அந்த நேரத்தில் என் உயிர் பிரியவேண்டும் நடிகை திரிஷா உருக்கம்..!!

12:19 AM |
திரிஷா அஜித், விஜய் , சூர்யா, விக்ரம், கமல் என பெரிய நடிகர்களோடு படங்களில் நடித்து விட்டார்.

நயன்தாரா வந்தபோது தமிழ் சினிமாவிற்கு வந்தாலும் இருவருமே நல்ல நண்பர்கள்.

சமீபத்தில் தனுசுடன் கொடி படத்தில் நடித்து ஹிட்டானதால் மிக மகிழ்ச்சியான அவர் திருமணம் குறித்த ரசிகர்களின் கேள்விக்கு பதில் தந்திருந்தார்.

எனக்கு திருமண ஆசை இல்லை. சினிமாவில் தொடந்து நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என கூறியிருந்ததார்.

தற்போது அவர் சினிமாதான் உயிர்மூச்சு எனவே நடித்து கொண்டிருக்கும் போதே உயிர் பிரியவேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

திருமணம் நின்று போனது கூட சினிமாவில் நடிப்பதற்காகத்தான் என கூறினார்.

மேலும் வாசிக்க…

சிம்புவுடன் தீடீர் நெருக்கம் காட்டி விஷாலை சீண்டிய வரலட்சுமி..!!

10:46 PM |
நடிகர் விஷாலுக்கும், வரலட்சுமிக்கும் இடையே காதல் இருந்ததாகவும், தனது தந்தை சரத்குமாரிடம் விஷால் முறைப்பு காட்டியதால், அந்த காதலுக்கு வரலட்சுமி முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும் தமிழ் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் வெற்றி விழாவை, அப்படத்தின் நாயகன் சிம்பு ஒரு நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினர். இதில் த்ரிஷா, வரலட்சுமி, ரம்யா கிருஷ்ணன், ஏ.ஆர்.ரகுமான், படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, திரிஷா, சிம்பு, வரலட்சுமி ஆகியோர் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்தனர். முக்கியமாக, சிம்புவும் வரலட்சுமியும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிம்புவும், வரலட்சுமியும் ‘போடா போடி’ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர்.

சிம்புவிற்கும், விஷாலுக்கு ஆகவே ஆகாது. விஷாலிடம் இருந்து வரலட்சுமி விலகிய நிலையில், சிம்புவிடம் அவர் நெருக்கம் காட்டி வருவது, விஷால்  தரப்பிற்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

நயன்தாராவுடன் பிரச்னை இருந்தது திரிஷா பரபரப்பு பேச்சு..!!

11:23 PM |
தனக்கும், நயன்தாராவுக்கும் இடையே ஒரு பிரச்சனை இருந்ததாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

ஜோடி படம் மூலம் கோலிவுட் வந்தவர் த்ரிஷா. அந்த படத்தில் ரிச் கேர்ளாக வந்த த்ரிஷா மவுனம் பேசியதே படம் மூலம் ஹீரோயின் ஆனார். 15 ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் நயன்தாரா.நானும், நயன்தாராவும் 10 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் உள்ளோம். எங்களுக்கு இடையே நிறைய பிரச்சனை உள்ளது என்று கூறப்படுவது எல்லாம் மீடியா உருவாக்கியது என்கிறார் த்ரிஷா.

எனக்கும், நயன்தாராவுக்கும் இடையே ஒரு தனிப்பட்ட பிரச்சனை இருந்தது. அது குறித்து நான் பேச விரும்பவில்லை.

அந்த பிரச்சனைக்கு தொழில் காரணம் அல்ல என்று த்ரிஷா தெரிவித்துள்ளார். எனக்கும், நயன்தாராவுக்கும் நன்கு தெரிந்த பொதுவான நண்பர்கள், நபர்களால் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. அப்படி இருந்தும் நாங்கள் மோதிக்கொள்ளவில்லை. இருவரும் ஒருவரையொருவர் பட ரிலீஸின்போது வாழ்த்துவோம் என்று த்ரிஷா கூறியுள்ளார்.

