பல பேரிடம் பண மோசடி செய்து ஏமாற்றியதாக குஷ்பு கைது..!!

12:24 AM |
ஐ.ஏ.எஸ். அதிகாரி, வக்கீல், பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தின் அதிகாரி, சினிமா நடிகை, என கூறி பல பேரிடம் பண மோசடி செய்துள்ள மோசடி பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் குஷ்பு சர்மா (25) பலே மோசடி பெண்ணான இவர் சமீபத்தில் பெங்களூரில் சங்கீத் யாங்கி என்னும் வக்கில் வீட்டுக்கு சென்று தானும் உச்ச நீதிமன்றத்தில் வக்கீலாக இருப்பதாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டார்.

அப்போது சங்கீத் யாங்கி பெங்களூர் நகரில் உள்ள யூ.பி.சிட்டி மாலில் எனக்கு ஒரு இடம் தேவைப்படுகிறது என குஷ்புவிடம் கூற அதற்கு குஷ்பு சர்மா, எனது தந்தை ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. அவருக்கும் யூ.பி.சிட்டி மாலில் பங்கு இருக்கிறது. எனவே, உங்களுக்கு இடம் வாங்கி தருகிறேன் என்று கூறினார்.

இதற்காக அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை குஷ்பு பெற்று கொண்டார். பின்னர் சங்கீத் அவரை தொடர்பு கொண்ட போது குஷ்புவின் கைபேசி சுவிட்ச் ஆப்பில் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சங்கீத் இது குறித்து பொலிசில் புகார் அளித்தார்.

பின்னர் பொலிஸ் இது குறித்து விசாரித்ததில் அந்த குஷ்பு மிக பெரிய மோசடி ராணி என்பதும் வெறும் எட்டாம் வகுப்பு படித்து விட்டு ஐ.ஏ.எஸ், வக்கீல், இன்ஜினியர் என இதுவரை பல பேரை ஏமாற்றி பல முறை சிறைக்கு சென்றிருப்பதும் அவர்களுக்கு தெரிய வந்தது.

தற்போது அவர் தனது சொந்த ஊரான ராஜஸ்தானில் பதுங்கி இருப்பதை உறுதி செய்த பொலிசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
இன்னும் அவர் யார் யாரிடம் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளார் என தெரிந்து கொள்ள குஷ்புவிடம் தற்போது தீவிர விசாரனை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

கவுதமியை தொடர்ந்து குஷ்பு அடுத்தடுத்து திருப்பம்..!!

11:17 PM |
திமுகவில் இருந்து விரட்டப்பட இருந்த நேரத்தில் தானாக விலகிய குஷ்பூ தற்போது காங்கிரசில் உள்ளார். திமுகவில் இருந்தபோது, மு.க.ஸ்டாலினை தேவையில்லாமல் விமர்சித்து வீடு தாக்கப்பட காரணமாகி இருந்தார்.

தற்போது காங்கிரசில் இருந்தாலும் நாத்திகம் பேசி வருவதோடு காங்கிரசின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராகவும் பேசியுள்ளார். முஸ்லீம்களின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்து, தலாக் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்தார்.

இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக காங்கிரசார் மேலிடத்திற்கு புகார்களை அனுப்பி வருகின்றனர். இதனால் விரைவில் அவர் மீது கடும் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அவர் காங்கிரசில் இருந்து விலகவும் நேரலாம் என கூறப்படுகிறது. நான் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்தவள் என ஏற்கனவே குஷ்பூ கூறியிருந்தார்.

இதனிடையே குஷ்புவின் கருத்தை பா.ஜ.க. தலைவர்கள் பாராட்டியுள்ளதால், அவர் பா.ஜ.கவிற்கு போகத்தான் வாய்ப்பு அதிகம் என வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

ஏற்கனவே நடிகை கவுதமி பிரதமர் மோடியை சந்தித்து வந்துள்ளதால், அவருடைய பெயருடன் சேர்த்து இப்போது குஷ்புவின் பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது.
மேலும் வாசிக்க…

மதம் மாறிய சினிமாவின் முக்கிய பிரபலங்கள்..!!

8:23 AM |
தமிழ் நடிகர் நாசர் இவரது சொந்த இடம் கொழும்பு – வாழைத்தோட்டம். இவர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த சினிமாத்துறையில் நுழைந்தவுடன் இந்துமத தெய்வங்களை கும்பிடும் காட்சிகளில் அதிகம் நடித்தவர்.

