சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இந்தியாவே கொண்டாடும் நடிகர். ஆனால், ஆரம்ப காலத்தில் இவரை ஒரு நடிகனாக திரையுலகிற்கு காட்டியது கே.பாலசந்தர் அவர்கள் தான்.
சிவாஜிராவ் என்ற பெயரை ரஜினிகாந்த் என்று மாற்றியதும் இவர் தான், அப்படி சிவாஜிராவ், ரஜினிகாந்தாக மாறிய நாள் தான் இன்று.
ஹோலி பண்டிகை அன்று தான் கே.பி, ரஜினிகாந்த் என்ற பெயரை சூப்பர் ஸ்டாருக்கு வைத்துள்ளார். ஒவ்வொரு ஹோலி பண்டிகை அன்றும் ரஜினி, கே.பிக்கு தவறாமல் போன் செய்வாராம். ஆனால், இன்று அந்த ஜாம்பவான் நம்மிடம் இல்லை என்பது ரஜினிக்கு மட்டுமில்லை ஒட்டு மொத்த திரையுலகிற்கும் வருத்தம் தான்.
Tags:
Cinema
,
சிவாஜிராவ்
,
சினிமா
,
சூப்பர் ஸ்டார்
,
ரஜினிகாந்த்
,
ஹோலி பண்டிகை