கன்னி கழியாமல் சந்தோஷமாக வாழும் இந்திய நடிகைகள்..!!

10:54 PM |
நக்மா
பாட்ஷாவின் நாயகியாக தொண்ணூறுகளில் உச்சத்தில் இருந்தார் நக்மா. கங்குலியின் காதலி என சில காலம் பு(இ)கழாரமும் சூடிக்கொண்டார். ஜோதிகாவின் அக்காவான இவர் இன்று வரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

கௌசல்யா
"ஒரு மணி அடித்தால் பெண்ணே உன் ஞாபகம்" என்ற முரளியை பித்து பிடிக்க வைத்தவருக்கு, இன்று வரை யார் மேலும் பித்து பிடிக்கவில்லையாம். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷோபனா
உண்மையில் இவருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லையாம். நாட்டிய பேரொளி பத்மினிக்கு இவர் மகள் முறை. ஆனால் எத்தனை முறை சொல்லியும் தனது முடிவை மட்டும் இவர் மாற்றிக் கொள்ளவே இல்லை.

நமீதா
இன்றும் தான் பதினாறு தான் என்று பீலாய் விட்டுக் கொண்டிருக்கும் இந்த பீப்பாய்க்கு வயது முப்பதை தாண்டிவிட்டது. திருமணம் செய்துக் கொள்ள கூறினால், இல்லை... இல்லை... நான் அரசியலில் தான் குளிப்பேன், மன்னிக்கவும் குதிப்பேன் என்று புதிதாய் அடம் பிடிக்கிறார். (உன் வெயிட்ட இந்த நாடு தாங்காது தாயி)

சதா
ஜெயம், அந்நியன் காலகட்டத்தில் எப்போதும் இந்த சதா பேச்சாக தான் இருந்தது. ஆனால், மிக விரைவிலேயே சதா சாதா ஆகிவிட்டார். இப்போது வடிவேலுடன் எலி பிடித்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரேயா
இவர் மட்டும் சிவாஜியில் ரஜினியுடன் நடிக்காமல் இருந்திருந்தால், கோலிவுட் ரசிகர்கள் மறந்துப் போயிருப்பார்கள். எந்த காலத்து புண்ணியமோ நடித்துவிட்டார். இவர்கள் எல்லாம் பெண்ணுக்கு திருமண வயது 18 என்பதை தெரிந்துக் கொள்ள மறந்துவிட்டனர் போல.

சங்கவி
இவர் சென்ற நூற்றாண்டு நடிகை, எனவே இந்த தலைமுறையினர் இவரை நினைவில் வைத்திருக்க வாய்ப்பில்லை. விஜய்யின் ஆரம்பப் படங்களில் வேறு நடிகை கிடைக்கவில்லையோ என்னவோ இவர் மட்டும் தான் ஜோடி சேர்ந்து நடித்தார். இப்போது கொஞ்சம் பேருக்கு இவர் நினைவுக்கு வர வாய்ப்புகள் இருக்கிறது. ஐவரும் இன்று வரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

நயன்தாரா
நயன்தாரா!!! இந்த பெயர் சொன்னாலே பல இளவட்ட இதயங்கள் "கிர்ர்" என்று ஆகிவிடும். முப்பது வயது என்பது முதிர் கன்னி வயது தான் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். ஆனால், இன்னும் சிலர் இவரை கனவுக்கன்னி என்று நினைத்து வருகிறார்கள்.

அனுஷ்கா
ஆண்டி வயதை எட்டியும், இன்று வரை ஆடி பாடி திரிந்து வருகிறார். இவருக்கு வயது 33 ஆகிவிட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும்???

தபு
கண்டுகொண்டேன்... கண்டுகொண்டேனில் மட்டும் காதலை கண்டுகொண்டவர், வேறு எங்கும் காதலை கண்டுக் கொள்ளவில்லை போல, திருமணமும் செய்துக் கொள்ளவில்லை.

சுஷ்மிதாசென்
பலர் நெஞ்சங்களை ஆட்டிப்படைத்த பிரபஞ்ச அழகி, நாற்பதை தாண்டிவிட்ட இவர் இனி திருமணம் செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன என்றாகிவிட்டது. ஆனாலும், சொல்லு வேண்டியது நமது கடமை அல்லவா!!!

ப்ரீத்தி ஜிந்தா
இவரும் நாற்பதை எட்டிப்பிடிக்க காத்திருக்கும் முதிர்கன்னி தான். இவரது காதல் வலையில் அவ்வப்போது விழும் ஓட்டைகள் இவரது திருமணத்தை பகல் கனவாக்கிவிட்டது.

பிரியங்கா சோப்ரா
மேரி கோம்மாக நடித்தவருக்கு இன்னும் "மேரீ"(Marry) பண்ணிக்க மட்டும் தோணவே இல்லை.

மல்லிகா ஷெராவத்
இவர் திருமணம் செய்துக் கொள்வார் என்று நீங்கள் நினைத்தால், அது உங்கள் தவறு மல்லிகாவுடையது அல்ல.