நடிகை குஷ்பு – முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவரது உறவினர் இஸ்லாத்தை பின்பற்ற இவர் இந்துமதத்திற்கு மாறி இயக்குனர் சுந்தர் சீயை திருமணம் முடித்து இந்துவாக வாழுகிறார்.

நடிகை மும்தாஜ் இவர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். எனினும் இவரின் நிலையும் இதேதான்.

இவரது அறையில் இஸ்லாமி கலிமாவை ஒட்டிவைத்துள்ளாராம் இதுதான் இவருக்கு வாசகமாம் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தமை எனக்கு நியாபகத்திற்கு வருகின்றது.

சூர்யாஜோதிகா – இதில் சூர்யா இந்து மற்றும் ஜோதிகா முஸ்லீம் ஆவார் . இருப்பினும் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

ஷாருக்கான் – கவுரி – கான் உலகம் முழுவதும் பிரபலமான நடிகரான ஷாருக்கான், பிராமணரான கவுரியை காதலித்து திருமணம் செய்து, வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

அமீர் கான் – கிரண் ராவ் – முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த அமீர் கான், பிராமணரான கிரண் ராவ் மீது காதல் வயப்பட்டு, திருமணம் செய்து கொண்டார்.

மேலும் வாசிக்க…

குஷ்புவிற்கு முத்தம் கொடுத்த சர்ச்சைக்கு சாமர்த்தியமாக பதில் கூறிய மாதவன்

1:46 AM |
மாதவன் நடிப்பில் தற்போது திரையரங்கில் வெற்றி நடைப்போடும் படம் இறுதிச்சுற்று. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக குஷ்புதொகுத்து வழங்கும் ஒரு ஷோவில் மாதவன் கலந்துக்கொண்டார்.

இதில் குஷ்புவிற்கு மாதவன் முத்தம் கொடுத்தார். இவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ பலரும் பலவிதமாக கருத்துக்களை கூறினர்.

இதற்கு ஒரு வார இதழில் மாதவன் பதில் அளிக்கையில், குஷ்பு எனக்கு ஒரு அக்கா மாதிரி தான், தற்போது சொல்லுங்கள் அந்த முத்தத்தில் என்ன தவறு என்று  என அசத்தலாக கூறினார்.
மேலும் வாசிக்க…

பப்ளிக்கில் வைத்து நடிகர் மாதவனிடம் “இச்” வாங்கிய குஷ்பு..!!

6:15 PM |
மேலும் வாசிக்க…

தனுஷ், குஷ்பு வீட்டில் வருமான வரி சோதனை- அதிர்ச்சியில் திரையுலகம்.!!

7:11 PM |
Dhanush, Khushboo Income Tax Raid on the house

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் தனுஷ்.

இவர் அடுத்து கொடி, வட சென்னை, ரயில் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.இதில் ரயில் படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.

இந்நிலையில் இவருடைய வீட்டில் சமீபத்தில் வருமான வரி சோதனை நடந்துள்ளது.

இதேபோல் நடிகை குஷ்பு, இயக்குனர் பாலா வீட்டிலும் வருமான வரி சோதனை நடக்க கோலிவுட்டே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

மேலும், வருமான வரித்துறை ஆனையர்கள் சில ஆவனங்களை கைப்பற்றியதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

அரண்மனை 2 ரிலீஸ் தேதியை வெளியிட்ட குஷ்பு..!!

1:02 AM |
சுந்தர் சி இயக்கியிருக்கும் அரண்மனை 2 திரைப்படம் முன்னதாக 2016 பொங்கலில் வெளியாகும் என சொல்லப்பட்டது. விளம்பரங்களிலும் இந்த ரிலீஸ் தேதியே வெளியானது. இந்நிலையில் தற்போது இப்படம் ஜனவரி இறுதியில் அதாவது ஜனவரி 29-ம் தேதி தான் வெளியாகும் என சுந்தர் சி.யின் மனைவியும் முன்னாள் நாயகியுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. தற்போது இதன் இறுதிகட்ட கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா ஆகியோர் இதில் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் வாசிக்க…

மக்களை நேரில் சென்று பார்வையிட்ட குஷ்பு..!!

