கனடா கணவன்,மனைவியை கொலை செய்த பிரியமனவளே தொடர் – பரபரப்பு தகவல்கள்

9:55 PM |
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகம் ‘பிரியமானவள்’. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களாக இருப்பவர்கள் இலங்கை போரின் போது அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த அண்ணன், தங்கை.

இவர்கள் பல வருடங்கள் கழித்து ஒரு புகைப்படத்தால் இணைவார்கள். சமீபத்தில் ஒளிபரப்பட்ட இந்த எபிசோடில், அந்த இருவரின் பெற்றோர் என கூறி வீட்டில் ஒரு போட்டோவை தொங்கவிட்டிருப்பார்கள். அவர்கள் இறந்துவிட்டதாகவும் கூறுவார்கள்.

அந்த புகைப்படத்தால் தற்போது கனடாவில் வசித்துவரும் ஒரு தம்பதிக்கு பெரிய மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் அந்த ஜோடியின் புகைப்படத்தை அவர்கள் அனுமதி இல்லாமல் பிரியமானவள் குழு பயன்படுத்தி, “அவர்கள் இறந்துவிட்டார்கள்” என்ற செய்தி பரவியதால் தான்.

கனடாவில் வாழ்கின்ற அந்த ஈழத் தமிழ்த் தம்பதியினர் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து திடுக்கிட்டுப் போனார்கள். அவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த புகைப்படம் அது. அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் புகைப்படம் தொடர் நாடகத்தின் முக்கிய கட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாடகத்தைப் பார்த்த அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் அவர்களை இனம் கண்டு கொண்டு, தொலைபேசியில் விசாரித்து வருகின்றார்கள். உயிரோடு இருக்கின்ற தம்மை, தம்மிடம் கேட்காமலேயே இறந்து போனவர்களின் படமாக நாடகத்தில் பயன்படுத்தியது பற்றி அவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள்.
மேலும் வாசிக்க…

முழு நிர்வாணமாக இறந்து கிடந்த நடிகை சபர்ணா! வெளியான பரபரப்பு தகவல்கள்..!!

10:19 PM |
பிரபல சின்னத்திரை நடிகையான சபர்ணா இன்று மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபர்ணாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் முழு நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததால் பாலியல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகமடைந்துள்ளனர்.

மேலும், நடிகை சபர்ணாவின் கையில் பிளேடால் அறுத்துக்கொண்ட அடையாளங்கள் இருந்துள்ளன.

இது அவரே அறுத்துக்கொண்டதா? அல்லது வேறு எவரேனும் அறுத்ததா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

உடல் மீட்கப்பட்ட வீட்டில் மதுபானங்கள், கஞ்சா, சிகரெட் போன்றவை இருந்துள்ளன. வீட்டின் கதவு வேறு தாழ்ப்பாள் போடாமல் இருந்துள்ளது.

சபர்ணாவின் டைரியை கைப்பற்றியுள்ள பொலிசார் டைரியை வைத்து சபர்ணாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வாசிக்க…

கமலை பிரிவது ஏன்? கெளதமி எழுதிய பரபரப்பு கடிதம்..!!

11:24 PM |
நடிகர் கமல்ஹாசனோடு 13 வருடம் சேர்ந்து வாழ்ந்த நடிகை கெளதமி தற்போது அவரை பிரிவதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த முடிவை எடுத்தது ஏன் என ஒரு நீண்ட கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதில் என்ன கூறியுள்ளார் என நீங்களே பாருங்கள்..

“ஆழ்ந்த வருத்தத்துடனும், மிகுந்த கனத்த இதயத்துடனும் தான் நானும் திரு.கமல் ஹாசன் அவர்களும் இப்பொழுது ஒன்றாக இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். 13 வருட காலம் அன்னியோனியமாக ஒன்றாக இருந்து விட்டப் பிறகு, நான் எடுக்க வேண்டியிருந்த இந்த முடிவு, என்னை முற்றிலும் நிலைகுலைய வைத்த ஒரு முடிவு.”

