சுந்தர் சி இயக்கியிருக்கும் அரண்மனை 2 திரைப்படம் முன்னதாக 2016 பொங்கலில் வெளியாகும் என சொல்லப்பட்டது. விளம்பரங்களிலும் இந்த ரிலீஸ் தேதியே வெளியானது. இந்நிலையில் தற்போது இப்படம் ஜனவரி இறுதியில் அதாவது ஜனவரி 29-ம் தேதி தான் வெளியாகும் என சுந்தர் சி.யின் மனைவியும் முன்னாள் நாயகியுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. தற்போது இதன் இறுதிகட்ட கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா ஆகியோர் இதில் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Tags:
Cinema
,
அரண்மனை 2 ரிலீஸ் தேதியை வெளியிட்ட குஷ்பு
,
குஷ்பு
,
சினிமா