4:06 AM |
நடிகை குஷ்பு வீடு பட்டினப்பாக்கத்தில் உள்ளது. அவர் வீட்டின் முன்னால் ஆறுபோல் வெள்ளம் ஓடியது. அதனை பொருட்படுத்தாமல் வெள்ளத்தில் நடந்து சென்று பட்டினப்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கினார். அவர் கூறும்போது ‘தொடர்ந்து மழைபெய்ததால் மின்சாரம் இல்லை. குடிக்க தண்ணீர் இல்லை. சாப்பாடு இல்லை. இதனால் மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் எப்படித்தான் வாழப்போகிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.






மேலும் வாசிக்க…

ஸ்ருதியின் காதலை மறுத்தது யார்???

12:37 AM |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார்.

அரைகுறை ஆடை அணிந்து அவமானப்பட்ட நடிகை ஸ்ருதி..!!

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் குஷ்பு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ருதி கலந்துக்கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில் ஸ்ருதி, தான் ஒருவரிடம் காதலை கூறியதாகவும், அதை அந்த நபர் மறுத்து விட்டதாக கூறியுள்ளார். அவர் யார் என்பதை அறிய நாளை வரை காத்திருக்க வேண்டும். நாளை தான் இந்த நிகழ்ச்சி முழுவதும் ஒளிப்பரப்பாக விருக்கின்றது.
மேலும் வாசிக்க…

குஷ்பு கமலுடன் செய்த லீலை அட்டாகாச (வீடியோ)

2:22 AM |


குஷ்பு கமலுடன் செய்த லீலை அட்டாகாச (வீடியோ)





மேலும் வாசிக்க…

தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும் பெண்களின் சுதந்திரம்: குஷ்பு பேச்சு

8:45 PM |
சென்னை பெரியார் திடலில், பெரியார் பிறந்தநாளையொட்டி, ‘யுனெஸ்கோ’ பார்வையில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் ‘மகளிர் கருத்தரங்கம்’ திராவிடர் கழகத்தின் பொருளாளர் டாக்டர் சு.பிறைநுதல் செல்வி தலைமையில் நடைபெற்றது.

கருத்தரங்கை அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் 29 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 13-ந்தேதி சென்னை வந்தேன். 29 ஆண்டுகளை திரும்பி பார்க்கும் போது பேர், பணம், புகழ் வரும் போகும் என்று தெரிந்தது. சாதித்தது என்ன? என்று திரும்பி பார்க்கும் போது பெரியார் திடலில் நடைபெறும் பெரியார் பிறந்த நாள் விழாவில் இன்று பேசுவதை தான் பெரும் சாதனையாக நினைக்கிறேன்.

பகுத்தறிவு என்றால் என்ன? என்று தெரியாமல் வளர்ந்தவள் நான். மும்பையில் இருந்தபோது யாரும் எனக்கு சொல்லி தரவில்லை. ஆனாலும், மதம், சாதி, இனம் போன்றவற்றில் எனக்கு உடன்பாடு இருந்தது இல்லை.

கடவுள் இருக்கிறாரா? என்று எனக்கு தெரியாது. எனது சந்தேகங்களுக்கு யார்? பதில் அளிக்கிறாரோ அவரை நான் கடவுளாக பார்க்கிறேன். எனக்கு 6-வது அறிவை கடவுள் தரவில்லை. எனது பெற்றோர் தந்தனர். அவர்களை நான் கடவுளாக நினைக்கிறேன்.

பெண்களுக்கு, சுயமரியாதை வேண்டும் என்று பாடுப்பட்டார் பெரியார். எனவே பெண்கள் கழுத்தில் தாலி அணியலாமா? அல்லது வேண்டாமா? என்பது அவரவர்களின் விருப்பம். அணிவதும், அணியாமல் இருப்பதும் அவர்களுடைய சுதந்திரம்.

பெரியாருக்கும், எனக்கும் சம்பந்தம் இருக்கிறது. எங்கோ பிறந்து, வளர்ந்தாலும், என்னுடைய சிந்தனையில் பெரியாரின் கொள்கைகள் இருந்துள்ளது.

படிப்பு இல்லாதவர்களிடம் தான் துணிச்சல் அதிகம் இருக்கும் என்று ஆசிரியர்(கி.வீரமணி) இங்கே சொன்னார். நானும் படிக்காதவள் தான். அதனால் தான் என்னிடம் துணிச்சல் அதிகம் இருக்கிறது. இன்றைய பெண்கள் சில நேரங்களில் சமுதாயத்துக்கு பயந்து துணிச்சலை வெளிகாட்டுவது இல்லை.