“மிகுந்த ஆழமான உறவில் இணைந்திருக்கும் எவருக்கும் தங்கள் பாதைகள் திரும்பி வரவே முடியாத அளவிற்கு விலகி விட்டன என்பதையும், அவர்களுக்கு தற்சமயம் இருக்கும் தெரிவுகள், அவர்களது கனவுகளை விட்டு கொடுத்து வாழ்வதோ அல்லது தங்கள் தனிமையின் உண்மையை உணர்ந்து கொண்டு தொடர்ந்து தனியே பயணிப்பதோ தான் என்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்வது சுலபமான விஷயம் இல்லை.”

“இந்த உண்மையை புரிந்து கொள்ள எனக்கு வெகு காலம் தேவை பட்டது. ஓரிரண்டு ஆண்டுகளுக்கு பிறகே என்னால் இந்த மனதை முறிக்கும் உண்மையை ஏற்றுக் கொண்டு இன்று நான் எடுத்துள்ள இந்த முடிவுக்கு வர முடிந்தது.”

“இந்த தருணத்தில் என்னுடைய நோக்கம் பரிவை தேடுவதோ, பழி சுமத்துவதோ அல்ல. மாற்றம் என்பது வாழ்வில் இன்றியமையாத ஒன்று என்று நான் எனது வாழ்க்கையின் மூலம் உணர்ந்து கொண்டுள்ளேன். மேலும் மனித இயல்பு இந்த மாற்றத்தை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக கொண்டு சேர்க்கும் என்பதையும் தெரிந்து கொண்டுள்ளேன்.”

“இந்த மாற்றங்கள் எல்லாமே நாம் விரும்புவதாகவோ, எதிர்ப்பாற்பதாகவோ இருக்காது என்பதையும் புரிந்து கொண்டேன். அனால் இந்த புரிதல் மட்டுமே ஒரு உறவில் இணைந்திருக்கும் இருவரிடையே வெவ்வேறு முன்னுரிமைகள் குறித்து வேறுபாடு இருப்பதினால் ஏற்படும் தாக்கத்தை எந்த வகையிலும் குறைக்காது.”

 “எனது வாழ்க்கையின் இந்த காலகட்டத்தில் தனியே தொடர்வது என்ற இந்த முடிவை எடுப்பது என்பது எனக்கு மட்டும் அல்ல, எந்த பெண்ணுக்குமே மிகவும் கடினமான ஒரு விஷயம். ஆனால் எனக்கு இதை செய்வது அத்தியாவசியமாகி விட்டது. ஏனென்றால் நான் முதலில் ஒரு தாய் என்பதையும் எனது முதல் கடமை எனது பிள்ளைக்கே என்பதையும் முழுவதுமாக உணர்ந்திருக்கிறேன்.”

“எனது கடமையை நான் சரிவர செய்வதற்கு நான் எனக்குள் அமைதியை உணர்வது மிகவும் அவசியம் என்பதையும் உணர்கிறேன். நான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே திரு. கமல் ஹாசன் அவர்களின் மிக பெரிய விசிறியாக இருந்தேன் என்பது பெரிய ரகசியம் ஒன்றுமில்லை.”

“நான் இப்பொழுதும் அவரது அசாத்திய திறமையையும் சாதனைகளையும் ஆராதிக்கிறேன். அவருக்கு சோதனைகள் பல வந்த போதும் நான் அவருக்கு துணையாக நின்றதை நான் மிகவும் அரிய தருணங்களாக கருதுகிறேன். அவரது திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதில் நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவரது கற்பனை நோக்கிற்கு உதவி செய்ய முடிந்ததை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன்.”

“இன்று வரை அவர் சாதித்ததின் கூடவே அவர் அவரது நேயர்களுக்கு இன்னும் அதிகமாக கொடுக்கப் போகிறார் என்பதையும் உணர்கிறேன். அவரது வருங்கால சாதனைகளை கைத்தட்டி வரவேற்க நானும் காத்திருக்கிறேன்.”

“என் வாழ்க்கையின் இந்த மிக பெரிய தீர்மானத்தை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்வதன் காரணம், நான் இதுவரை, என்னால் முடிந்தவரை, உங்களிடையே மிகுந்த கண்ணியத்துடனும் கௌரவத்துடனும் வாழ்ந்து வந்திருக்கிறேன் என்பதும், நீங்கள் அனைவரும் என் வாழ்க்கை பயணத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருந்திருக்கிறீர்கள் என்பதும் தான்.”