பிபாசா பாசு
ஜான் ஆபிரகாம் உடன் காதலில் திளைத்துக் கொண்டிருந்த இவர், திடீரென காதலை முறித்துக் கொண்டார். அதன் வருத்தமோ என்னவோ 36 ஆகியும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை இந்த முதிர்ந்து போன கன்னி.

மேலும் வாசிக்க…

தமிழ் சினிமா கனவுக் கன்னிகளின் இயற்பெயர் இதோ..!!

10:25 PM |
படங்களில் நடிக்க வந்த பிறகு பெயரை மாற்றிய நடிகர், நடிகைகள் சிலரை பார்ப்போம். நடிகர், நடிகைகள் படங்களில் நடிக்க வரும்போது சிலர் அதே பெயரில் நடிக்கிறார்கள், சிலர் தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டு நடிக்கிறார்கள்.

விழுப்புரம் சின்னையா பிள்ளை தான் சிவாஜி கணேசனின் உண்மையான பெயர் என்பது சிலருக்குத் தான் தெரியும். சிலர் ஸ்டைலுக்காக பெயரை மாற்றுகிறார்கள், சிலர் நியூமராலஜிக்காக மாற்றுகிறார்கள். அப்படி பெயரை மாற்றியவர்களில் ஒரு சிலரை காண்போம்.

விழுப்புரம் சின்னையா பிள்ளை தான் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உண்மையான பெயர்.

காதல் மன்னன் ஜெமினி கணேசனின் நிஜ பெயர் ராமசாமி கணேசன்.

ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட்

நவரச நாயகன் கார்த்திக்கின் இயற்பெயர் முரளி கார்த்திகேயன்

சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன்.

ரேவதியின் இயற்பெயர் ஆஷா கோளுன்னி குட்டி.

நதியாவின் நிஜப் பெயர் ஜரீனா மொய்டு.

குஷ்புவின் உண்மையான பெயர் நக்கத் பேகம்.

சிம்ரனின் நிஜப் பெயர் ரிஷிபாலா.

சூர்யாவின் மனைவி ஜோதிகாவின் இயற்பெயர் சாதனா.

தொடை அழகி ரம்பாவின் பெயர் விஜயலக்ஷ்மி.

உதட்டழகி ரோஜாவின் பெயர் லதா.

புன்னகை செல்வி சினேகாவின் இயற்பெயர் சுஹாசினி ராஜாராம் நாயுடு.

தேவயாணியின் இயற்பெயர் சுஷ்மா ஜெயதேவ்.

நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன்.
மேலும் வாசிக்க…

மதம் மாறிய சினிமாவின் முக்கிய பிரபலங்கள்..!!

8:23 AM |
தமிழ் நடிகர் நாசர் இவரது சொந்த இடம் கொழும்பு – வாழைத்தோட்டம். இவர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த சினிமாத்துறையில் நுழைந்தவுடன் இந்துமத தெய்வங்களை கும்பிடும் காட்சிகளில் அதிகம் நடித்தவர்.

நடிகை குஷ்பு – முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவரது உறவினர் இஸ்லாத்தை பின்பற்ற இவர் இந்துமதத்திற்கு மாறி இயக்குனர் சுந்தர் சீயை திருமணம் முடித்து இந்துவாக வாழுகிறார்.

நடிகை மும்தாஜ் இவர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். எனினும் இவரின் நிலையும் இதேதான்.

இவரது அறையில் இஸ்லாமி கலிமாவை ஒட்டிவைத்துள்ளாராம் இதுதான் இவருக்கு வாசகமாம் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தமை எனக்கு நியாபகத்திற்கு வருகின்றது.

சூர்யா – ஜோதிகா – இதில் சூர்யா இந்து மற்றும் ஜோதிகா முஸ்லீம் ஆவார் . இருப்பினும் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

ஷாருக்கான் – கவுரி – கான் உலகம் முழுவதும் பிரபலமான நடிகரான ஷாருக்கான், பிராமணரான கவுரியை காதலித்து திருமணம் செய்து, வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அமீர் கான் – கிரண் ராவ் – முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த அமீர் கான், பிராமணரான கிரண் ராவ் மீது காதல் வயப்பட்டு, திருமணம் செய்து கொண்டார்.

மேலும் வாசிக்க…

ஜோதிகாவை கண்டு அசந்த பிரபல நடிகை..!!

10:52 PM |
தமிழ் சினிமா ஹீரோயின்களில் ஜோதிகாவிற்கு எப்போதும் தனி இடம் உண்டு. இவர் 8 வருடங்களுக்கு பிறகு நடித்த 36 வயதினிலே படம் கூட சூப்பர் ஹிட் ஆனது.

இந்நிலையில் நடிகை சிம்ரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘இன்றும் நான் ஜோதிகாவை பார்த்து வியக்கிறேன், குறிப்பாக அவர் நடித்த சந்திரமுகி படம் என்னை தற்போதும் பிரம்மிக்க வைக்கின்றது.