த்ரிஷா முதன்முறையாக தனுஷுடன் ஜோடி சேர்ந்த கொடி படம் ஹிட்டாகியுள்ளது. நயன்தாரா ராணியாக நடித்த காஷ்மோரா படம் ஹிட்டாகியுள்ளது. இதனால் இருவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
மேலும் வாசிக்க…

நான் தான் த்ரிஷாவுக்கு கணவனா? பிரமித்த பிரபல நடிகர்..!!

12:43 AM |
பிரபல நடிகை திரிஷா விரைவில் மற்றொரு படத்தில் மீண்டும் கதாநாயகியாக நடிக்க உள்ளார். திரில்லர் படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு கர்ஜனை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில், கல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் சின்னதிரை நடிகர் அமித் பார்கவ் திரிஷாவிற்கு கணவன் வேடம் ஏற்கிறார்.

இது குறித்து அமித் நம்மிடம் கூறுகையில், என் நண்பர் சுந்தர் தான் என்னை இந்த வேடத்திற்கு கர்ஜனை படத்தின் இயக்குனரிடம் சிபாரிசு செய்தார். நான் கல்யாணம் முதல் காதல் வரை நாடகத்தில் நடித்து வருவதால் ஒத்திகை பார்க்காமல் என்னை செலக்ட் செய்துவிட்டார் இயக்குனர். நான் த்ரிஷாவுக்கு கணவானாக நடிப்பதை என்னால் நம்ப முடியவில்லை, பிரம்மிப்பாக உள்ளது.

தற்போது, த்ரிஷா இல்லைதா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில், திரிஷாவின் தேதிகள் கிடைத்தவுடன் அவருடனான காட்சிகள் படமாக்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

சிம்புவுக்கு அம்மாவாகிறார் ஸ்ரேயா..!!

2:23 AM |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த படத்தில் ஒரு கெட்டப்பில்

நார்மலாகவும், இன்னொரு வேடத்தில் தாடி கெட்டப்பிலும், மற்றொரு வேடத்தில் 90 கிலோ வெயிட் போட்டும் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார் சிம்பு.

மேலும், இதில் ஒரு வேடத்தில் சிம்பு திருமணமானவராகவும், அவருக்கு பிறக்கும் ஒரு குழந்தை இன்னொரு சிம்பு போலவும் காட்சி உள்ளதாம். அதனால் அந்த சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க முதலில் திரிஷாவை அழைத்தனர். ஆனால் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஓகேதான்.

ஆனால் இன்னொரு சிம்பு வுக்கு அம்மாவாக நடிப்பதுதான் பிடிக்கவில்லை. அப்படி நடித்தால் என்னை அடுத்தடுத்து அம்மா வேடங்களுக்கு நடிக்க அழைத்து விடுவார்கள் என்று மறுத்து விட்டார்.

ஆனால் அந்த வேடத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடித்தால்தான் பொருத்த மாக இருக்கும் என்று பல முன்னணி நடிகைகளிடம் பேசி வந்தனர். இப்போது அந்த வேடத்துக்கு ஸ்ரேயா ஓகே சொல்லிவிட்டாராம்.

தற்போதைய நிலவரப்படி தமிழில் படவாய்ப்பு இல்லாத ஸ்ரேயா இது ஒரு என்ட்ரியாக இருக்கும் என்று நிக்கிறாராம். அதோடு, அவர் திரிஷ்யம் இந்தி ரீமேக்கிலும் தமிழில் கெளதமி நடித்த ரோலில் நடித்தவர். அந்த படத்தில் 16 வயது பெண்ணுக்கே அம்மாவாக நடித்த எனக்கு, இதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை எனறு கூறினாராம்.
மேலும் வாசிக்க…

திரிஷாவை அனுபவிச்சாச்சு இனி அம்மாவை அனுபவிக்கணும் - கமலஹாசன் ..!!

12:30 AM |
மெல்லிசான நம்பர் நடிகையும் அவருடைய அம்மா நடிகையும் ஒரு அரிசி  விளம்பரப் படத்தில் நடித்திருக்கிறார்களாம். அதைப் பார்த்துவிட்டு அம்மா மீது ஆர்வம் காட்டியவர்கள்தான் அதிகமாம்.

