பால் நடிகை தன் கணவரான பிரபல இயக்குனரை விட்டு பிரிந்தது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்த பிரச்சனையில் புதியதாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் ஒல்லி நடிகரின் பெயர் அதிகமாக அடிபட்டது. இவரின் படத்தில் அதிகம் நடித்ததால் தான் இப்படி பிரச்சனை வந்தது என்று சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது இதே போல் பிரச்சனை பிரபல பாடகருக்கும் எழுந்துள்ளதாம். உலக புகழ்பெற்ற கேரளா பாடகரின் கடைசி பெயரை தளபதி நடிகரின் பெயருக்கு பின்னால் வைத்திருக்கும் அவர், ஒல்லி நடிகர் குடும்பத்துடன் அதிக நட்பிலிருக்கிறார். இவர், பாடுவது மட்டுமின்றி, சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.
பால் நடிகையின் பிரச்சனைக்கு பிறகு, ஒல்லி நடிகரின் படங்களில் தன் கணவர் நடிப்பது பாடகரின் மனைவிக்கு பிடிக்கவில்லையாம்.
இதனால் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக இருக்கிறார்களாம். எனவே மகன் மற்றும் மருமகளை சமாதானப்படுத்த அந்த கேரளா பாடகர் தீவிர முயற்சி செய்து அது முடியாமல் போக ஆண்டவனே நீ தான் அவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்றும் கோவில் கோவிலாக சுற்றுகிறாராம்.
Tags:
Cinema
,
ஒல்லி நடிகர்
,
கருத்து வேறுபாடு
,
சினிமா
,
பால் நடிகை
,
பிரபல பாடகர்