தமிழில் சதிலீலாவதி, டூயட், பஞ்ச தந்திரம் போன்ற பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ரமேஷ் அரவிந்த். இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என தமிழ், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் பன்முகம் கொண்டு விளங்கி வருகிறார். மேலும் இவர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும் கூட.
இவருடைய தந்தை கடந்த 9-ம் தேதியன்று திடீரென மரணமடைந்தார். இதனால் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கும் ரமேஷ் அரவிந்த் டிவிட்டரில் தன்னுடைய தந்தையின் கடைசி ஆசையை தான் நிறைவேற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அது என்னவென்றால், இறந்தபின் தனது கண் மற்றும் உடலை தானம் செய்யவேண்டும் என அவர் விரும்பினாராம். அதன்படி அவருடைய கண் மற்றும் உடலை ரமேஷ் அரவிந்த் தற்போது தானம் செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
கமல்ஹாசன்
,
சினிமா
,
டூயட்
,
பஞ்ச தந்திரம்
,
பேரிழப்பு
,
ரமேஷ் அரவிந்