தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர் தாணு. இவர் தயாரிப்பில் அண்மையில் ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறி போன்ற படங்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தயாரிப்பாளர் தாணு மீது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் டேவிட் என்பவர் 2 லட்சம் கடனை திருப்பி தரக்கோரி நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு தொடர்பாக நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டும் தாணு பணத்தை திருப்பி தராததால் சென்னை நீதிமன்றத்தில் டேவிட் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் வரும் 28ம் தேதிக்குள் தாணுவை கைது செய்ய போலீசுக்கு நீதிபதி கணேசன் உத்தரவிட்டுள்ளார்.
Tags:
Cinema
,
அதிரடி
,
கபாலி
,
கைது
,
சினிமா
,
தாணு
,
தெறி
,
நீதிமன்றம்