்பட்டை’ படம் பார்த்த அனைவரும் ஒரு பக்கம் பாலாவை கிழித்து கூறுபோட்டுக்கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் வரலெட்சுமியை (அதாங்க..நம்ம வரூ) புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதாவது ‘ஆபரேஷன் ஃபெயிலியர், பேஷண்ட் பிழைச்சாச்சு..!’ கதைதான். ஆனால் இந்த ஆபரேஷன் செய்துகொள்வதற்காக வரலெட்சுமி என்னென்ன செய்திருக்கிறார் தெரியுமா..?
2011-இல் பாலாவின் ‘அவன் இவன்’ வெளியாகி, படு கேவலமான விமர்சனத்தை சந்திருந்த நேரம் அது. பாலா, அடுத்ததாக தான் என்ன செய்யலாமென மோட்டுவளையை பார்த்துக்கொண்டிருந்தபோது, ‘எரியும் பனிக்காடு’ நாவலை படமாக்கும் எண்ணம் வந்தது. உடனே அதற்கான வேலைகளில் முழுமூச்சாக இறங்கினார். ஹீரோவாக தனது நலம் விரும்பியான முரளியின் மகனை ஒப்பந்தம் செய்தார். ஹீரோயினாக நடிக்க அப்போது ‘மதராசப்பட்டிணம்’ மினுமினுப்பில் இருந்த எமி ஜாக்சனை அணுகினார் பாலா. என்ன நினைத்தாரோ எமி, ‘முடியவே முடியாது’ என திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இந்த நேரத்தில்தான் வரலெட்சுமி எண்ட்ரி. வரலெட்சுமி என்றால் அப்போது இண்டஸ்ட்ரிலேயேகூட யாருக்கும் அவ்வளவாக தெரியாது. 2008-இல் சிம்புவுடன் அவர் ‘போடா போடி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அந்தப்படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே நின்று திரும்ப தொடருமா தொடராதா என்ற குழப்பத்தில் இருந்த நேரம் அது. அந்த நேரத்தில் பாலா படத்தில் நடிக்க எமி மறுத்ததை வரலெட்சுமி அறிந்தார். கமிட் ஆன முதல் படத்தின் கதி என்ன ஆகுமோ என தெரியாத நிலையில் பாலா மாதிரியான ஒரு பிரபல இயக்குநரின் படத்தில் நடித்தால் தனக்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என எண்ணிய வரலெட்சுமி, வலியப்போய் பாலாவை சந்தித்தார்.
பாலாவும் அதர்வாவுக்கு ஜோடியாக வரலெட்சுமி நடிக்கும் வாய்ப்பைத் தந்தார். அடுத்தடுத்து அனைத்து வேலைகளும் துரிதமாக நடந்து படப்பிடிப்புக்கு செல்வதற்கும் பாலா தயாரானார். அதன்பிறகுதான் வரலெட்சுமிக்கு ஆரம்பித்தது வினை அவரது அப்பா சரத்குமாரின் மனைவி ராதிகா ரூபத்தில். ஷூட்டிங் செல்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு வரலெட்சுமிக்கு சில பல ஹோம் வொர்க்குகளையும் ரெஃபரன்ஸ்களையும் தருவதற்கு பாலா விரும்பினார்.
இந்த விஷயத்தை தன்னுடைய மேனேஜரிடம் சொல்லி வரலெட்சுமியை தனது அலுவலகத்துக்கு வரவைக்க சொன்னார். இந்த விஷயமறிந்த ராதிகா, ‘டைரக்டரை நம்ம வீட்டுக்கே வர சொல்லிடுங்க.. எதுவாயிருந்தாலும் வீட்டுலேயே நடக்கட்டும்’ என்றிருக்கிறார். விஷயத்தைக் கேள்விபட்டு டென்ஷனான பாலா, ராதிகாவுக்கு போன் போட, ராதிகா கூலாக போனிலும் அதே பதிலை சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான் பாலாவுக்கு வந்ததே கோபம். படாரென போனை கட் செய்தவர், மேனேஜரிடம் ‘அவ இனிமேல் இந்தப் படத்துல கிடையாது.. வேற ஆளைப் பாருங்க’ என கடுகடுத்தார். அதன்பிறகுதான் அவசரம் அவசரமாக வேதிகாவை ஒப்பந்தம் செய்தனர்.
