முதல்வர் அம்மாவின் நலம் விசாரிக்க சென்ற சூப்பர் ஸ்டார்..!!

11:29 PM |
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் கடந்த இருபது நாட்களுக்கு முன்னர் சென்னை அப்போலோ அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரின் உடல் நிலை குறித்து முக்கிய அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வரும் நிலையில் தமிழ் சினிமா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று திடீரென்று நேரில் சந்தித்து அவரின் ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்தார். உடன் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷும் சென்றுள்ளார்.

ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என பலருக்கும் ரஜினியின் வருகை மகிழ்ச்சியை தந்துள்ளது.
   
மேலும் வாசிக்க…

சூப்பர் ஸ்டாருடன் சண்டை போடும் பிரபல நடிகை..!!

11:08 PM |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மார்க்கெட் கபாலிக்கு பிறகு உலக அளவில் சென்றுவிட்டது. தற்போது இவர் நடித்து வரும் 2.0 படம் இதை இன்னும் வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்ப்பார்க்கலாம்.

இப்படத்தில் எமி ஜாக்ஸனும் ஒரு ரோபோட்டாக நடிப்பதாக செய்தி வந்தது, அதை நிரூபிக்கும் பொருட்டு தற்போது ஒரு செய்தி வந்துள்ளது.

இதில் சிட்டியுடன் எமி ஜாக்ஸன் மோதுவது போல் ஒரு காட்சி உள்ளதாம், இதை பிரமாண்டமாக ஷங்கர் எடுக்கவுள்ளார்.

மேலும், இப்படத்தில் வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார், இவர் பங்கேற்கும் காட்சிகள் யாருக்கும் தெரியாமல் சென்னையில் செட் அமைத்து எடுத்து வருகிறார்கள்.

இவர் இந்த படத்தில் வேற்று கிரகவாசியாக நடிக்கின்றார் என ஒரு செய்தி உலா வருகின்றது, இவை எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை.
மேலும் வாசிக்க…

ரஜினி சூப்பர் ஸ்டாரே கிடையாது - விளக்கம் தரும் பிரபல நடிகர்..!!

11:15 PM |
தமிழ்நாட்டில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பெரிய கருத்துக்கணிப்பே நடந்து வருகிறது.

ஆனால் இங்கு ஒரு நடிகர் ரஜினி சூப்பர் ஸ்டார் கிடையாது என்று கூறியுள்ளார்.

பிரபல நடிகரான நானா படேகர், ரஜினி சூப்பர் ஸ்டாரே கிடையாது. புதுமுக நடிகர்கள் நடித்து, கதை நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக நன்றாக ஓடும்.

அதுவே கதை நன்றாக இல்லாமல் பிரபலமான நடிகர் நடித்தாலும் ஒரு மூன்று நாள் தான் ஓடும், அதற்கு மேல் படத்திற்கு வரவேற்பு இருக்காது என்கிறார். கதை தான் சூப்பர் ஸ்டார் என்ற ரேஞ்சில் பேசியிருக்கிறார் நானா படேகர்.
மேலும் வாசிக்க…

கபாலி படத்தின் வசூல் இத்தனை கோடி டார்கெட்டா? ஆச்சரியத்தில் திரையுலகம்..!!

12:08 AM |
சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படம் பிரமாண்டமாக இன்னும் சில மாதங்களில் வரவிருக்கின்றது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில் இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே எந்திரன் தான் ரூ 280 கோடி வசூல் செய்துள்ளது. இந்த சாதனையை கண்டிப்பாக கபாலி முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கபாலி படத்திற்கு சுமார் ரூ 300 கோடி வரை டார்கெட் வைத்துள்ளார்களாம். இதைக்கேட்டு திரையுலகமே ஆச்சரியத்தில் முழ்கியுள்ளது.
மேலும் வாசிக்க…

கபாலிக்காக ரஜினி உருவாக்கிய தனி ஸ்டைல்- வெளிவந்த உண்மை தகவல்..!!

12:45 AM |
சூப்பர் ஸ்டாரை எப்போது திரையில் பார்ப்போம் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கபாலி டீசர், நாங்கள் ஒன்றும் சொல்வதற்கு இல்லை, ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடி வருகிறார்கள், இதற்கு மேல் ஒன்றும் சொல்ல தேவையில்லை.

கபாலி டீசர் கிட்டத்தட்ட 5 மில்லியன் ஹிட்ஸை தாண்ட, இப்படத்திற்காக முழுக்க முழுக்க ரஜினி உருவாக்கிய ஸ்டைல் தானாம். இதை இயக்குனர் ரஞ்சித்தே கூறியுள்ளார்.