“கடந்த 29வருடங்களில் உங்களிடமிருந்து மிகுந்த அன்பையும் ஆதரவையும் பெற்று இருக்கிறேன். எனது வாழ்வின் மிகவும் இருண்ட மற்றும் வலி மிகுந்த தருணங்களில் நீங்கள் என்னுடன் இருந்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.”

அன்புடன், கௌதமி
மேலும் வாசிக்க…

அரை நிர்வாண கோலத்தில் மீண்டும் நடிகை எமி ஜாக்சன்..!!

1:58 AM |
நடிகை எமி ஜாக்சன், அரை நிர்வாண படத்தை மீண்டும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும், 2.0 படத்தை, 350 கோடி ரூபாய் செலவில், லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில், எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கிறார்.

ஷங்கர் பட நாயகி என்றாலே படம் வெளிவரும் வரை, நாயகி குறித்த படமோ, செய்தியோ வெளியே வராது. ஆனால், எமி ஜாக்சனோ, அரை நிர்வாண கோலத்தில் உள்ள தன் படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். படுத்த நிலையில், தன் அரை நிர்வாண படத்தை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்பு வெளியிட்ட அவர்,

நேற்று முன்தினம், நின்ற நிலையிலான அரை நிர்வாண படத்தை மீண்டும் வெளியிட்டு உள்ளார். அந்த படத்திற்கு, டாப் போட சோம்பேறித்தனமான நாள்…ஞாயிற்றுக்கிழமை என, விளக்கமும் அளித்துள்ளார். பீட்டா ஆதரவாளரான எமி ஜாக்சனுக்கு, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து,

அவரை, 2.0 படத்திலிருந்து நீக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினர். இந்தச் சூழலில், எமி ஜாக்சன் நடித்த, பீட்டா ஆதரவு வீடியோ மற்றும் அரை நிர்வாண படங்கள் வெளியாகி, ஷங்கர் உள்ளிட்ட, 2.0 படக்குழுவினரை டென்ஷனாக்கி உள்ளது.
மேலும் வாசிக்க…

நயன்தாராவுடன் பிரச்னை இருந்தது திரிஷா பரபரப்பு பேச்சு..!!

11:23 PM |
தனக்கும், நயன்தாராவுக்கும் இடையே ஒரு பிரச்சனை இருந்ததாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

ஜோடி படம் மூலம் கோலிவுட் வந்தவர் த்ரிஷா. அந்த படத்தில் ரிச் கேர்ளாக வந்த த்ரிஷா மவுனம் பேசியதே படம் மூலம் ஹீரோயின் ஆனார். 15 ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் நயன்தாரா.நானும், நயன்தாராவும் 10 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் உள்ளோம். எங்களுக்கு இடையே நிறைய பிரச்சனை உள்ளது என்று கூறப்படுவது எல்லாம் மீடியா உருவாக்கியது என்கிறார் த்ரிஷா.

எனக்கும், நயன்தாராவுக்கும் இடையே ஒரு தனிப்பட்ட பிரச்சனை இருந்தது. அது குறித்து நான் பேச விரும்பவில்லை.

அந்த பிரச்சனைக்கு தொழில் காரணம் அல்ல என்று த்ரிஷா தெரிவித்துள்ளார். எனக்கும், நயன்தாராவுக்கும் நன்கு தெரிந்த பொதுவான நண்பர்கள், நபர்களால் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. அப்படி இருந்தும் நாங்கள் மோதிக்கொள்ளவில்லை. இருவரும் ஒருவரையொருவர் பட ரிலீஸின்போது வாழ்த்துவோம் என்று த்ரிஷா கூறியுள்ளார்.

த்ரிஷா முதன்முறையாக தனுஷுடன் ஜோடி சேர்ந்த கொடி படம் ஹிட்டாகியுள்ளது. நயன்தாரா ராணியாக நடித்த காஷ்மோரா படம் ஹிட்டாகியுள்ளது. இதனால் இருவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
மேலும் வாசிக்க…

இங்கிருந்து என்னை துரத்திடாதீங்க: சிவகார்த்திகேயனை கேட்டுக் கொண்ட தனுஷ்..!!