விண்ணைத் தாண்டி வந்த நம்பர் நடிகையை விட்டுவிட்டு, அம்சமாக இருக்கும் அவரது அம்மாவை நடிக்க வைத்தே தீருவது என்று களத்தில் குதித்த படைப்பாளிகளுக்கு ‘பாஸ்மதி’ அரிசியில் செய்த புலாவ்  சாதத்தைக்  கொடுத்து அனுபிவிடுகிறாராம் அழகு அம்மா.

“நான் அம்மாவாக நடிக்க விரும்பவில்லை. என் மகளுக்கு நல்ல அம்மாவாக மட்டுமே இருக்க விரும்புகிறேன் ” என்றும் கூறியிருக்கிறாம். இப்படி வாங்கிக் கட்டிக்கொண்டவர்களில், சீனியரான ஆல்ரவுண்டர்  நடிகரும் அடக்கமாம்.

நடிகர் அம்மாவிடம் தன் ஆல்ரவுண்டு வேலை காட்டியும் எதுவும் விர்க் அவுட் ஆகவில்லையாம். விட்டா சா பூ த்ரி போட்டு அம்மா பொண்ணை செலக்ட் பண்ணுவாங்களோ!
மேலும் வாசிக்க…

30 வயதை தாண்டியும் மவுசு குறையாத 4 நடிகைகள் ..!!

3:06 AM |

நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, காஜல் அகர்வால் ஆகியோரின் மவுசு 30 வயதை தாண்டியும் குறையவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது. இதனால் இளம் கதாநாயகிகள் படங்கள் இல்லாமல் தவிப்பில் உள்ளனர்.

கதாநாயகிகள்

கதாநாயகிகளின் சினிமா வாழ்க்கை 18 மற்றும் 20 வயதுகளில் ஆரம்பமாகிறது. நான்கைந்து ஆண்டுகள் நிலைத்து இருப்பார்கள். 25 வயதில் அவர்களை பட உலகம் ஓரம் கட்டிவிட்டு புதிய நடிகைகளை தேட ஆரம்பித்து விடும். இதுதான் திரையுலகில் சகஜமாக காணப்படும் நிலைமை. 30 வயது வரை நிலைத்து விட்டால், சாதனை. அந்த வயதையும் தாண்டினால் அதிர்ஷ்டம்.

இப்போது நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, காஜல் அகர்வால் ஆகிய 4 பேரும் அந்த அதிர்ஷ்டக்கார கதாநாயகிகள் பட்டியலில் இருக்கிறார்கள். 30 வயதை தாண்டினால் கதாநாயகியாக நிலைக்க முடியாது என்ற கணிப்பை இவர்கள் உடைத்து விட்டனர். 4 பேரும் கைநிறைய படங்கள் வைத்து ஒரு நிமிடமும் ஓய்வில்லாமல் நடிக்கின்றனர். இளம் கதாநாயகிகள் இவர்களுடன் போட்டியிட முடியாமல் தவிக்கின்றனர்.

நயன்தாரா

நயன்தாரா 30 வயதை தாண்டி இருக்கிறார். ஆனாலும் சினிமாவில் அவரது மார்க்கெட் குறையவில்லை. தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகி இவர்தான். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ந்து நம்பர்-1 இடத்தில் இருக்கிறார். கடந்த வருடம் நண்பேன்டா, மாஸ், தனிஒருவன், மாயா, நானும் ரவுடிதான் ஆகிய 5 படங்கள் இவர் நடித்து வந்தன. மலையாளத்திலும் பாஸ்கர் த ராஸ்கல் படம் வெளியானது.

