மெல்லிசான நம்பர் நடிகையும் அவருடைய அம்மா நடிகையும் ஒரு அரிசி விளம்பரப் படத்தில் நடித்திருக்கிறார்களாம். அதைப் பார்த்துவிட்டு அம்மா மீது ஆர்வம் காட்டியவர்கள்தான் அதிகமாம்.
விண்ணைத் தாண்டி வந்த நம்பர் நடிகையை விட்டுவிட்டு, அம்சமாக இருக்கும் அவரது அம்மாவை நடிக்க வைத்தே தீருவது என்று களத்தில் குதித்த படைப்பாளிகளுக்கு ‘பாஸ்மதி’ அரிசியில் செய்த புலாவ் சாதத்தைக் கொடுத்து அனுபிவிடுகிறாராம் அழகு அம்மா.
“நான் அம்மாவாக நடிக்க விரும்பவில்லை. என் மகளுக்கு நல்ல அம்மாவாக மட்டுமே இருக்க விரும்புகிறேன் ” என்றும் கூறியிருக்கிறாம். இப்படி வாங்கிக் கட்டிக்கொண்டவர்களில், சீனியரான ஆல்ரவுண்டர் நடிகரும் அடக்கமாம்.
நடிகர் அம்மாவிடம் தன் ஆல்ரவுண்டு வேலை காட்டியும் எதுவும் விர்க் அவுட் ஆகவில்லையாம். விட்டா சா பூ த்ரி போட்டு அம்மா பொண்ணை செலக்ட் பண்ணுவாங்களோ!
Tags:
Cinema
,
Trisha
,
கமலஹாசன்
,
சினிமா
,
திரிஷா
,
நடிகை
,
விளம்பரம்