இந்தியாவின் மிக பிரமாண்டமான திரைப்படமான 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் சூப்பர் ஹிட் ஆனது.
விரைவில் இந்த படம் சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார். முதல் பாதியின்போதே இரண்டாம் பாகத்துக்கு தேவையான பல முக்கிய காட்சிகளை எடுத்து முடித்துவிட்ட இயக்குனர், தற்போது மீதியுள்ள படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ராணா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள 'பாகுபலி 2' படத்தின் ரிலீஸ் தேதி வரும் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 14 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற மர்மத்தை தெரிந்து கொள்ள இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Baahubali 2
,
baahubali 2 movie release date
,
பாகுபலி 2
,
பாகுபலி 2 விமர்சனம்