திரிஷா திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது. இதனால், சில மாதங்களாக அவர் விரக்தியில் இருந்தார். விருந்துகளில் பங்கெடுப்பது, விழாக் களில் கலந்து கொள்வதை தவிர்த்தார். கவலையை மறக்க மீண்டும் நடிப்பில் தீவிரமானார். இப்போது அவர் முகத்தில், மீண்டும் பொலிவு. பழைய மகிழ்ச்சிக்கு மாறி இருக்கிறார்.
காதல், திருமணங்கள் பற்றி தைரியமாக கருத்து சொல்கிறார். தனது எதிர்காலம் பற்றியும் தெளிவாக பேசுகிறார். அவர் கூறும்போது, ''மறுபடியும் காதலில் விழ நான் தயாராக இருக்கிறேன். திருமண வயதில் இருக்கிறாய். உடனே கல்யாணத்துக்கு தயாராகு என்று யாரேனும் சொன்னால், அதை கேட்கமாட்டேன். மற்றவர்கள் விருப்பத்துக்காக என் குடும்ப வாழ்க்கையை முடிவு செய்ய மாட்டேன். எனக்கு பிடித்தவரை எப்போது சந்திக்கிறேனோ, அப்போது அவரை காதலிப்பேன். திருமணமும் செய்து கொள்வேன்'' என்றார்!
Tags:
Cinema
,
சினிமா
,
திரிஷா
,
திரிஷா சபதம்