'தாரை தப்பட்டை' படத்தில் சில வசனங்கள் மற்றும் காட்சிகளை நீக்கினால் 'யு/ஏ' சான்றிதழ் என்பதை ஏற்க பாலா மறுத்து விட்டார்.
பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'தாரை தப்பட்டை'. இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை சசிகுமார் தயாரித்து வருகிறார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் ஐங்கரன் நிறுவனம், இப்படம் பொங்கலுக்கு வெளியீடு என்று அறிவித்திருக்கிறது.
'தாரை தப்பட்டை' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை திரையிட்டு காட்டினார்கள்.
படத்தின் சண்டைக் காட்சிகளில் வன்முறை அதிகமாக இருந்ததாலும், சில வசனங்களை நீக்கினால் 'யு/ஏ' சான்றிதழ் என்று சென்சார் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதனை இயக்குநர் பாலா ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
தனது கதையமைப்பில் உறுதியாக இருந்ததால், பாலாவின் முடிவுக்கு தமிழ் திரையுலக இயக்குநர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்திருக்கிறது.
Tags:
Cinema
,
சினிமா
,
தாரை தப்பட்டை
,
தாரை தப்பட்டைக்கு ஏ சான்றிதழ்
,
பாலா