‘பாலா படத்துல நடிக்கப்போறோம்.. ஓவர் நைட்ல ஃபேமஸாகப்போறோம்’ என கனவு கண்டுகொண்டிருந்த வருவுக்கு ‘பாலா படத்தில் வேதிகா’ என்ற செய்தி கடும் அதிர்ச்சியைத் தந்தது. உடனடியாக பாலா அலுவலகத்தை தொடர்புகொண்டார் ஆனால் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. ஆனால் இதற்கெல்லாம் காரணம் தன் அப்பா சரத்குமாரின் மனைவி ராதிகாதான் என்ற உண்மை மட்டும் தெரிந்தது.
அவ்வளவுதான் விறுவிறுவென தனது அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டவர்தான், வெளியே வரவில்லை. சாப்பிட வரச்சொல்லி வேலைக்காரர்கள் எவ்வளவோ கெஞ்சியும் கதவை திறக்கவில்லை. ‘வரமுடியாது’ என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். விஷயமறிந்து பதட்டமான சரத்குமாரும் ராதிகாவும் அவசரம் அவசரமாக வீட்டுக்கு வந்து வருவின் அறை கதவை தட்டியிருக்கின்றனர். எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. இப்படியே ஒருவேளை இல்லை இரு வேளை இல்லை இரண்டு நாட்கள் பச்சைத் தண்ணீர்கூட குடிக்காமல் அந்த அறைக்குள்ளேயே கிடந்தார் வரலெட்சுமி. ‘சின்ன தம்பி’ குஷ்பு மாதிரி கண்ணாடி சில்லுகளில் நடக்காததுதான் பாக்கி. சரத்குமாரும் ராதிகாவும் எவ்வளவோ கெஞ்சியும் வேலைக்கு ஆகவில்லை.
இறுதியாக ராதிகா, ‘அம்மா செஞ்சது தப்புதான்மா.. என்னை மன்னிச்சுடு.. தயவுசெஞ்சு வந்து சாப்பிடும்மா..’ என அழுதுக்கொண்டே கெஞ்ச, உள்ளிருந்து வரலெட்சுமியின் குரல் வந்தது. ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது.. நான் பாலா சார் படத்துல நடிச்சே ஆகணும்.. அப்போதான் சாப்பிடுவேன்’ என்றார் திட்டவட்டமாக.
உடனே ராதிகா, விழுந்தடித்து பாலா அலுவலகத்துக்குப்போய், காத்திருந்து பாலாவை சந்தித்து நடந்த அனைத்தையும் கூறி மன்னிப்பும் கேட்டார். தன் படத்தில் நடிப்பதற்காக ஒரு பெண் இவ்வளவு தூரம் தன்னை வருத்திக்கொள்வதை அறிந்த பாலா, தன் கோப தாபத்தையெல்லாம் மறந்துவிட்டு உடனே வரலெட்சுமி மொபைலுக்கு போன் போட்டார். ‘அடுத்த படத்துல நீதான் ஹீரோயின்.. ரூமை விட்டு வெளியில வா’ என கேட்டுக்கொண்டதற்கு பிறகே வரலெட்சுமி அறையிலிருந்து வெளியில் வந்தார்.
அதன்பிறகு ‘தாரை தப்பட்டை’ படத்தில் அவர் நடித்ததும் படம் ஊத்திக்கொண்டாலும் வரலெட்சுமிக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்ததும் அனைவரும் அறிந்ததே.
இப்போ புரியுதா ஏன் இப்படி டைட்டில் வெச்சிருக்கோம்னு..?
Tags:
Bala
,
Cinema
,
Varalaxmi
,
சினிமா
,
தாரை தப்பட்டை
,
பாலா
,
வரலெட்சுமி