11:57 PM |
இங்கிருந்து அவ்வளவு ஈஸியாக துரத்திடாதீங்க. சிவா, அவ்வளவு ஈஸியாக என் இடத்தை கொடுக்க மாட்டேன் என தனுஷ் முன்பு தெரிவித்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தார் சிவகார்த்திகேயன். வந்த இடத்தில் தனுஷின் நட்பு கிடைத்து இருவரும் சகோதரர்கள் போன்று பழகினர். தனுஷும் தனக்கு வந்த படங்களில் சிவாவை நடிக்க வைத்தார்.

அவர்களின் நட்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பிரிவு

மிகவும் நெருக்கமாக பழகிய தனுஷும், சிவகார்த்திகேயனும் தற்போது பிரிந்துவிட்டனர். வளர்த்து விட்ட ஏணியை எட்டி உதைக்கவில்லை இன்னும் மதிக்கிறேன் என்கிறார் சிவா.

தனுஷ் 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ஹிட்டானபோது நடந்த நிகழ்ச்சியில் தனுஷ் சிவகார்த்திகேயனை பற்றி கூறியது தற்போது மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது.

சிவா 

விழாவில் பேசிய தனுஷ் கூறியதாவது, இங்கிருந்து அவ்வளவு ஈஸியாக துரத்திடாதீங்க. சிவா, அவ்வளவு ஈஸியாக என் இடத்தை கொடுக்க மாட்டேன். இந்த இடத்திற்கு வர ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன். சின்ன இடம் எனக்கென்று இருக்கிறது. சுமாரான நடிகரா. இன்னும் 10 வருஷன் கழிச்சு எடுத்துக்கோங்க என்றார்.

வளர்ச்சி 

தன்னுடைய இடத்தை சிவாவுக்கு கொடுக்க மாட்டேன் என்றார் தனுஷ். சிவா தற்போது தனுஷுக்கு நிகராக வளர்ந்து நிற்கிறார். ஒரு ஸ்டார் பிறந்துவிட்டார் என ரஜினியே சிவாவை வாழ்த்தியுள்ளார்.

மேலும் வாசிக்க…

சென்னையில் தனுஷ் அலுவலகம் முற்றுகை பரபரப்பு தகவல்கள்..!!

11:47 PM |
தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை படங்கள் நடிக்க இருக்கிறார் தனுஷ். இவரது ரசிகர்களுக்கு இந்த அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் தனுஷின் ரசிகர்கள் அண்மையில் அவரது ஆபிஸை முற்றுகையிட்டு போராடியிருக்கின்றனர்.

காரணம் என்னவென்றால், கடந்த சில மாதங்களாக தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர் பொறுப்போடு செயல்படாமல் வெளிநாடு சென்றுவிட்டாராம்.

இதனால் வேறொரு தலைவரை தேர்ந்தெடுக்க தனுஷிடம் ரசிகர்கள் கேட்டுக் கொண்டனராம். இதனால் தனுஷும் சிலரை மட்டும் வர சொல்ல, மொத்த ரசிகர் கூட்டமே ஆபிஸில் ஆஜரனாதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்டம் எதற்காக கூடினார்களோ? அதை செய்தார்களா என்று தகவல் தெரியவில்லை.
மேலும் வாசிக்க…

நடிகர் அஜித்குமாரை கண்டித்த தமிழக முதல்வர் பரபரப்பு தகவல்கள்..!!

10:30 PM |
முன்னாள் நடிகையும், தமிழக முதல்வருமான மாண்புமிகு. செல்வி.ஜெ.ஜெயலலிதா கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரைப்பற்றி பல வதந்திகள் வெளிவருகின்றன. அதில் ஜெயலலிதா தரப்பு அஜித்தை சந்திக்க விரும்பியதாகவும் கூறப்பட்டதும் ஒன்று.

