இசையமைப்பாளர், பாடகர், நடிகர், என சினிமாவில் திறமை காட்டி வரும் ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்து சாதனை புரிந்து வருகிறார்.
கடவுள் இருக்கான் குமாரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் நானும் நிக்கி கல்ரானியும் ஒரே காரில் செல்லும் போது மற்றகார்களுடன் மோதும் சேசிங் காட்சிகள் இருந்தது. அப்போது எங்களை துரத்தி வரும் மற்றோரு கார் எதிர்பாராத விதமாக எங்கள் மீது மோத நாங்கள் சென்ற கார் உருண்டு விழுந்தது.
நல்லவேளை நாங்கள் இருவரும் உயிர் தப்பினோம் என அவர் கூறினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தாலும் சினிமாவில் நடிப்பதிலும் கஷ்டங்கள் உள்ளது என காட்டியுள்ளது.
Tags:
Cinema
,
உயிர்
,
கொடூர விபத்து
,
சினிமா
,
நிக்கி கல்ரானி
,
ஜி.வி.பிரகாஷ்