இதில் ‘படப்பிடிப்பின் போது அவருக்கு காட்சிகள் இல்லையென்றாலும், ஓரமாக நின்று படப்பிடிப்பை பார்ப்பார், நடந்து பார்ப்பார், ஆரம்பத்தில் எனக்கும் அவர் என்ன செய்கிறார் என்று புரியவில்லை, பிறகு தான் தெரிந்தது கபாலிக்காக அவர் எடுத்த பயிற்சி என்று’ என ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் இரண்டு விதமாக லுக்கில் வெவ்வேறு ஸ்டைலில் ரஜினி கலக்கியுள்ளதாக கூறப்படுகின்றது..
மேலும் வாசிக்க…

ஜனாதிபதி மாளிகையில் பத்ம விபூஷன் விருதை பெற்ற ரஜினி..!!

1:39 AM |
இந்திய சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ என்றழைக்கப்படும் ரஜினிகாந்துக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அவருடன் இயக்குனர் எஸ். ராஜமௌலி, பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பத்மவிபூஷண் விருது வழங்கி கவுரவித்தார். இவ்விழாவில் ரஜினிகாந்த், தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் சகோதரருடன் கலந்துகொண்டார்.
மேலும் வாசிக்க…

சூப்பர் ஸ்டார் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று- எத்தனை பேருக்கு இது தெரியும்???

9:59 PM |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இந்தியாவே கொண்டாடும் நடிகர். ஆனால், ஆரம்ப காலத்தில் இவரை ஒரு நடிகனாக திரையுலகிற்கு காட்டியது கே.பாலசந்தர் அவர்கள் தான்.

சிவாஜிராவ் என்ற பெயரை ரஜினிகாந்த் என்று மாற்றியதும் இவர் தான், அப்படி சிவாஜிராவ், ரஜினிகாந்தாக மாறிய நாள் தான் இன்று.

ஹோலி பண்டிகை அன்று தான் கே.பி, ரஜினிகாந்த் என்ற பெயரை சூப்பர் ஸ்டாருக்கு வைத்துள்ளார். ஒவ்வொரு ஹோலி பண்டிகை அன்றும் ரஜினி, கே.பிக்கு தவறாமல் போன் செய்வாராம். ஆனால், இன்று அந்த ஜாம்பவான் நம்மிடம் இல்லை என்பது ரஜினிக்கு மட்டுமில்லை ஒட்டு மொத்த திரையுலகிற்கும் வருத்தம் தான்.
மேலும் வாசிக்க…

சூப்பர் ஸ்டார் படத்திற்காக இதுக்கூட செய்யவில்லை என்றால் எப்படி- அதிர வைத்த பிரபல நடிகை..!!

10:14 PM |
சூப்பர் ஸ்டார் படங்களின் எதிர்ப்பார்ப்பு தமிழகத்தில் எப்படியிருக்கும் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் இவரின் கபாலி படத்திற்கு தற்போதே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகின்றது.

இப்படத்தில் தன்ஷிகா தாய்லாந்து நாட்டை சார்ந்த ஒரு கேங்ஸ்டராக நடித்துள்ளார். இப்படத்திற்காக தன் கூந்தலை வெட்டி டாம் பாய் லுக்கிற்கு வந்துள்ளாராம்.

மேலும், இதுப்பற்றி அவரிடம் கேட்க சூப்பர் ஸ்டார் படத்திற்காக இதுக்கூட செய்யவில்லை என்றால் எப்படி என கூலாக சொல்கிறாராம்.
மேலும் வாசிக்க…

சின்ன தல யாரு? தொடங்கிய பேனர் பஞ்சாயத்து..!!

2:35 AM |
தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என ஒரு போட்டி இருந்தது. தற்போது அடுத்த தலதளபதி யாரு? என்ற நிலை வந்துவிட்டது.

இதில் சிவகார்த்திகேயன் அப்படியே விஜய்யின் பாணியை பின்பற்றுவதால் பலரும் அவரை அடுத்த தளபதி என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சிம்பு தீவிர அஜித் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே, இதனாலேயே இவரை அடுத்த தல என்று ரசிகர்கள் கூற, அஜித்தை போலவே எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் திரைக்கு வந்து வெற்றி பெற்றவர் விஜய் சேதுபதி.

சமீபத்தில் இவரின் சேதுபதி படம் திரைக்கு வந்தது. இந்த படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் பேனர், போஸ்டர் என கலைக்கட்டியது. அதில் அனைத்திலும் விஜய் சேதுபதியை ‘சின்ன தல’ என்றே குறிப்பிட்டுயிருந்தனர். இதனால், அடுத்த தல யார் என்ற பஞ்சாயத்து தொடங்கிவிட்டது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com