இந்த வருடமும் அவரிடம் கைநிறைய படங்கள் இருக்கிறது. தமிழில் ஜீவாவுடன் திருநாள், சிம்புவுடன் இது நம்ம ஆளு, கார்த்தியுடன் காஷ்மோரா, விக்ரமுடன் இருமுகன் என்று 5 படங்கள் வைத்து இருக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவியின் 150-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அனுஷ்கா 

அனுஷ்கா 34 வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இவர் சினிமாவுக்கு வந்து 11 வருடங்கள் ஆகிறது. அனுஷ்காவுக்காகவே புதுபுது கதாபாத்திரங்களை இயக்குனர்கள் உருவாக்குகிறார்கள். 2015 அனுஷ்காவுக்கு மறக்க முடியாத வருடமாக அமைந்தது. பாகுபலி, ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி ஆகிய 3 படங்கள் வந்தன. பாகுபலியையும் ருத்ரமாதேவியையும் ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுத்து இருந்தனர். இவை சரித்திர படங்கள் என்பதால் ராணி வேடம், வாள் சண்டைகள் என்று கஷ்டப்பட்டார். இஞ்சி இடுப்பழகிக்காக உடம்பை குண்டாக்கினார்.

தற்போது சூர்யாவுடன் சிங்கம்-3 மற்றும் பாகுபலி இரண்டாம் பாகம் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தெலுங்கில் ‘பாக்மதி’ என்ற படத்தின் கதையை எழுதி அனுஷ்கா கால்ஷீட்டுக்காக காத்து இருக்கிறார்கள்.

திரிஷா

திரிஷா சினிமாவுக்கு வந்த புதிதில் எப்படி இருந்தாரோ அப்படியே 32 வயதிலும் இருக்கிறார். முகத்தில் முதிர்ச்சி தெரியவில்லை. முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இன்னும் இருக்கிறார். பட வாய்ப்புகளும் குவிகிறது. முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ‘நாயகி’ என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலுக்கு 30 வயது ஆகிறது. தமிழில் 2 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தெலுங்கில் பவன் கல்யாண், மகேஷ்பாபு ஆகியோருடன் நடிக்கிறார். இந்தியில் ஒரு படம் வைத்துள்ளார். முன்னணி கதாநாயகர்களோடு இளம் நாயகிகளை ஜோடிகளாக பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை இதனால்தான் இந்த 30 வயதை தாண்டிய 4 நடிகைகள் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசுகிறது.
மேலும் வாசிக்க…

டுவிட்டரில் திரிஷாவுக்கு எதிராக ரசிகர்கள் கண்டனம்..!!

3:02 AM |
நடிகை திரிஷா பிராணிகள் நல பாதுகாப்புக்கு குரல் கொடுத்து வருகிறார். வெறிபிடித்த தெருநாய்களை கொன்றுவிட மாநகராட்சி முடிவு எடுத்தபோது கண்டித்தார். அவற்றுக்கு ஊசி போட்டு இன பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்று யோசனை தெரிவித்தார். ஒரு தெரு நாயை தத்து எடுத்து வீட்டில் வளர்த்தும் வருகிறார்.

விலங்குகள் அமைப்பான பீட்டாவின் விளம்பர தூதுவராகவும் இருக்கிறார். ஜல்லிக்கட்டை இந்த அமைப்பு எதிர்த்தபோது, திரிஷா தமிழ் அமைப்புகளின் கண்டனத்துக்கு உள்ளானார். அந்த அமைப்பில் இருந்து அவர் விலக வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டன.

இந்த நிலையில், தற்போது குதிரையொன்றின் காலை உடைப்பது போன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள வீடியோவை பார்த்து அதிர்ச்சியாகி திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ படம் உத்தரகாண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட்டது. அங்குள்ள ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. முசோரி கணேஷ் ஜோஷி தலைமையில் டேராடூனில் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த குதிரைகளில் போலீசார் வந்து இருந்தனர். அப்போது போலீஸ்காரர் அமர்ந்து இருந்த ஒரு குதிரையின் காலை முசோரி கணேஷ் ஜோஷி எம்.எல்.ஏ. உருட்டுக்கட்டையால் மாறி மாறி அடிப்பது போன்றும் இதனால் அந்த குதிரை கால்கள் முறிந்து கீழே விழுவது போன்றும் அந்த வீடியோ படம் இருந்தது.இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

வீடியோவை திரிஷாவும் தனது டிவிட்டரில் வெளியிட்டு அதோடு கோபமாக தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார்.அதில், ஆம் உங்களை நரகத்தில் போட்டு எரிக்க வேண்டும். இதனை எனது பிரார்த்தனையாக வைக்கிறேன். இந்த சம்பவம் அசிங்கமான ஒன்று என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.எம்.எல்.ஏ.வை நரகத்தில் எரிக்க வேண்டும் என்று திரிஷா கூறியதற்காக அவரது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் பதிலடி கொடுத்து கருத்துக்கள் பதிவு செய்து உள்ளனர்.