இந்நிலையில் அஜித்தையும், ஷாலினியையும் ஒருவிழாவில் முதல்வர் சந்தித்த போது, அஜித்திடம் சண்டைகாட்சிகளிலும், பைக், கார் ரேசிலும் அதிக ரிஸ்க் எடுக்கிறீர்கள், உங்களை நம்பி குடும்பம் இருக்கிறது. எனவே கவனமாக இருக்கவேண்டும் என கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

ஜோடியாக சுற்றுகிறார்கள் பிரபுதேவா–தமன்னா திடீர் நெருக்கம் காதலிப்பதாக பரபரப்பு..!!

11:21 PM |
பிரபுதேவாவுக்கும், தமன்னாவுக்கும் இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் படவுலகில் பரபரப்பு தகவல் பரவி உள்ளது.

ஜோடி
தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பிரபுதேவா தமிழ் மற்றும் இந்தி படங்களை டைரக்டு செய்து வந்தார்.

இருவரும் தமிழ், இந்தியில் தயாரான ‘தேவி’ படத்தில் ஜோடியாக நடித்தனர். இதில் பிரபுதேவாவின் நடனம் தன்னை மிகவும் கவர்ந்ததாக தமன்னா பேசி வந்தார். தமன்னாவும் திறமையாக நடனம் ஆடுகிறார் என்று பிரபுதேவா புகழ்ந்தார்.

இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டார்கள்.

தமன்னா இதற்கு முன்பு தான் நடித்த படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு வருவது இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர். இதற்காக அவர் மீது சினிமா சங்கங்களில் புகார்களும் அளிக்கப்பட்டு உள்ளன. ஆனால் தேவி பட நிகழ்ச்சிகளில் மட்டும் தவறாமல் கலந்து கொண்டார்.

நெருக்கம்
பிரபுதேவாவுக்கும் தமன்னாவுக்கும் படப்பிடிப்பின்போது நெருக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால்தான் இருவரும் பட விழாக்களில் ஜோடியாக சுற்றுகிறார்கள் என்றும் பட உலகினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இருவரும் காதலிக்கிறார்கள் என்று தெலுங்கு டைரக்டர் ஒருவர் உறுதிப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபுதேவா ஏற்கனவே நயன்தாராவை காதலித்து தோல்வி அடைந்தவர். இருவரும் திருமணம் வரை நெருங்கினார்கள். இதற்காக நயன்தாரா மதம் மாறவும் செய்தார். பிரபுதேவாவும் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டார்கள்.

பிரபுதேவாவுக்கு தற்போது 43 வயது ஆகிறது. இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை வற்புறுத்தி வருகிறார்கள்.

தமன்னாவையும் இதுவரை எந்த நடிகருடனும் இணைத்து கிசுகிசுக்கள் வரவில்லை. பிரபுதேவாவிடம் அவர் மனதை பறிகொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் ரகசிய காதல் விவகாரம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று பேசப்படுகிறது.
மேலும் வாசிக்க…

ஆணுறை விளம்பரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய பிரபல தமிழ் நடிகை ! அதிர்ச்சி வீடியோ

10:33 PM |
மேலும் வாசிக்க…

கபாலி தோல்வி படம் வைரமுத்து பேச்சால் பரபரப்பு..!!

3:52 AM |
ரஜினி நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி, திரையரங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கபாலி’. இப்படம் வசூலில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருவதாக கூறப்பட்டுவரும் வேளையில், ‘கபாலி’ ஒரு தோல்வி படம் என்று வைரமுத்து பேசிய பேச்சு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாகி வருகிறது.

வைரமுத்து சமீபத்தில் பங்கேற்ற ஒரு விழாவில், நான் புரிந்துகொள்கிறேன் ஒவ்வொருவரையும் என்று ஆரம்பித்து, அரசியலை, விஞ்ஞானத்தை என்று ஒவ்வொன்றாக பட்டியலிட்டுக் கொண்டே வருகிறார். இறுதியில், ‘கபாலி’ தோல்வியையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்று பேசுகிறார்.

பல கோடிகளை வசூல் செய்துவிட்டதாக கூறப்படும் ‘கபாலி’ படத்தை வைரமுத்து தோல்வி படம் என்று கூறும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

வைரமுத்துவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்தை வெளியிட்டு வருகின்றனர். அதில், ஒருதரப்பினர் வழக்கமாக ரஜினி படங்களுக்கு பாட்டு எழுதும் வைரமுத்து, ‘கபாலி’ படத்திற்கு ஒரு பாட்டுகூட எழுதவில்லை. தனக்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால்தான் வைரமுத்து இப்படி பேசியுள்ளார் என்று கூறுகின்றனர்.