அவர் இடத்தை யாராலும் ஈடுக்கட்ட முடியாது’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

திருமணத்திற்குப் பின்னரும் காதல் குறையாத பிரபல ஜோடிகள்..!!

10:35 PM |
“ஜாதி, மதம், இனம், மொழி இவற்றைக் கடந்து வரும் காற்றைப் போல காதலையும் சுவாசிப்போம்” என்று நாளைய தினம் காதலர் தினத்தைக் கொண்டாட இந்த உலகமே காத்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இளம் நெஞ்சங்களின் மனதில் காதலை உரம் போட்டு தீவிரமாக வளர்க்கக் காரணமாக இருந்த பிரபல நட்சத்திரங்களின் காதல் பற்றி இங்கே காணலாம்.

இந்த ஜோடிகளின் சிறப்பே காதலுக்குப் பின்னரான திருமண வாழ்க்கையிலும் மற்ற இளம் ஜோடிகளுக்கு உதாரணமாகத் திகழ்வதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்வண்ணன் – சரண்யா 

தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான பொன்வண்ணன் “என்னோட வாழ்க்கை முழுக்க உங்களோட கால்ஷீட் வேணும்” என்று சரண்யாவிடம் இயல்பாக தனது காதலை வெளிப்படுத்தியவர். 1995 ம் ஆண்டில் சரண்யா – பொன்வண்ணன் காதல் வெற்றிகரமாக திருமணத்தில் முடிந்தது.இவர்களின் அழகான காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். 21 வருட திருமண வாழ்க்கையில் இன்றுவரை எந்தவித வதந்தி, வீண் சச்சரவுகளும் இவர்களைப் பற்றி வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அஜீத் – ஷாலினி

 அஜீத் – ஷாலினி தம்பதியைப் பற்றி எதுவும் பெரிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை.அமர்க்களம் படத்தில் நடித்த போது அஜீத் ஷாலினியிடம் காதலை வெளிப்படுத்த மத வேற்றுமைகளை பொருட்படுத்தாத இந்தக் காதல் 2௦௦௦ ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. 15 வருட வெற்றிகரமான காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக அனௌஷ்கா, ஆத்விக் என்று 2 குழந்தைகள் இருக்கின்றனர். 

சூர்யா – ஜோதிகா 

பூவெல்லாம் கேட்டுப் பார், உயிரிலே கலந்தது, மாயாவி, காக்க காக்க, பேரழகன், ஜூன் ஆர் மற்றும் சில்லுன்னு ஒரு காதல் என்று 7 படங்களில் சேர்ந்து நடித்து இந்த ஜோடியின் காதலைப் பற்றி எழுதாத பத்திரிக்கைகளே இல்லை. அந்த அளவிற்கு உருகி, உருகிக் காதலித்த இருவரும் 2006 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 9 வருட திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக தியா, தேவ் என்று 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது ஜோதிகா மீண்டும் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

பிரசன்னா – சினேகா 

புன்னகை இளவரசி என்று புகழப்படும் சினேகாவை விரும்பாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த சினேகாவிடம் எத்தனையோ பேர் காதலை சொன்னாலும் அவர் தேர்ந்தெடுத்தது என்னவோ பிரசன்னாவைத் தான்.அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது மலர்ந்த பிரசன்னா- சினேகா காதல் 2012 ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. மகிழ்ச்சியான இவர்கள் திருமண வாழ்வுக்கு அடையாளமாக ஒரு ஆண் குழந்தை இவர்களுக்கு உள்ளது. 

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி

பள்ளிப்பருவத்திலேயே மலர்ந்த ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி காதல் 9 ஆண்டுகள் நீடித்து 2013 ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. வெற்றிகரமான இசையமைப்பாளராக இருந்த ஜி.வி திருமணத்திற்குப் பின் வெற்றிகரமான நடிகராகவும் மாறியிருக்கிறார்.
மேலே சொன்ன ஜோடிகளைப் போல காதலர்களும் தங்கள் திருமண வாழ்க்கையில் வெற்றிகரமாக வலம்வர வாழ்த்துக்கள்!

மேலும் வாசிக்க…

ஜோதிகாவுக்கு பிறகு தொகுப்பாளினி ரம்யாவை தேர்ந்தெடுத்த பிரபல இயக்குனர்..!!

12:20 AM |
நடிகை ஜோதிகா தனது திருமணத்துக்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்து கொண்டு மீண்டும் நடித்த படம் 36 வயதினலே.

இப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி அடைந்த How Old Are You படத்தின் ரீமேக். இரண்டு படத்தையும் மலையாள இயக்குனர் ரோஷன் அண்ட்ரூஸ் இயக்கினார் . இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்று வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் பிரபல தொகுப்பாளினி ரம்யாவை நேரில் சந்தித்து ஒரு கதையை கூறி ஓப்பந்தம் போட்டுள்ளார் ரோஷன்.

இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ரம்யா நடிக்கவுள்ளாராம். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களில் ரோஷன் முக்கியமானவர், ஆதலால் தான் நான் ஒப்புக்கொண்டேன் என்று ரம்யா தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com