ஒரு ரசிகர், குதிரை காலில் அடித்ததை திரிஷா எதிர்க்கிறார். ஆனால் சாதி வெறியால் ஒரு இளைஞர் வெட்டப்படும் வீடியோவை மட்டும் பார்ப்பார். உங்களுக்கு நல்ல மனித நேயம் திரிஷாஎன்று குறிப்பிட்டு உள்ளார்.

இன்னொரு ரசிகர் இதுபோல் கருத்து பதிவிடுவதால் திரிஷாவுக்கு விலங்குகள் அமைப்பில் இருந்து வருமானம் வருகிறது என்று கூறி உள்ளார்.

மற்றொரு ரசிகர் விலங்குகளுக்காக குரல் கொடுக்கும் திரிஷாவுக்கு கவுரவ கொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்க தைரியம் இல்லை. இது கோழைத்தனம் ஆகும்
மேலும் வாசிக்க…

திரிஷா நடித்ததிலையே மிகவும் கவர்ச்சியான பாடல்..!!

9:35 PM |
மேலும் வாசிக்க…

சிவகார்த்திகேயனுடன் நடிக்கத் தயார்: திரிஷா பேட்டி..!!

6:59 PM |
தற்போது வளர்ந்து வரும் நாயகன்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைந்து வருகின்றன. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ரஜினி முருகன்வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியிருக்கிறார்.

இந்நிலையில், திரிஷா சிவகார்த்திகேயனுடன் நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார். திரிஷா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் அரண்மனை 2. இப்படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளதை முன்னிட்டு ரசிகர்களுடன் டுவிட்டரில் லைவ்சாட் நடத்தினார்.

அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க மறுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதே, எதனால்? என்று கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த திரிஷா, இந்த செய்தியில் உண்மையில்லை. சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று கூறியுள்ளார். இதனை அறிந்த சிவகார்த்திகேயன் திரிஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க…

திரிஷா சபதம்!

2:25 AM |
திரிஷா திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது. இதனால், சில மாதங்களாக அவர் விரக்தியில் இருந்தார். விருந்துகளில் பங்கெடுப்பது, விழாக் களில் கலந்து கொள்வதை தவிர்த்தார். கவலையை மறக்க மீண்டும் நடிப்பில் தீவிரமானார். இப்போது அவர் முகத்தில், மீண்டும் பொலிவு. பழைய மகிழ்ச்சிக்கு மாறி இருக்கிறார்.

காதல், திருமணங்கள் பற்றி தைரியமாக கருத்து சொல்கிறார். தனது எதிர்காலம் பற்றியும் தெளிவாக பேசுகிறார். அவர் கூறும்போது, ''மறுபடியும் காதலில் விழ நான் தயாராக இருக்கிறேன். திருமண வயதில் இருக்கிறாய். உடனே கல்யாணத்துக்கு தயாராகு என்று யாரேனும் சொன்னால், அதை கேட்கமாட்டேன். மற்றவர்கள் விருப்பத்துக்காக என் குடும்ப வாழ்க்கையை முடிவு செய்ய மாட்டேன். எனக்கு பிடித்தவரை எப்போது சந்திக்கிறேனோ, அப்போது அவரை காதலிப்பேன். திருமணமும் செய்து கொள்வேன்'' என்றார்!
மேலும் வாசிக்க…

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நடிகர், நடிகைகள் விபரம்..!!

1:51 AM |
சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் வீடுகளின் இரண்டாவது மாடி வரை நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. இந்த வெள்ள பாதிப்புக்கு நடிகர்-நடிகைகளும் தப்பவில்லை.

கோடம்பாக்கம், வட பழனி, சாலிகிராமம், வளசரவாக்கம், ஈக்காட்டுதாங்கல் பகுதிகளில்தான் நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர்.

