சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மார்க்கெட் கபாலிக்கு பிறகு உலக அளவில் சென்றுவிட்டது. தற்போது இவர் நடித்து வரும் 2.0 படம் இதை இன்னும் வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்ப்பார்க்கலாம்.
இப்படத்தில் எமி ஜாக்ஸனும் ஒரு ரோபோட்டாக நடிப்பதாக செய்தி வந்தது, அதை நிரூபிக்கும் பொருட்டு தற்போது ஒரு செய்தி வந்துள்ளது.
இதில் சிட்டியுடன் எமி ஜாக்ஸன் மோதுவது போல் ஒரு காட்சி உள்ளதாம், இதை பிரமாண்டமாக ஷங்கர் எடுக்கவுள்ளார்.
மேலும், இப்படத்தில் வில்லனாக அக்ஷய் குமார் நடித்து வருகிறார், இவர் பங்கேற்கும் காட்சிகள் யாருக்கும் தெரியாமல் சென்னையில் செட் அமைத்து எடுத்து வருகிறார்கள்.
இவர் இந்த படத்தில் வேற்று கிரகவாசியாக நடிக்கின்றார் என ஒரு செய்தி உலா வருகின்றது, இவை எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை.
Tags:
2.0
,
Cinema
,
எமி ஜாக்ஸன்
,
சண்டை
,
சினிமா
,
சூப்பர் ஸ்டார்
,
பிரபல நடிகை