நான் ஒரு பெரியார்வாதி. எனவே என்னிடம் திமிரும், கொழுப்பும் அதிகமாகவே இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில், ‘தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்’ என்ற தலைப்பில் பெண் வக்கீல் அருள்மொழியும், ‘‘புத்துலகின் தொலைநோக்காளர்’’ என்ற தலைப்பில் பேராசிரியை சுந்தரவல்லியும், ‘‘பழமை, மூடநம்பிக்கைகளின் எதிரி’’ என்ற தலைப்பில் கவிஞர் சல்மாவும், ‘‘சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை’’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் கவிதா முரளிதரனும் பேசினர்.

நிகழ்ச்சியின் முடிவில் குஷ்பு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம்,‘‘ நடிகர் சங்க தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா?’’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘இல்லத்தரசியாக, திரைப்பட தயாரிப்பாளராக, அரசியல்வாதியாக எனக்கு பல பொறுப்புகளும், வேலைகளும் அதிகம் உள்ளது. எனவே நான் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடவில்லை.’ என்றார்.
மேலும் வாசிக்க…

நான் எப்பவுமே எங்க அம்மா மாதிரி ஆகமாட்டேன்: சொல்வது குஷ்புவின் மகள்..!!

8:16 AM |
தனது அம்மா குஷ்பு வழியில் தானும் நடிகையாகப் போவது இல்லை என்று அவந்திகா சுந்தர் தெரிவித்துள்ளார். நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு அவரது மகள் அவந்திகா, அனந்திதா ஆகியோர் தான் உலகம்.

இதை நாங்கள் கூறவில்லை அவரே பலமுறை தெரிவித்துள்ளார். குஷ்புவின் மூத்த மகளான அவந்திகாவின் வயது என்ன என்றும், அவர் நடிக்க வருவார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவரிடம் க்ரிஷ் என்பவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். அதற்கு அவந்திகா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது,

நடிப்பு 

மக்களே நீங்கள் அனைவரும் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். நான் நடிக்க விரும்பவில்லை.

ஓய்ந்துவிட்டேன்

எப்பொழுது நடிக்கத் துவங்குவீர்கள், நீங்கள் உங்களின் தாயின் வழியில் தான் செல்வீர்கள் என்று மக்கள் என்னிடம் கேட்பதை கேட்டு கேட்டு ஓய்ந்துவிட்டேன். எதற்கும் லிமிட் உள்ளது. அதை சிலநேரம் மக்கள் தாண்டிவிடுகிறார்கள்.

எழுத்தாளர் 

எனக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. நான் அழகானவள். நான் ஏற்கனவே சில முறை கூறியுள்ளேன், தற்போது மீண்டும் கூறுகிறேன், நான் ஒரு எழுத்தாளர்.

படங்கள் 

யாரும் ஆரம்பிக்கும் முன்பே நானே கூறிவிடுகிறேன். படங்களுக்காக எழுதவே மாட்டேன். எனக்கு சிறுகதைகள், கவிதைகள் மற்றும் புத்தகங்கள் எழுத பிடிக்கும்.

சினிமா 

நான் எப்பொழுதும் சினிமா பக்கம் வர மாட்டேன். என் முடிவை என் பெற்றோர் ஆதரிக்கிறார்கள். அப்படி இருக்கையில் சிலருக்கு மட்டும் அது ஏன் பிரச்சனையாக உள்ளது?

15 வயது

எனக்கு 15 வயது ஆகிறது. உதரிங் ஹைட்ஸை மறுபடியும் வாசிப்பதா அல்லது வேறு புதிய புத்தகத்தை வாசிப்பதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. என் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் அதை என்னிடம் விட்டுவிடுங்கள்.

குழந்தை 

மிஸ்டர் க்ரிஷ் நான் ஒரு குழந்தை தான் பெரியவள் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும் அதை எப்பொழுது செய்ய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும் அல்லது அவர்கள் என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிவிக்க யாருக்கும் அதுவும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இருப்பவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று தெரிவித்துள்ளார் அவந்திகா.

மேலும் வாசிக்க…
2015 Thediko.com