இந்த பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. அடையாறில் சீறிக்கொண்டு செல்லும் வெள்ளம் சைதாப்பேட்டையை மூழ்கடித்து தியாகராயநகர், கோடம்பாக்கம் பகுதிகளையும் புரட்டிப்போட்டது.

நடிகர், நடிகைகள் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அவர்கள் தவித்தனர். வீட்டின் முதல் தளத்தை காலிசெய்து விட்டு மாடிகளில் தஞ்சம் அடைந்தனர். தேனாம்பேட்டை செனட்டாப் ரோடு பகுதியில் உள்ள நடிகை திரிஷா வீட்டை வெள்ளம் சூழ்ந்தது. அண்ணாநகரில் உள்ள விஷால் மற்றும் ஆர்யா வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது.

நடிகர் சித்தார்த் தனது வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பெட்டி, படுக்கையுடன் மாடிக்கு சென்றார். வீட்டில் நுழைந்த மழை வெள்ளத்தை படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டார். அத்துடன் வாகனங்கள் ஏற்பாடு செய்து மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உணவு பொட்டலங்களும் வழங்கி வருகிறார். என் வீட்டில் வெள்ளம் புகுந்துள்ளது. மாடிக்கு செல்கிறோம். தமிழ் நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று டுவிட்டரில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

நடிகை குஷ்பு வீடு பட்டினப்பாக்கத்தில் உள்ளது. அவர் வீட்டின் முன்னால் ஆறுபோல் வெள்ளம் ஓடியது. அதனை பொருட்படுத்தாமல் வெள்ளத்தில் நடந்து சென்று பட்டினப்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கினார். அவர் கூறும்போது ‘தொடர்ந்து மழைபெய்ததால் மின்சாரம் இல்லை. குடிக்க தண்ணீர் இல்லை. சாப்பாடு இல்லை. இதனால் மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் எப்படித்தான் வாழப்போகிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.

தியாகராயநகரில் உள்ள சூர்யா, கார்த்தி, பிரபு வீடுகள் முன்பும் வெள்ளம் சூழ்ந்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள சத்யராஜ், நமீதா வீடுகள் முன்பும் வெள்ளம் ஆறாக ஓடியது.

போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகம் முன்பும் வெள்ளம் முழங்கால் அளவுக்கு மேல் ஓடியது. கோட்டூர்புரத்தில் உள்ள நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா வீட்டுக்குள் அடையாறு வெள்ளம் புகுந்தது.

விருகம்பாக்கம் பகுதியில் உள்ள நடிகர் விவேக் வீட்டையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. அவர் கூறும்போது ‘நான் ஐதராபாத்தில் சிக்கிக்கொண்டேன். சென்னை மக்களின் நிலை கண்டு எனது இதயத்தில் இரத்தம் வழிகிறது’ என்றார். தியேட்டர்களில் வெள்ளம் புகுந்ததால் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் வாசிக்க…

தூங்காவனம் விமர்சனம்

12:08 AM |
போலீஸ் அதிகாரியான கமல், பணத்திற்காக எந்த வேலையையும் செய்யக் கூடியவர். இந்நிலையில், போதைப் பொருள் கடத்தி வரும் பிரகாஷ் ராஜ்ஜிடம் இருந்து விலைமதிப்புள்ள போதைப் பொருளை திருடுகிறார். அதை பதுக்கி வைக்கும் போது மற்றொரு போலீசான திரிஷா பார்த்து விடுகிறார்.

போதைப் பொருளை திருடியதால் கமலின் மகனை பிரகாஷ் கடத்துகிறார். அவனை பணயக் கைதியாக வைத்துக் கொண்டு, திருடிய போதைப் பொருளை கேட்கிறார். மகனை மீட்கும் கட்டாயத்தில் இருக்கும் கமல், போதைப் பொருளை கொடுக்க நினைக்கிறார். ஆனால், அவர் பதுக்கி வைத்த இடத்தில் இருந்து போதைப் பொருள் காணாமல் போகிறது.

என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் கமல், எப்படி தன் மகனை மீட்டார்? அந்த போதைப் பொருளை எடுத்தது யார்? கமல் போதைப் பொருளை கடத்துவதற்கு காரணம் என்ன? என்பதே பரபரப்பான மீதிக்கதை.

‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ என இரண்டு சென்டிமென்ட் படங்களுக்குப் பிறகு மீண்டும் ஆக்‌ஷன் கதைகளில் நடித்திருக்கிறார் கமல். வழக்கமான
நேர்மை போலீஸ் போல் இல்லாமல் வித்தியாசமான போலீசாக நடித்திருக்கிறார். கமலின் நடிப்பை பற்றி சொல்ல தேவையில்லை. நடிப்பில் என்னை மிஞ்ச யாரும் இல்லை என்றளவிற்கு நடித்திருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் தனக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார்.

முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார் திரிஷா. போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். திரிஷாவின் நடிப்பில் இப்படம் முக்கிய இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார்.

படத்திற்கு பலமாக பிரகாஷ் ராஜ்ஜின் நடிப்பு அமைந்திருக்கிறது. இவருடைய காட்சிகள் அனைத்திலும் ரசிகர்களிடம் கைத்தட்டல் பெறுகிறார். கமலை ஆட்டி வைக்கும் காட்சிகளில் வெகுவாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மற்றொரு போலீசாக வரும் கிஷோர் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சம்பத், ஜெகன், ஆஷா சரத் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு பலம். படம் முடியும் போது இவ்வளவு சீக்கிரம் படம் முடிந்துவிட்டதாக, என்றளவிற்கு இயக்கியிருக்கிறார். கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஆக்‌ஷன் படத்தை மிகவும் ஸ்டைலீஷாக கொடுத்திருக்கிறார்.

ஜிப்ரான் இசையில் படத்தில் ஒரு பாடல்தான். வழக்கமான படத்தில் இடம் பெறும் பாடல் போல் இல்லாமல் உருவாக்கியிருப்பது சிறப்பு. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். சனு ஜானின் ஒளிப்பதிவு அருமை. குறிப்பாக கமல், திரிஷா, கிஷோர் மோதும் சண்டைக்காட்சி சிறப்பு.

மொத்தத்தில் ‘தூங்காவனம்’ ரசிகர்களை தூங்க விடவில்லை.
மேலும் வாசிக்க…

அடப்பாவமே திரிஷாவை இப்படி கலாய்ச்சிருக்காங்க!.. யாரு பார்த்த வேலைப்பா இது?..!!

2:18 AM |


அடப்பாவமே திரிஷாவை இப்படி கலாய்ச்சிருக்காங்க!.. யாரு பார்த்த வேலைப்பா இது?..!!





மேலும் வாசிக்க…

த்ரிஷாவிற்கு இணையத்தில் 40 லட்சம் ரசிகர்கள்..!!

1:30 AM |
தமிழ், தெலுங்கு திரை உலகில் கடந்த 13 ஆண்டுகளாக நிலையான இடத்தை பிடித்து இருப்பவர் திரிஷா. 2002–ல் ‘மௌனம் பேசியதே’ படத்தில் அறிமுகமான திரிஷா இன்றும் இளமை மாறாமல் இருக்கிறார். இவருக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

தற்போது திரிஷா 5 படங்களில் நடித்து வருகிறார். கமலுடன் நடித்து வெளிவர இருக்கும் ‘தூங்காவனம்’ திரிஷாவுக்கு 50–வது படம். இவருக்கு டுவிட்டர், பேஸ்புக்கில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல்வேறு தகவல்களை அவர்களுடன் திரிஷா பகிர்த்து கொள்கிறார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் சொல்கிறார். தன்னைப் பற்றிய விவரங்கையும் வெளியிடுகிறார்.

இதனால் திரிஷாவின் டுவிட்டர், பேஸ்புக்கில் அவரை தொடருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டுவிட்டரில் திரிஷாவை தொடரும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்து விட்டது. இதுபோல், பேஸ்புக்கில் இவரை தொடர்பவர்கள் எண்ணிக்கையும் 20 லட்சத்தை தாண்டி இருக்கிறது.

இந்த இரண்டு சமூக வலைத்தளங்களிலும் திரிஷாவை தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 40 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com