வீடியோவை பார்க்க....
 
மேலும் வாசிக்க…

ஐஸ்வர்யாராயை முற்றுகையிட்ட ரசிகர்கள் - மகளுக்கு அடி..!!

3:40 AM |
நடிகை ஐஸ்வர்யாராய் தனது மகள் ஆராத்யா, தாய் விருந்தா ராய் ஆகியோருடன் ஓய்வுக்காக லண்டன் சென்று இருந்தார். அங்கு சில வாரங்கள் தங்கி இருந்து விட்டு இந்தியா திரும்பினார். ஐஸ்வர்யாராய் விமான நிலையத்துக்கு வரும்போதெல்லாம் அவரை காண ரசிகர்கள் திரள்வது உண்டு. விமானநிலையத்தில் காத்திருக்கும் இதர பயணிகளும் அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் கேட்டு நச்சரிப்பார்கள்.

இதனால் அவரது பாதுகாப்புக்காக விமான நிலையத்தில் ‘பாடிகார்ட்’களை நிறுத்தி வைப்பார்கள். இதுபோல் லண்டனில் இருந்த வந்த ஐஸ்வர்யாராயின் பாதுகாப்புக்காக ‘பாடிகார்ட்’கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் மும்பை விமான நிலையத்தில் தயாராக நின்று கொண்டு இருந்தனர். ஐஸ்வர்யாராய் விமானத்தில் இருந்து இறங்கி வந்ததும் ‘பாடிகார்ட்’கள் சூழ்ந்து கொண்டு காரை நோக்கி அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

ஐஸ்வர்யாராயை பார்த்ததும் ரசிகர்களும் பயணிகளும் ஓடோடி வந்து அவரை முற்றுகையிட்டனர். போட்டோகிராபர்களும் சூழ்ந்து கொண்டு போட்டோ எடுத்தார்கள். காருக்கு அருகில் சென்றதும் பாதுகாவலர்கள், ரசிகர்களையும் போட்டோகிராபர்களையும் தள்ளி விட்டனர். இதில் ஒருவர் தடுமாறி ஐஸ்வர்யாராயின் தாய் விருந்தாராய் மீது விழுந்தார். இதனால் விருந்தாராய் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு அடிபட்டு அலறினார்.

மகள் ஆராத்யாவை காரின் பின்சீட்டில் உட்கார வைத்துக் கொண்டு இருந்த ஐஸ்வர்யாராய் தாயின் அலறல் கேட்டு திரும்பி பார்த்தார். கீழே அவர் விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியாகி அருகில் செல்வதற்காக கார் கதவை சாத்தினார். அந்த கதவு மகளின் தலையில் அடித்து வலியால் அந்த குழந்தை ஓ வென்று கத்தி அழுதது. தாய், குழந்தை இருவரையும் மாறி மாறி பார்த்து சில நொடிகள் தடுமாறிய அவர் பின்னர் குழந்தையின் தலையை தேய்த்து விட்டுக் கொண்டு பின்னால் திரும்பி என் அம்மாவை தள்ளி விட்டது யார் என்று ஆவேசமாக கத்தினார்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஐஸ்வர்யாராய் கோபத்தை பார்த்து அதிர்ச்சியான கூட்டத்தினர் அங்கிருந்து விலகி சென்றனர். பாதுகாவலர்கள் அவரது தாயை தூக்கி விட்டனர். தாயை அழைத்துக் கொண்டு ஐஸ்வர்யாராய் மின்னல் வேகத்தில் காரில் ஏறி சென்று விட்டார்.
மேலும் வாசிக்க…

ஸ்ரேயாவிற்கு நடந்த திருமணம் கோலிவுட்டில் பரபரப்பு..!!

1:22 AM |
சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரேயா. இவர் பின் மார்க்கெட் இழந்து தமிழ் படங்களில் நடிப்பதையே முற்றிலுமாக நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் மீண்டும் தன் இரண்டாவது இன்னிங்ஸை சிம்பு நடிக்கும் AAA படத்தின் மூலம் தொடங்கிவுள்ளார்.

