தனது அம்மா குஷ்பு வழியில் தானும் நடிகையாகப் போவது இல்லை என்று அவந்திகா சுந்தர் தெரிவித்துள்ளார். நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு அவரது மகள் அவந்திகா, அனந்திதா ஆகியோர் தான் உலகம்.
இதை நாங்கள் கூறவில்லை அவரே பலமுறை தெரிவித்துள்ளார். குஷ்புவின் மூத்த மகளான அவந்திகாவின் வயது என்ன என்றும், அவர் நடிக்க வருவார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவரிடம் க்ரிஷ் என்பவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். அதற்கு அவந்திகா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது,
நடிப்பு
மக்களே நீங்கள் அனைவரும் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். நான் நடிக்க விரும்பவில்லை.
ஓய்ந்துவிட்டேன்
எப்பொழுது நடிக்கத் துவங்குவீர்கள், நீங்கள் உங்களின் தாயின் வழியில் தான் செல்வீர்கள் என்று மக்கள் என்னிடம் கேட்பதை கேட்டு கேட்டு ஓய்ந்துவிட்டேன். எதற்கும் லிமிட் உள்ளது. அதை சிலநேரம் மக்கள் தாண்டிவிடுகிறார்கள்.
எழுத்தாளர்
எனக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. நான் அழகானவள். நான் ஏற்கனவே சில முறை கூறியுள்ளேன், தற்போது மீண்டும் கூறுகிறேன், நான் ஒரு எழுத்தாளர்.
படங்கள்
யாரும் ஆரம்பிக்கும் முன்பே நானே கூறிவிடுகிறேன். படங்களுக்காக எழுதவே மாட்டேன். எனக்கு சிறுகதைகள், கவிதைகள் மற்றும் புத்தகங்கள் எழுத பிடிக்கும்.
சினிமா
நான் எப்பொழுதும் சினிமா பக்கம் வர மாட்டேன். என் முடிவை என் பெற்றோர் ஆதரிக்கிறார்கள். அப்படி இருக்கையில் சிலருக்கு மட்டும் அது ஏன் பிரச்சனையாக உள்ளது?
15 வயது
எனக்கு 15 வயது ஆகிறது. உதரிங் ஹைட்ஸை மறுபடியும் வாசிப்பதா அல்லது வேறு புதிய புத்தகத்தை வாசிப்பதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. என் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் அதை என்னிடம் விட்டுவிடுங்கள்.
குழந்தை
மிஸ்டர் க்ரிஷ் நான் ஒரு குழந்தை தான் பெரியவள் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும் அதை எப்பொழுது செய்ய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும் அல்லது அவர்கள் என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிவிக்க யாருக்கும் அதுவும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இருப்பவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று தெரிவித்துள்ளார் அவந்திகா.
Tags:
Cinema
,
குஷ்பு
,
குஷ்புவின் மகள்
,
சினிமா