கள்ளக் கணவர்களிடம் மாட்டி பணம், பொருள், உயிர் அனைத்தையும் இழக்கும் பரிதாப நடிகைகள்..!!

10:46 PM |
திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வந்த நடிகை சபர்ணாவின் தற்கொலை தான் தற்போது திரையுலகிலும், சீரியல் உலகிலும் பரபரப்பாக பேசப்படுகிற ஒரு  விஷயமாக ..ஆபத்து நிறைந்த விஷயமாகவும்  இருக்கிறது.

என்ன காராணம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இது குறித்து சின்னத்திரை நடிகர் சங்கமும் கொஞ்ச சீரியஸாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மன அழுத்தம், பணப்பிரச்சனை, காதல் தோல்வி முக்கியமாக கல்யாணம் ஆன நடிகர்கள், தொழில் அதிபர் மகன்கள் அரசியல்வாரிசுகள் இவர்களின் வலைகளில் எளிதாக சிக்கி விடுகின்றனர்..!

அவர்கள் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி விடுகின்றனர்..! உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கோரும் ‘அந்த’ நேரத்து வார்த்தைகளை உண்மை என்றே நம்பி விடுகின்றனர்..!

எல்லாம் முடிந்து போனதும் அந்த அப்பாவி நடிகையை ஏமாற்றி ஒதுங்க ஆரம்பித்து விட நடிகைகள் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் செத்துப் போகும் முடிவிற்கு தள்ளப் படுகின்றனர்..!

பல்வேறு காரணங்களுக்காக இதற்கு முன்னர் பல நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சோபனா என்கிற அற்புதமான நடிகை அப்படி ஒருவரை நம்பி பணம் பொருள் எல்லாம் இழந்தவர் தான்..!

உயிராக நேசித்த ஒருவர் நடுத்தெருவில் நிறுத்தி விட்டதை அந்த அபலைப் பெண்ணால் தாங்க இயலவில்லை..! பரிதாபமாக இறந்து போனார்..!

ஏராளமான டிவி சீரியல்களிலும் ஐந்தாம் படை போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகர் சாய் பிரசாத்   இந்த ஆண்டு மார்ச் மாதம் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சீரியல் நடிகை வைஷ்ணவி கடந்த 2006ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் இறந்த இரண்டாவது நாளில் இவரது மறைவுக்கு காரணமான சீரியல் நடிகர் தேவ் ஆனந்த் கைது செய்யப்பட்டார்.

சரி தொடர்ந்து இப்படி பட்ட சோகங்கள் நடந்து கொண்டே இருக்க சங்கம் இவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதோ அல்லது அறிவுரைகள் சொல்லி திசை மாற்றவோ எந்த வித நடவடிக்கைகளும் இதுவரை எடுத்ததே இல்லை..!

பரிதாபம்..!
மேலும் வாசிக்க…

பெரும் விபத்திலிருந்து உயிர் தப்பிய ஜி.வி.பிரகாஷ்..!!

11:07 PM |
இசையமைப்பாளர், பாடகர், நடிகர், என சினிமாவில் திறமை காட்டி வரும் ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்து சாதனை புரிந்து வருகிறார்.

கடவுள் இருக்கான் குமாரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் நானும் நிக்கி கல்ரானியும் ஒரே காரில் செல்லும் போது மற்றகார்களுடன் மோதும் சேசிங் காட்சிகள் இருந்தது. அப்போது எங்களை துரத்தி வரும் மற்றோரு கார் எதிர்பாராத விதமாக எங்கள் மீது மோத நாங்கள் சென்ற கார் உருண்டு விழுந்தது.

நல்லவேளை நாங்கள் இருவரும் உயிர் தப்பினோம் என அவர் கூறினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தாலும் சினிமாவில் நடிப்பதிலும் கஷ்டங்கள் உள்ளது என காட்டியுள்ளது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com