இந்த படத்தில் இவருக்கும் சிம்புவிற்கும் திருமணம் நடப்பது போல் ஒரு காட்சி உள்ளது.

ஸ்ரேயா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் நேற்று வெளிவர, சமூக வலைத்தளங்களில் இவருக்கு உண்மையாகவே திருமணமாகிவிட்டது என்பது போல் கருத்துக்கள் கூறி வந்தனர், பின் அது படத்திற்கான ஷுட்டிங் என்பது தெரிய வந்தது.
மேலும் வாசிக்க…

பரபரப்பை கிளப்பும் விஷால்-வரலட்சுமி ஃபோட்டோ..!!

12:56 AM |
விஷால், வரலட்சுமி இருவரும் நீண்ட நாளாகவே நட்புடன் பழகிவருகிறார்கள். இருவரையும் சேர்த்து பல கிசுகிசுக்கள் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில் விஷால் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷால் தன்னுடைய ட்விட்டர் கணக்கில், வரலட்சுமியுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபி ஒன்றை வெளியிட்டு, “இந்தப் புகைப்படம் எல்லாமே சொல்லும்” என்று ட்விட்டியிருக்கிறார். இந்தப் புகைப்படத்தையும், ட்விட்டையும் பார்த்த சக நடிகர்களும், ரசிகர்களும் விஷால், வரலட்சுமியை திருமணம் செய்யப்போகிறார் என்று நினைத்து வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இதற்கு விஷால் தரப்பிலிருந்தோ, வரலட்சுமி தரப்பிலிருந்தோ எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை. தவிர, என்னுடைய வாழ்வில் ஒரு லட்சுமி இருக்கிறார் என்று முன்னர் விழா ஒன்றில் விஷால் பேசியதும் நினைவுக்கூரத்தக்கது.

விஷால், வரலட்சுமி நடிப்பில் சுந்தர்.சி இயக்கிய “மதகஜராஜா” வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு, ரிலீஸூக்கு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 


மேலும் வாசிக்க…

பெற்றோர்கள் சம்மதத்துடன் இளம் நடிகருடன் விரைவில் திருமணம் நடிகை சமந்தா பரபரப்பு பேட்டி..!!

10:28 PM |
இளம் கதாநாயகனை காதலிக்கிறேன். பெற்றோர்கள் சம்மதத்துடன் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை சமந்தா கூறினார்.

பேட்டி

நடிகை சமந்தா ஐதராபாத்தில் இதுகுறித்து அளித்த பரபரப்பு பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:- யாராவது வந்து உங்களை காதலிக்கிறேன் என்றால் என்ன சொல்வீர்கள்?

பதில்:- காதல் மனநிலையில் இருந்து மாறி திருமணம், குழந்தை என்ற நிலைக்கு வந்துவிட்டேன். இப்போது என் முழு கவனமும் நடிப்பில்தான். சினிமாவிலேயே மூழ்கி விட்டேன்.

இளம் நடிகருடன் காதல்

கேள்வி:- திருமண தேதியை முடிவு செய்து விட்டீர்களா?

பதில்:- அது இன்னும் இல்லை. ஆனால் திருமணத்துக்கு தயாராகி விட்டேன்.

கேள்வி:- ஒரு இளம் கதாநாயகனை நீங்கள் காதலிப்பதாக ‘கிசுகிசு’க்கள் வந்துள்ளதே? உண்மையா?

பதில்:- உண்மைதான். எனக்கு காதல் வந்து இருக்கிறது. அவரை திருமணம் செய்து குடும்பம், குழந்தை என்று வாழ விரும்புகிறேன்.

திருமண தேதி

கேள்வி:- உங்கள் வாழ்க்கையில் வந்த அந்த நிஜ கதாநாயகன் யார்? அவரை உங்களுக்கு பிடித்துப்போக என்ன காரணம்?

