சமீப காலமாகவே நடிகர் நடிகைகளின் தற்கொலை சினிமா உலகையும், சின்னத்திரை உலகையும் சோகமாக்கியுள்ளது. சென்ற வாரத்தில் கூட டிவி நடிகை பிரதியூஷாவின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.
CINTAA (cine&tv actors associations) இனி இது போன்ற இழப்புகளைத் தவிர்க்க மனநல மருத்துவர்கள் உதவிகளுடன் அலோசனைகள் கொடுக்கும் திட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் சர்ச்சை பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சவந்த் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்படி ஒரு ஐடியாவைக் கூறியுள்ளார். மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கையில் ஒரு சீலிங் ஃபேனுடன் வந்தார். இவர் தமிழில் ’கம்பீரம்’ படத்தின் “சம்பல் காட்டுக் கொள்ளக் காரி” , ’முத்திரை’ படத்தில் ”நைட் இஸ் ஸ்டில் யங்” என இரண்டுப் பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் ஐடியா இதுதான்...ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள சீலிங் ஃபேன் தான் இதற்கு காரணமாம். அதை தடை செய்தால் தற்கொலைகளை தடுக்கலாம், என மிகவும் புத்திசாலித்தனமாக பேசியுள்ளார். "இந்திய பிரதமர் மோடி உடனடியாக இதில் சிறப்பு கவனம் எடுத்து ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள ஃபேன்களை தடை செய்து டேபிள் ஃபேன்களை பயன்படுத்தவும், அல்லது ஏ.சி களை பயன்படுத்தவும் வலியுறுத்த வேண்டும்".
இதனால் தான் தற்கொலைகள் நடக்கின்றன எனக் கூறியுள்ளார்.
"பாரத் மாதா கி ஜே" என கோஷமிடுவதை விட நாட்டில் மிக முக்கிய பிரச்னை இந்த ஃபேன்களை தடை செய்வதே என உணர்ச்சி பொங்க
ராக்கி சவந்த் பேசியுள்ள நிலையில் பலருக்கும் இதை நினைத்து சிரிப்பதா இல்லை கோபமடைவதா எனத் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். உலகத்துல இருக்கற அத்தனை புத்திசாலிகளும் நம்ம ஊர்லதான்டா இருக்காய்ங்க!
Tags:
Cinema
,
சினிமா
,
சீலிங் ஃபேன்
,
தற்கொலை
,
பாரத் மாதா கி ஜே
,
பிரதமர் மோடி
,
பிரதியூஷா