பதில்:- அவர் யார் என்பதை இப்போது சொல்லமாட்டேன். திருமண தேதியை அறிவிக்கும்போது சொல்வேன். எனக்கு அவரை பல வருடங்களாக தெரியும். நான் விளையாட்டுப் பிள்ளைமாதிரி இருப்பேன். எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுவேன். கோபம் வந்தாலும், சந்தோஷப்பட்டாலும் அதன் எல்லைக்கே போவேன். எப்படி பேச வேண்டும். யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் தெரியாது.

ஆனால் நான் காதலிப்பவர் அதற்கு நேர்மாறானவர். அவர் எதையும் யோசித்தே பேசுவார். தீர்க்கமான முடிவுகளை எடுப்பார். மிகவும் பொறுமைசாலி. எனக்கு தேவையான விஷயங்கள் இவைதான்.

கேள்வி:- திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி விடுவீர்களா?

பதில்:- சினிமாவை விட்டு விலக மாட்டேன். என் வயதுக்கு ஏற்ற மாதிரி கதாபாத்திரங்களில் நடிப்பேன். எனது குடும்ப கவுரவத்தை காப்பாற்றுகிற மாதிரியான வேடங்களை மட்டுமே செய்வேன். நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் கூட திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்கலாம் என்று அனுமதி அளித்து இருக்கிறார்.

பெற்றோர்கள் சம்மதம்

கேள்வி:- உங்கள் காதல் திருமணத்துக்கு பெற்றோரிடம் சம்மதம் கிடைத்து விட்டதா?

பதில்:- எங்கள் திருமணத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. சுமுகமாக நடக்கும். பெற்றோர்கள் சம்மதம் சொல்லி விட்டனர்.

கேள்வி:- நீங்கள் சமூக சேவை பணிகளுக்காக நிறைய பணத்தை செலவிடுகிறீர்களே? அவர் எப்படி?

பதில்:- அவருக்கும் சமூக சேவைகளில் ஈடுபாடு உண்டு. என்னைப்போல் உதவி செய்யும் மனப்பான்மை இருக்கிறது. எனது சமூக சேவை பணிகளை அவர் உற்சாகப்படுத்துகிறார்.

இல்லாதவர்களுக்கு உதவும் சேவை குணம் அவருக்கு இல்லாமல் இருந்து இருந்தால், நான் காதலித்து இருக்கமாட்டேன். எனக்கு சமைக்க தெரியாது. ஆனால் அவர் நன்றாக சமைப்பார். அசைவ உணவுகளையும் ருசியாக சமைப்பார். எனவே நான் விரைவில் சமையல் கற்றுக்கொள்ள இருக்கிறேன்.

இவ்வாறு சமந்தா கூறினார்.
மேலும் வாசிக்க…

நடிகை பிரதியுஷாவின் காதலன் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது..!!

2:13 AM |
மும்பையை சேர்ந்த டி.வி நடிகை பிரதியுஷா(வயது24). இந்தி தொடர்களில் நடித்து பிரபலமான இவர் கடந்த 1-ந் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலன் ராகுலுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனவே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

சென்ற 3-ந் தேதி போலீசார் விசாரித்து கொண்டிருந்த போது, ராகுலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே, பிரதியுஷாவின் தாய் சோமா பானர்ஜி கொடுத்த புகாரின் பேரில் பங்கூர் போலீசார் ராகுல் சிங் மீது பிரதியுஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராகுல்சிங்கை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

அதன்பின்னர் ஆஸ்பத்திரிக்கு வந்த அவர் திடீரென ஆஸ்பத்திரி குளியலறை கதவை பூட்டிக் கொண்டார். அதன்பின்னர் அவர் வெகுநேரமாக வெளியே வரவில்லை. இதுபற்றி அவரது உறவினர்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் குளியலறை கதவை தட்டி வெளியே வரும்படி அழைத்தனர்.

அப்போது அவர் குளியலறை வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார். இதை கேட்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு பரபரப்பும் ஏற்பட்டது. மேலும் எந்த வித விபரீத முடிவும் எடுத்துவிடாதபடிக்கு அவருக்கு வெளியே இருந்தபடியே ஆலோசனை வழங்கி சமாதானம் செய்தனர். இதன்பின்னர் அவர் கதவை திறந்து வெளியே வந்தார்.

பின்னர் அவருக்கு டாக்டர்கள் உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கி நேற்று முன்தினம் அவரை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com